டிசம்பர் 14, 2012

குறளின் குரல் - 246


14th December, 2012

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
               (குறள் 237: புகழ் அதிகாரம்)

Transliteration:
Pugazhpada vAzhAdhAr thannOvAr thammai
igazhvArai nOvadhu evan?

Pugazhpada – towards attaining fame
vAzhAdhAr – that who do not work towards (fame)
thannOvAr – without blaming themselves for their sorry plight
thammai igazhvArai – those who despise or look down upon them
nOvadhu evan? – why blame them?

Those who don’t have, or strive for fame should blame themselves for not working towards fame.  What use is it to blame others that despise or look down up on them?

This verse seems to be a continuing theme from previous verses and implies that attaining fame is the foremost of duty for every humanbeing. After all there are people that don’t really, genuinely aspire or care for fame. For such people, when others look down up on them for not desiring something they don’t really want, won’t it feel bad? If the same had been written in the context of wrong doers, then it would have made sense.

Unfortunately, all commentators have done only a direct interpretation for this verse without looking into the applicability of context. It seems like a blind acceptance of what vaLLuvar has said without evening raising a question on this. Even this verse seems to be a “chapter” filler rather than being something substantive.

“What use is it to blame others that despise?
 If a person does not live with prominence!”

தமிழிலே:
புகழ்பட - தமக்குப் புகழ் உண்டாகும் படி
வாழாதார் - வாழ்த்தெரியாத, முடியாதவர்கள்
தந்நோவார் - தம்மையே நொந்து கொள்ளவேண்டுமே அன்றி
தம்மை இகழ்வாரை - தன்னைத் இகழ்ந்து, தூற்றுவாரை
நோவது எவன் - ஏன் நொந்துகொள்ளவேண்டும்?

தாம் புகழோடு வாழாதவர்கள், அதாவது அவ்வாறு வாழத் தகுதியினை வளர்த்துக்கொள்ளாதவர்கள், அத்தகுதியினை வளர்த்துக்கொள்ளாமைக்கு தம்மையே நொந்துகொள்ள வேண்டுமே அன்றி, அவ்வாறு வாழாமைக்கு மற்றவர்கள் இகழ்கிறார்களே என்று இகழ்பவர்களை ஏன் நொந்துகொள்ள வேண்டும்?

முந்தைய குறள்களின் தொடர்ச்சி கருத்தாக, புகழடைவதுதான் ஒவ்வொரு மனித உயிருக்கும் தலையாய கடமை என்பதை ஒட்டி சொல்லப்பட்ட கருத்து. புகழுக்கு ஆசைபடாதவர்களும் இவ்வுலகில் உண்டு. புகழில்லையென்று வருத்தப்படாமலும் அவர்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் இவர் புகழபட வாழவில்லையென்று இகழ்ந்தால் வருத்தம் வராமல் இருக்குமா? இந்தகருத்தை தவறு செய்பவர்களினைப்பற்றி சொல்லியிருந்தால் பொருந்தி வந்திருக்கும். உரையாசிரியர்கள் எல்லோரும், இதற்கு சொல்லப்பட்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு மாறுதலுக்காகக் கூட இக்குறளின் தேவையினைப் பற்றி கேள்விகூட எழுப்பவில்லை.

இக்குறளும் ஒரு அதிகார நிரப்பியே தவிர சாரமாகக் கருத்து சொல்லுவதாகத் தெரியவில்லை.

இன்றெனது குறள்:
தம்மையே நோவதன்றி தூற்றுவாரை நோவதென்?தாம்
தம்புகழைச் சேர்க்கா தவர்

thammaitE nOvadhanri thURRuvArai nOvadhen?thAm
thampugazhaich chErkkA dhavar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...