13th December, 2012
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(குறள் 236: புகழ் அதிகாரம்)
Transliteration:
thOnRin pugazhODu thOndRuga agdhilAr
thOnRalin thOnRAmai nanRu
thOnRin - Before venturing into a profession
pugazhODu –
with the appropriate preparation that we will be successful
thOndRuga – one must enter the profession.
agdhilAr – If one is not that prepared
thOnRalin – better than venturing into that
profession
thOnRAmai – not venturing
nanRu – is better
Before entering a profession or deed, a person must learn the required
skills, a comprehensive knowledge and be sure that they earn fame through what
they venture into. If that’s not
possible, it is better not to venture as such.
Parimelazhagars’ commentary implies that character comes by birth.
Though it is genetically true to certain extent, upbringing, growing up
environment, self propelled efforts make a person what he or she is. He says, “
one must be born with the character to achieve fame; otherwise it is better to
be born as an animal than a human”. This statement looks laughable and is
definitely not acceptable.
In common day usage, there is saying that, “My husband also goes to
court”; for what is the question! The general thought is if you go to a place
it must be for a reason. If you’re born, you should strive to get fame in your
lifetime – is what is implied here.
Thought at the surface level, this verse seems to say something
meaningful, it is impossible in the real world that everybody gets fame in during
his/her lifetime. For a select few to get fame, a lot of sacrifies and hardwork
involved by many. Also, to say, if dees are just to get fame, that it self is
wrong. Also, onetime fame alone does not suffice. One must work hard through
lifetime to sustain the fame attained, which is not possible for everyone. To
say it is better that they are not born
is silly and an extremist thought that is one sided.
It is incomprehensible to see that this was the thought of vaLLuvar.
“To venture into deeds or
profession is to earn fame
Else it is better not to engage just as
another name”
தமிழிலே:
தோன்றின் - ஒரு தொழிலில் புகுமுன்
புகழொடு - அதில் நாம் புகழடைவது உறுதி என்னும் அறிவு வளப்பத்துடன்
தோன்றுக - அத் தொழிலில் புகுதல் வேண்டும்
அஃதிலார் - அத்தகு தகுதியினை வளர்த்துக்கொள்ளாதவர்
தோன்றலின் - அத்தொழிலில் நானும் புகப்போகிறேன்
தோன்றாமை - என்று அதில் புகாமை
நன்று - நன்றாகும்
ஒருவர் ஒரு தொழிலிலோ, செயலிலோ புகுவதற்குமுன், அதற்கான
திறனைக் கற்று, அறிவு வளப்பத்துடன், இத்தொழிலில், செயலில் நான் புகழை ஈட்டுவேன் என்கிற
உறுதியுடன் புகுதல் வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால், நானும் இத்தொழிலைச் செய்வேன் என்றிராமல்,
அத்தொழில், செயல் இவற்றில் புகாமல் இருப்பதே நன்றாகும்.
ஒருவர் பிறக்கும் போதே புகழோடு பிறத்தல் நடவாத செயல்,
அது இறைவனின் அவதாரமேயானாலும். ஒருவர் செய்யும் செயல்களே, அவரது பண்புகளே அவருக்குப்
புகழைத்தருவன. தோன்றுதல் என்பதைப் பிறத்தல்
எனக் கொள்ளாது, புகுதல் என்றே கொள்ளல் வேண்டும்.
பரிமேலழகர் உரையைப்படிக்கும் போது, குணம் பிறப்போடு
வருவதாகச் சொல்வது தெளிவாகிறது. ஓரளவுக்கே அது உண்மை. பிறப்பால் சில பண்புகள் இருந்தாலும்,
வளர்ப்பும், சூழ்நிலைகளும், தானாகக் கொள்ளுகிற முயற்சிகளுமே, ஒருவரை உருவாக்குகின்றன.
அவர் “புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இல்லாதார் மக்களாய் பிறத்தலின் விலங்காய்
பிறத்தல் நன்று” என்று சொல்லுவது ஏற்புடைத்தாக இல்லை. பொதுவான வழக்கிலிருக்கிறார்போல்,
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்கிற கதையாயிராமல் இருக்கவேண்டும்.
இக்குறளின் கருத்து சரியானதாகத் தோன்றினாலும், உலக
வழக்கிலே, எல்லோரும் புகழ் எய்துவது என்பது இயலாது. இகழில்லாமல் வாழ முயலமுடியும்.
ஒரு சிலர் புகழ்வடைவதற்கே பலருடைய தியாகங்களும், உழைப்புக் தேவைப்படும் போது, புகழுக்காகக்தான்
செயல்கள் என்றால் அதுவே தவறு. தவிரவும் புகழ்வடைவதை விடவும் அதை தக்க வைத்துக்கொள்ளுதல்
என்பதும் இன்றியமையாதது ஆகையால், அவ்வாறு இயலாதவர்கள் எல்லாம் தோன்றாமல் இருத்தல் நன்று
என்பது வள்ளுவர் சிந்தனையாக இருக்கும் என்பது நம்பமுடியவில்லை. இது ஒருபக்க வாதத்தின்
உச்சமாக, ஒப்புக்கொள்ளவியலாத ஒன்றாக உள்ளது.
இன்றெனது குறள்:
புகழுக்காய் புக்காதார்
புக்குதலின் புக்கா
வகலுதலே எக்காலும் நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam