15th December, 2012
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(குறள் 238: புகழ் அதிகாரம்)
Transliteration:
Vasaiyenba vaiyaththArk kellAm isaiyennum
Eccham peRAa viDin
Vasaiyenba – “disdain”, will say people
vaiyaththArkk(u) ellAm – for all those in
this world (who)
isaiyennum – the name of reputation or eminence
Eccham – as the left over after their demise
peRAaviDin – if have not attained during the
living years.
Those who don’t leave their reputation as the
remnants of their living years will only be scorned. Though the word “pugazh”
means “fame”, we can interpret that as reputation here. It simply means that the person referred here did live with respect and
reputation after leaving the mortal coil.
The first part of this verse has nothing to dispute. But to say that
people that did not live reputably or not remembered because of lack of reputation
will be scorned, is unacceptable thought. The arugument that was presented in
the previous verse holds good here too. Parimelazhagar adds that good people
will hold in contempt the people of no reputation or blame them – which seems
totally unacceptable. Good people, if they are truly so, will not blame others
for anything. They will simply ignore such behavior, if they are not able to
correct.
“Scorn will be for those people
of the world
that leave no reputation of
respect to hold”
தமிழிலே:
வசையென்ப - பழி என்பர் (நல்லோர்)
வையத்தார்க்(கு) எல்லாம் - உலகத்தில் உள்ளோரெல்லோருக்கும்
இசையென்னும் - புகழாகிய (செல்வத்தை)
எச்சம் - தான் வாழ்ந்து முடிந்த நாட்களுக்குப் பிறகு விட்டுச் செல்வது (எஞ்சியிருப்பதாக)
பெறாஅவிடின் - பெறமுடியாவிடின் (அதாவது
புகழுக்குக் காரணமான செயல்களை வாழ்நாளிலி செய்திராவிட்டால்)
தனது புகழை தனது எச்சமாக விட்டுச்செல்லாவிட்டால் உலகத்தோருக்கு
பழியே என்பர். இக்குறளில் “தனது புகழ்”என்பதைவிட, “தன்னுடைய பெருமதிப்பை”, அல்லது “இவர்
சிறப்பாக வாழ்ந்தார் என்னும் பெயரை” என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
முதற்பகுதியைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அவ்வாறு
தம்முடைய மதிப்பை விட்டுச்செல்லாதாவர்களுக்கு பழி என்பது ஒவ்வாத கருத்து. முன்சொன்ன
குறளில் கையாண்ட தருக்கக்காரணம்தான் இதற்கும். பரிமேலழகர் நல்லோர் அவ்வாறு கூறுவது
முற்றிலுமே சரியில்லை. நல்லோர் மற்றோரைப் பழிகூறார். துட்டராய் இருந்தாலும் தூற்றாது
விடுபவர்கள் நல்லோர்கள். அவர்கள் ஏன் பிறரைப் பழி சொல்லப்போகிறார்கள்.
இன்றெனது குறள்:
வாழ்ந்தபின் வாழ்புகழ்
இல்லாத மாந்தருக்கு
பாழ்போலே சேரும் பழி
vAzhndhapin vAzpugaz illAdha mAndharukku
pAzhpOlE sErum pazhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam