டிசம்பர் 10, 2012

குறளின் குரல் - 241


9th December, 2012

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
               (குறள் 232: புகழ் அதிகாரம்)

Transliteration:
uraippAr uraippavai ellAm irappArkkonRu
IvArmEl niRkum pugazh

uraippAr – Those who know how to praise worth people
uraippavai ellAm – all that they praise is
irappArkkonRu – to those who beg for help
IvArmEl – the act of charity on those who give (read with 2nd word)
niRkum pugazh – and their praise.

It is rare to see people praise others – not a common trait in people. Those who have such large heart are rare breed and the people they praise are also of rare virtues. Which other virtue is rare in people other than charity? So, such rare people that praise others praise the glory or fame of those that give to poor people without any reservations.
Praise is both prose as well as songs. Praise in words is commonplace occurrence. Poets who are a class by themselves and rare breeds also, mostly praise, humans, only when see such generosity. Not sure if contemporary or old time poets in other languages, other than Indian languages have praised people that were patrons and were of charitable minds.
Those that are large hearted to praise, speak the fame
 Of the charitable minds that give to poor not for name”

தமிழிலே:
உரைப்பார் - போற்றும் பண்பினர்
உரைப்பவை எல்லாம் - போற்றிப் பேசுவதெல்லாம்
இரப்பார்க்கொன்று  - இரக்கின்றவர்களுக்கு
ஈவார்மேல் - எப்போதுமே கொடுப்பவர்களுக்கு அப்பண்பினால் ஏற்படுகிற
நிற்கும் புகழ் - நிலைத்திருக்கும் தன்மையதாகிய புகழ்.

பிறரைப் போற்றுகின்ற குணமே அரிது. அது எல்லோருக்கும் இருப்பதில்லை.  அத்தகைய போற்றுங்குணம் உள்ள அரியவர்கள் போற்றுகின்றவர்களும் அரிய குணங்களை உடையவர்களாகத்தான் இருப்பர். வறியர்க்கொன்று ஈவார் போல் அருங்குணத்தர் யார்? போற்றும் குணத்தை உடைய அரிய குணத்தை உடையவர்கள் போற்றுவதெல்லாம் தம்மிடம் வந்து இரக்கின்ற வறியவர்களுக்கு வற்றாது ஈபவர்களின் குன்றாத புகழைத்தான்.

பரிபாடல் திரட்டில் ஈவார்மேல் புகழ் நிற்றலை இவ்வாறு கூறப்படுகிறது: “ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக்கூடல்”.  “இருள் பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்”. தண்டியலங்காரத்தில் மேற்கோள் பாடலாகச் கீழ்கண்ட செய்யுள் சொல்வது இக்கருத்தைத்தான்.

"வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; - வையத்து,
 இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
 பொருள்பொழிவார் மேற்றே புகழ்"
புகழ் என்பது “உரையும்,பாட்டுமென” இருவகைப்படும். “உரையும் பாட்டும் உடையோர் சிலரே” என்னும் புறநானூற்று வரியும் அதையே சொல்கிறது. சொல்வழக்கில் சொல்வதும், புலவோர் பாடிப் புகல்வதும் புகழே என்பதால், பரிமேலழகர், “பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம் என்பதூஉம் பெற்றாம்” என்பார்.
இன்றெனது குறள்:
வறியார்க்கொன் றீவார் புகழே புகல்வார்
செறிவாய் புகழ்கின்ற வர்

vaRiyArkkon RIvAr pugazhE pugalVAr
seRivAy pugazhginRavar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...