7th December, 2012
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
(குறள் 230: ஈகை அதிகாரம்)
Transliteration:
sAdhalin innAdha dhillai inidhadhUum
Idhal iyaiyAk kaDai
sAdhalin – Other than the very thought of death or that
itself
innAdhadhu – more painful thought
illai – there is none
inidhadhUum – But even that is pleasurable
Idhal – to be charitable
iyaiyAk kaDai – unable to be (charitable)
Death is painful incident, memory, especially when it
happens to near and dear ones; it is most feared one also for most people. But
even that is pleasurable, compared to not being charitable to the needy. This
is an epitome of comparison. A definition of how charity should be. Is it
possible in real life or in nature?
In MahAbhAratA, KarNa feels choked that he has nothing to
give to the poor brAhmaN who has come to him seeking help. Then when KrishNA in
disguise as brAhmaN points out that he can give his accumulated account of good
deeds (puNyA) as his charitable giving, without thinking he gives it all to
KrishNA. He does it knowingly that he would lose his life if he did that and
ArujunA was ready to kill him when this last shield of KarNA was removed. This
is a beautiful scene portrayed in the epic MahAbhAratA about the act of
charity.
Is death painful? Though the birth and death are part of
nature for everything, the thought of not being able to see something ever
again is painful. Old Tamizh works like aganAnURu, nAlaDiyAr, and kaliththogai
all have verses of poetry that point to the “thought” expressed in this verse.
With this verse, vaLLuvar complete this chapter on
charity – once again pointing out the greatness of charity and the act or
devoid of that act in people.
“Misery of
death is pleasurable when compared
To the pain of inability to do charity open
handed”
சாதலின் - இறந்து போகப்போகிறோம் என்னும் எண்ணமும்,
இறந்துபடுதலும்
இன்னாதது - துன்பம் தருவன.
இல்லை - ஏதுமில்லை
இனிததூஉம் -ஆனால் அதுவே இனிமை எனலாம்
ஈதல் - பிறர்க்கு ஈதலாகிய நற்செயலை
இயையாக் கடை- செய்யமுடியாமல்
போகும்போது
இறப்பு என்பது ஒரு துன்பமான நிகழ்வு, நினைவு, அதுவும் நெருங்கியவர்களுக்கு
நிகழ்ந்தால். ஆனால் அதுவும் இன்பமே, பிறர்க்கு ஈதல் செய்ய முடியாமல் போவதை விட. இது
ஒரு ஒப்பீட்டின் உயர்ச்சி. ஈகை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை. இயற்கையில்
இது நிகழுமா?
மாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம்
யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும், தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய
உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய
ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும்
என்பதையும் உணர்த்தும் சித்திரம்.
சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும்
சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல்,
(339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால்
தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.
நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு,
உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து
இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு
விருந்தாகலாம்.
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று
மற்ற அதிகாரங்களைப் போலவே, மனிதருக்கு இருக்கவேண்டிய பண்பின்
பலகூறுகளைக் கூறி, அஃதில்லாமையின் இழிதலையும் கூறி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார்
வள்ளுவர்!
இன்றெனது குறள்:
ஈதல் இயலாத இன்னாவின்
மேலினிதாம்
சாதலே துன்பமாயி னும்
Idal iyalAdha
innAvin mElinidhAm
sAdhalE thunbamAyi num
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam