12th December, 2012
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
(குறள் 235: புகழ் அதிகாரம்)
Transliteration:
Naththam pOl kEdum uLAdhAgum sAkkADum
Viththagark kallAl aRidhu
NaththampOl – Like wealth or prosperity (during the
times when a person lives)
kEdum – even loss of any kind ( as they strengthen
the resolve of erudite)
uLAdhAgum – Fame stays (even after the demise of
a person)
sAkkADum – even after passing away
Viththagarkk(u) allAl - for anyone other
than people of high erudition
aRidhu- – is not possible
When the
loss occurs they are considered prosperity and wealth by the men of erudition.
Likewise, for them even the death keep the fame alive. After somebody left the
mortal coil, their fame will sustain and live for ever. This is not possible for anyone other than
people of high erudition.
“There is
an poem of Auvayyar, which says, “keTTAlum
mEn makkaL mEn makkaLE –sangu suTTAlum veNmai tharum” – meaning, even if the people of high moral standing, stray
away from the path of goodness, still they are
Loss will be prosperity, dying, a living as the
fame stays;
For people of high erudition only this is a possible
face!
தமிழிலே:
நத்தம்போல் - ஆக்கம், செல்வம் போன்றதாகும் (வாழுங்காலேத்தே இருக்கும்
மனிதருக்கு)
கேடும் - கெடுதல்களும் (கேடு வரும் போது அறிஞர்களின் திண்மை
புடம் போடப்படுவதால், அதைச் செல்வமெனக் கொள்வர்)
உளதாகும் - இருப்பதாகும் (புகழுடம்புக்குப்
- இறந்தபின்னும் புகழைத் தருவது) புகழும்
சாக்காடும் - இறந்த பின்னும்
வித்தகர்க்(கு) அல்லால் - அறிஞர்கள் தவிர மற்றவர்களுக்கு
அரிது - எளிதில் வாய்ப்பதல்ல.
ஆக்கமும், செல்வமுமாகக் கொள்வர், வரக்கூடிய கெடுதல்களையும்;
இறத்தலும் புகழை இருக்கசெய்யக்கூடியதாம். இவை இரண்டும் யாருக்கு? கற்றறிந்த அறிஞர்களுக்கே! அல்லாதோர்க்கு கடினமே.
திரிகடுகப் பாடலொன்று,”மண்ணின்மேல்
வாழ்புகழ் நட்டானும்..சாவுடம்பெய்தினார்.” என்கிறது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்குசுட்டாலும் வெண்மைதரும்” என்னும் பாடல் வரிகளை நினைவுகூறலாம்.
இன்றெனது குறள்:
வறுமையிலும் மாண்பும்
இறந்தும் புகழும்
உறுவர் அறிஞர் களே
vaRumaiyilum mANbum
iRandhum pugazhum
uRuvar aRinjar gaLE
சிறிது மாற்றி கீழ்கண்டவாறும்
படிக்கலாம் (பொருள் ஒன்றுதான்)
வறுமையிலும் மாண்பும்
இறந்தும் புகழும்
உறுகிறவர் நல்லறிஞர்
தாம்
vaRumaiyilum mANbum
iRandhum pugazhum
uRugiRavar nallaRinjar thAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam