அதிகாரம் 24: புகழ் (Fame)
[This chapter is the last part of the section
on “Family” (“illaraviyal”), A successful family person who lives by the model
code of all virtues outlined in this section will lead life of glory and fame.
It is common for every human life, whichever path they tread and hence as been
kept as the pivotal chapter between the section on people of Family life and
Ascetic life.]
8th December, 2012
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
(குறள் 231: புகழ் அதிகாரம்)
Transliteration:
Idhal isaipada vAzhdhal adhu alla
Udhiyam illai uyirkku
Idhal – being charitable
isaipada – with fame
vAzhdhal – living (with fame)
adhu alla(dhu) – Apart from that
Udhiyam illai – there is no other use
Uyirkku – for all people.
Though
there are many reasons for somebody to have fame, only the fame got by being
charitable will sustain and stay. Hence both are said together in this verse.
Great deeds of someone will fetch fame. Though may not be blessed with other
ways of getting fame, the big heart of charity will definitely fetch anyone
fame. Hence without these two, charity and fame, there is no other use for
human life in this world, is what vaLLuvar states here.
The poetic
beauty of “mOnai” (similar sounding first letters) in words are ensured by the
words, “Idhal” and ‘isai”. But to say, without these two, there is no use in
life is a bit of stretch. Unless there
are people that accept others charity, there is no place for charity. Similarly
if everybody attains fame, it becomes a normal fact of life like everybody
breathes - though a utopian thought, is not a practical one. Only when
something is somewhat of a rarity it gets its due attention and is known as “fame”.
If everybody gets fame, it becomes a word of ordinary meaning.
The next
verse also says that those who are charitable will get fame – “IvArmEl niRkum
pugazh” – A true and irrefutable statement.
There are many other works that also allude to this, that charitable
deed or person will attain fame.
“Other than charity and fame in this life of
strife
For
humanbeings there is no useful reason for life”
தமிழிலே:
ஈதல் - இல்லாதவர்க்குக் கொடுத்தல்
இசைபட - பிறர் தம்மை புகழும்படியாக
வாழ்தல் - வாழுதல்
அதுவல்லது - இவ்வாறு இல்லாது இருப்பது
ஊதியம் இல்லை - பயனில்லை
உயிர்க்கு - மன்னுலகில் வாழும் உயிர்களுக்கு.
ஒருவர் புகழடைய நிறைய காரணங்கள் இருந்தாலும், நிலைத்திருக்கும் தன்மையை உடையது அவர்கள் செய்யும்
ஈகையினால் அடையும் புகழே. அதன் காரணம்பற்றி ஈதலையும், புகழ்பட வாழ்தலையும் ஒன்றாகக்
கூறினார். ஒருவரின் சாதனைகளே அவரைப் புகழடையச் செய்யும். வேறு எந்த சாதனைக்கு இயலாதவராயினும்
பிறர்க்கீயும் பெருங்குணமே புகழைப் பெற்றுத்தரும் என்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது.
இவ்விரண்டும் இல்லாத வாழ்வால், உலகில் வாழும் எவ்வுயிர்க்கும் எவ்வொரு பயனுமில்லை என்கிறார்
வள்ளுவர்.
ஈதலும் இசைபட என்பது மோனையழகைக்கொடுக்கின்றது சரிதான். ஆனால்
இவ்விரண்டுமில்லாத வாழ்தலில் பயனில்லை என்பது இடிக்கிறது. ஈதல், அதுவும் வறியவர்க்கு
ஈதல் என்பது இருப்பவர்களுக்கே (பொருளும், மனமும்) இயலும். இரப்பவர்களும், கொள்பவர்களும் இருந்தால்தான் ஈகை
இருக்கும். எல்லோரும் இசைபட வாழ்ந்தால் இசையென்பதன் பொருளே இயல்பு என்று ஆகிவிடும்.
எதுவுமே மற்றதிலிருந்து தனித்திருப்பதாலேயே அடையாளம் காணப்படுகிறது. எல்லோரும் புகழோடு
இருந்தால், (நல்ல விருப்பம்தான்), புகழ் என்ற சொல்லே வெகு பொதுவான, சிறப்பான பொருள்
இல்லாத சொல்லாகிவிடும்.
அடுத்து வருங்குறளிலும் இதன் காரணம் பற்றி, “ ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்பார். அகநானூற்றுப்
பாடல்(377:14-5), “நசைதர வந்தோர் இரந்தவை இசைபடப்
பெய்தல் ஆற்றுவோரே” என்கும். கம்பராமாயண வேள்விப்படலப் பாடலில் “இட்டு இசை கொண்டு அறன் எய்த முயன்றோர்”,
என்பார் கம்பர்.
இன்றெனது குறள்:
வேறுபயன் ஒன்றிலை ஈகையும் மன்புகழு
மாறுவாழல் அன்றி உயிர்க்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam