துறவறவியல் (Ascetic life)
பரிமேலழகர், இவ்வியலைப்பற்றி
கூறும்போது, இது “இல்லறத்தில் வழுவாது ஒழுகி அறிவுடையராய்ப் பிறப்பினை அஞ்சி வீடுபேற்றின்
பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம்” என்பார். மேலும் இதை வள்ளுவர் இருவகையாகப்
பிரிப்பதாகக் கூறுவார். அவ்வகையாவன: (1) அந்தகரணங்கள் தூய்மை அடைய காக்கப்படும் விரதங்கள்
(2) தூய வழியால் அடையப்படும் ஞானம்.
விரதங்களுள் இன்ன அறஞ் செய்தல்
என்றொரு வழியும், இன்ன மறஞ்செய்யாதொழிதல் என்னும் பிறிதொரு வழியும் காட்டப்படுகின்றன.
இங்கு காட்டப்படும் துறவறம் வடமொழி நூலார் காட்டும் வானப்ரஸ்தம் போன்றதாக உள்ளது. இது
இல்லறத்தை இசைபட இனிது நடத்தியபின் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.
25: அருளுடமை (Being Kind)
[This first chapter in renouncing segment of
the 1st of 3 sections. Here he talks about unattached kindness
toward all living beings. Just like loving for family segment, here the
compassion and kindness are said for the renounced ones. Ascetic life should
never be out of hatred for family life or for the society. It is a natural
progression after a successful family life. For that life, the first and
foremost is “being kind”.]
18th December, 2012
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
(குறள் 241: அருளுடமை அதிகாரம்)
Transliteration:
aruTselvam selvaththuL selvam poruTselvam
pUriAr kaNNun uLa
aruT selvam – The wealth that kindness is
selvaththuL selvam – among all other forms of wealth better wealth
poruT selvam – The material wealth (there is an implied
“after all” )
pUriAr kaNNun – Even with lowly people
uLa – is there
The kindess that feels
soft in heart to help the despondent people is the best among all forms of
wealth. There may be a question as to why this is such a precious wealth. After
all material wealth is with even very lowly people that don’t have no good
traits. But the wealth of kindness is only with people of elevated stature.
In a different chapter
on listening for learning, he has used
the same phrase “selvaththuL selvam” to say that the wealth of listening is
better than all wealth.
“Kindness is the best of all wealths; after all
Material wealth can be even with lowly souls”
தமிழிலே:
அருட் செல்வம் - அருளுடைமையாகிய (கருணை)
செல்வமானது
செல்வத்துள் செல்வம் - எல்லா செல்வங்களிலும் சிறந்த செல்வம்
பொருட் செல்வம் - உலகத்தில் வசதிக்கான
பணம், பொருளாகிய செல்வம் (ஏனெனில்)
பூரியார் கண்ணும் - இழிந்தவர்களிடமும்
உள - இருக்கும்
உயர்ந்தவர்களிடத்தில் உள்ள
கருணயாகிய பிறர்க்கு அருளும் நெஞ்சமானது, கிடைக்கரும் செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வமாகும்.
எப்படி வசதிகளைத்தரக்கூடிய பணம், பொருள் முதலிய செல்வங்களை விட்டு இதைச் செல்வமென சொல்லலாம்
என்ற கேள்விக்காக, வள்ளுவர் கூறும் பதில் இது: பொருட்செல்வமானது, இழிந்தவர்களிடமும்
இருக்கும், ஆதலின் அதனை அருஞ்செல்வமாகக் கொள்ளமுடியாது. ஆனால் அருட் செல்வமோ உயர்ந்தவர்களிடம்
மட்டும்தான் இருக்கும்.
“அருளுடைமையாவது யாதாவது
ஓர் உயிர் இடர்படுமிடத்துத் தன் உயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரம் உடைமை” இளம்பூரணர்
எழுதிய தொல்காப்பிய உரையில்.
“செல்வத்துட் செல்வம்” என்று
செவிச் செல்வத்தையும் கூட வள்ளுவர் சொல்லியிருப்பதையும் இங்கு நினவுகூற வேண்டும்.
இன்றைய குறளை இருவிதமாக எழுதியுள்ளேன்.
ஒன்றைக் கூற்றாகவும், மற்றொன்றை வினாவாகவும்.
இன்றெனது குறள்(கள்):
அருஞ்செல்வம் நல்லருட் செல்வம்
இழிந்தோர்
பொருட்செல்வ ராயிருப்பி னும்
arunjselvam nallaruT selvam izhindOr
poruTselva rAyiruppanum
அருளன்றி நற்பெருஞ் செல்வமுண்டோ?
கேடர்
பொருட்செல்வ ராயிருப்பி னும்
aruLanRi naRperunj selvamuNDO? kEDar
poruTselva Rayiruppinum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam