10th December, 2012
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
(குறள் 233: புகழ் அதிகாரம்)
Transliteration:
onRA ulagaththu uyarndha pugazhallAl
ponRAdu nirpadhonRil
onRA - unparalleled
ulagaththu – in this world
uyarndha – that which is placed high in esteem
pugazhallAl – i.e. other than fame
ponRAdu – without perishing, dying
nirpadhonRil – none that can stand the passage of
time
None to compare with
itself and never dying in this world is “fame”.
Commentary of “ADiyArkku nallAr” on SilappadhikAram says one, which
gives happiness in this and subsequent births and stays as long as earth will
be is “fame”. The word “ponRAmal” which
has been interpreted in the context a person by Parimelazhagar has been
interpreted as the life of earth by “ADiyArkku nallAr”.
There are several
examples in other poetic works from Sangam literature to 12 and 13 the century
literary works such as puRanAnURu, porunarARRup paDai, perunkadhai, kamba
rAmAyaNam etc, which all talk about the longevity of fame of a person. With
this and the previous two verses, vaLLuvar shows and establishes the importance
of “fame”
“None
to compare with the heights of fame
which is never dying nor diminish or tame”
தமிழிலே:
ஒன்றா - இணையில்லாது
உலகத்து - உலகத்தில்
உயர்ந்த - உயர்வாகக் இருக்கிற
புகழல்லால் - புகழையல்லாது
பொன்றாது - அழியாமல், இறவாமல்
நிற்பதொன்றில் - நிலைத்திருப்பது வேறு ஒன்றும் இல்லை
தனக்கு இணையென்று சொல்ல வேறெதுவும்
இவ்வுலகில் இல்லாத “புகழ்” போல அழியாமல், இறவாமல், நிலைத்திருக்ககூடியது எதுவும் இல்லை.
அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில், “இனி ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து பூமி உள்ளளவும் நிற்பது புகழ்
என்னலுமாம்” என்று இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பொன்றாமல் என்பதை தனி மனிதனுக்கு
என்று கொள்ளாமல், இந்த பூமி இருந்து இயங்கும்வரை என்று பொருள் செய்துள்ளார்.
புகழைப் பற்றி பேசும் பொருநராற்றுப்படை
பாடல் “நில்லா உலகத்து நிலைமை தூக்கி” என்னும்.
புறநானூற்றுப் பாடல் (165:1-2), “ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ
நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்ற ஒப்புமையைக் காட்டுகிறது. பெருங்கதை,(2:8-10) “ பொன்றா
இயற்கைப் புகழது பெருமையும்” என்கிறது. பல
இலக்கியங்களிலும் “புகழ்” என்பது இறவாது, நிலைத்திருக்கக்கூடியது என்று காட்டப்படுகிறது
இன்றெனது குறள்(கள்):
குன்றா திலங்கும் புகழ்போல் உலகிலே
நின்று நிலைப்பதொன் றில்
kunRA
dhilangum pugazhpOl ulagilE
ninRu
nilaippadhon Ril
ஒப்பில்லா ஓங்குபுகழ் போலிறவா நித்தியமாய்
இப்புவியில் தங்குவதொன் றில்
oppillA Ongupugazh pOliRavA niththiyamAi
ippuviyil nilaippadhonRil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam