27th December, 2012
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து
(குறள்
250: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
valiyArmun thannai ninaikkadhan thannin
meliyArmEl sellu miDaththu
valiyArmun – Before before that are powerful (than self)
thannai – About self
ninaikka – if understand (how weak and meek the self
is)
thAn thannin – a
person, weaker than self
meliyArmEl – over other people that are less powerful
sellum iDaththu – trying to use the power and act mighty
VaLLuvar completes this chapter, establishing another compelling reason for being compassionate and kind to others, based on two well-known statements.
“For everyman on earth, there is always another more superior to him, is the translation popular saying, “vallavanukku vallavan vaiyagathilE uNDu”. If you go by the above saying, it leads to the power supreme, omnipotent Godhead being the ultimate power. Those who are not kind will at least have to submit to God.
Another saying “eLiyArai valiyAr aDiththAl valiyArai dheivam aDikkum”, translated roughly to “For every action there is an equal and opposite reaction.”, means the same. It would sound better if the sentence read like this: “if mighty is kind towards others, God will be kind toward such mighty”.
The verse says thus “ When a person of might shows off his power to control the weaklings, he must stop to think that there might people that are mightier than him and how it would feel when he is subjugated by a person of might superior.
“With power and strength, when not kind to others inferior
Must know, there could others be than self, that’re superior”
வலியார்முன் - தன்னைவிட வலியவர்கள் முன்னர்
தன்னை - தன்னுடைய வலிமையை
நினைக்க - ஆராய்ந்து புரிந்து கொண்டால்
தான் தன்னின் - ஒருவர் தன்னினும்
மெலியார்மேல் - வலிமையும்,
அதிகாரமு குன்றியவர்கள் மேள்
செல்லுமிடத்து-
தன்னுடைய
அதிகாரத்தை செலுத்தும் போது
இந்த அதிகாரத்தின்
இறுதியாக இக் குறளில், அருளோடு இருக்கவேண்டியதற்கான மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்,
மிகவும் அறியப்பட்ட இரு கூற்றுகளை ஒட்டி.
“வல்லவனுக்கு
வல்லவன் வையகத்திலே உண்டு” என்பது எல்லோரும் அறிந்த ஒன்று! இப்படியே பார்த்துக்கொண்டுபோனால்,
முடிவிலே எல்லாவலிமையும் உடைய இறைவனில் அது முடியும்.
அருளோடு இல்லாதவர்கள்
வேறு எவருக்கும் அடங்காமலிருந்தாலும், இறைவனிடமாவது அடங்கியாகியாக வேண்டும்.
“எளியாரை வலியார்
அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்” என்ற கூற்றும் உணர்த்துவது இதைத்தான்! அடிப்பது என்று எதிர்மறையாகச் சொல்வதவிட, “எளியாரிடம்
வலியார் அருளொடு இருந்தால் வலியாரிடம் தெய்வம் அருளொடு இருக்கும்” என்று சொல்லலாம்!
ஒருவர் தன்னைவிட
எளியவர்கள், மற்றும் வள வலிமை குன்றியவர்களிடம் அருள் இன்றி அதிகாரத்தின் வலிமையைக்
காட்ட முற்படும்போது, தன்னையும் விட பணம், மற்றும் அதிகார வளமும், வலிமையும் உள்ளவர்கள்
இருப்பதையும், அவர்கள் தன்னிடம் அவ்வாறு நடந்துகொண்டால் தான் எவ்வளவு வருத்தப்படுவோம்
என்பதையும் சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
இன்றெனது குறள்:
தன்வலியின் மேல்வலி உண்டென் றெளியார்க்கு
வன்செய்யும் முன்னே உணர்
thanvaliyin meLvali uNDen ReLiyArkku
vanseyyum munnE uNar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam