டிசம்பர் 11, 2012

குறளின் குரல் - 243


11th December, 2012

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
               (குறள் 234: புகழ் அதிகாரம்)

Transliteration:
Nilavarai nILpugaz ARRin pulavaraip
pORRAdhu puththEL ulagu

Nilavarai - within the bounds of this earth
nILpugaz – (for someone) the fame that sustains
ARRin – if someone gets (by doing deeds of charity)
Pulavaraip – such erudite (Gods of heavens)
pORRAdhu – will not celebrate (the erudite)
puththEL ulagu – even the heavens.

When a person’s fame sustains within the bounds of earth, even the heavenly being will not be celebrated. It simply means, such person of fame will be celebrated more than the celestials.

Parimelazhagar’s commentary for this verse is very convoluted and difficult to comprehend. The sentence which says the heavens will patronize either him or the erudite that get to heavens when they leave their mortal coil – which is truly confusing as a statement.  Regardless, the interpretation should be this: The heavens will celebrate only those that have sustaining fame or the people that have done deeds to earn fame and will not celebrate others.

“The heavens will not celebrate even the erudite and celestials
 When a person of sustaining fame lives on this earth of mortals”

தமிழிலே:
நிலவரை - இந்த பூமியில் எல்லைகளுக்குள்
நீள்புகழ் - (ஒருவர்) நிலைத்திருக்கும் புகழினை
ஆற்றின் - கொள்வாராயின் (கொள்ளக்கூடிய செயல்களை ஆற்றுவாராயின்)
புலவரைப் - அறிஞர்களை (தேவர்கள் என்றும், ஞானிகள் என்றும் பொருள் கூறுவது உண்டு)
போற்றாது - போற்றிக் கொண்டாடாது
புத்தேள் உலகு - வானுலகமும்.

ஒருவர் இவ்வுலக எல்லைகளுக்குள் நிலைத்திருக்கும் புகழை கொள்வாரானால், வானுலகமும் அறிஞர்களைக்கூட  (தேவர்களைக்கூட) கொண்டாடாது. இதனால் புகழுள்ளவர்கள் மற்றெல்லாரையும் விட போற்றப்படுபவர்கள் எனப்படுகிறது.

பரிமேலழகர் இவ்வாறு கூறுகிறார்: “புத்தேள் உலகம் அவனை அல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.”

மேற்கண்ட விளக்கத்தைப் படிக்கச் சிறிது கடினமே. கொள்ளவேண்டிய பொருள் இதுதான். ஒருவர் பூமியின் எல்லகளுக்குள் நிலைத்த புகழைக் கொண்டவராய் இருப்பின், மற்ற அறிஞர்களை இவ்வுலகம் மட்டுமல்ல, வானோர் உலகமும் பாராட்டாது.

திரிகடுகப் பாடல், “மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்” என்கிறது.

இன்றெனது குறள்:
வானுலகம் தேவரையும் போற்றாது நீடுபுகழ்
தானுடைத்தால் இவ்வுலகத் தே

vAnulagam dEvaraiyum pORRAdhu nIDupugaz
thAnuDaiththAl ivvulagath thE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...