16th December, 2012
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
(குறள் 239: புகழ் அதிகாரம்)
Transliteration:
vasaiyilA vaNpayan kunRum isaiyilA
yAkkai poRuththa nilam
vasaiyilA - Blamelss
vaNpayan – bountiful crops
kunRum – will diminish
isaiyilA – Repuationaless/without fame
yAkkai – human beings
poRuththa – that which tolerates (earth)
nilam – earth,
A land
that gives bountiful of crops, without deficiency and blamelessly, will
diminish in its capacity, when the people that dwell on it do not do deeds that
bring them respect, fame and reputation. The implied meaning is that those who
are devoid of fame, reputation etc., are blameful and hence are sinful; and
hence forever patient land will also lose its capcity to be munificent because
it bears the sinful on it.
Why so? It
is so because, those who are in bad company, even with their prior good
demeanor, will change and become bad eventually.
“A bountiful land will lose its capacity to be
munificent
When it
bears the people on no renown, and irreverent”
தமிழிலே:
வசையிலா - பழியில்லாத
வண்பயன் - வளமான பயன் (விளைச்சல்)
குன்றும் - குறைந்து தேயும்
இசையிலா - புகழில்லாத
யாக்கை - மனிதர்களில் உடலங்களை
பொறுத்த - பொறுமையாக தாங்கும்
நிலம் - பூமிக்கு
ஒரு குறைவும் இல்லாமல் நல்ல விளச்சலைத் தருகின்ற நிலங்கூட, தன்னுடைய வழங்கும்
தன்மையில் குறைவுறும். எப்போது? புகழுக்கு ஏதுவான செயல்களைச் செய்யாத மனித உடல்களைத்
தன்மீது பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும் போது. இதன்
உள்ளுரை கருத்து, புகழில்லாதவர்கள் இகழுக்கு உரியவர்கள், அதனால் பாவங்களைச் சுமப்பவர்கள்,
அவர்களைத் தாங்குவதால், பொறுமையெனும் நற்குணமே கொண்டிருந்தாலும், நிலமானது தன்னுடைய
வண்மையிலிருந்து குறைவுறும்.
இது எப்படி? பண்பில்லாரோடு சேரும் பண்புள்ளவர்கள் தங்களின்
பண்புகளிலு குறைவுறுதல் போல.
இன்றெனது குறள்:
புகழிலாரைத் தாங்குகின்ற பூமியது
குன்றும்
இகழில் வளப்பத் திலே
pugazhilAraith thAnguginRa bhUmiyadhu kunRum
igazhil vaLAppath thilE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam