6th December, 2012
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
(குறள் 229: ஈகை அதிகாரம்)
Transliteration:
Iraththalin innAdhu manRa nirappiya
thAmE thamiyar uNal
Iraththalin – worse than begging
innAdhu – none more painful
manRa – certainly or even
clearly
nirappiya – what is filled in his food container
thAmE thamiyar – himself alone (worrying giving to others
will deplete his savings)
uNal - eating
Some people, out of utter selfishness, want to keep all that they have
for themselves, not sharing with other or even be charitable even towards poor. Fearing their savings would diminish, they
would eat alone. That attitude is painfully worse than being in the position of
begging.
In another chapter, vaLLuvar has said about not eating alone when the
guests are waiting outside. In the same chapter, he talks about those who look
forward to new guests after the feeding and sending others.
This virtue of sharing food or wealth is a celebrated one in Tamil
culture. A line in puRanAnUru says: “thamuya
uNDalum ilarE” (they won’t eat alone) again underlining the same virtue.
Another work of PadhitRuppaththu,
sings the praise of a Chera king about his benevolence. He gives to poets so
much that they don’t entertain the thought of eating alone and would naturally
be positioned to share with others.
“Eating alone fearing the
savings would diminish
is worse than begging and is a mentality selfish”
இரத்தலின் - பிறரிடம் பிச்சையென இரத்தலைவிட
இன்னாது - துன்பம் விளைவிப்பது
மன்ற - நிச்சயமாக, ஏன் தெளிவாக,
நிரப்பிய - தான் தேடி சேமித்துவைத்திருக்கிற
உணவிலிருந்து
தாமே தமியர் - தான்மட்டும் தனித்து (பிறர்க்கீய தன்னுடைய சேமிப்பு குறையுமென்று)
உணல் - உண்ணுதல்
சிலர் பாடுபட்டு சேர்த்துவைத்து, எங்கே பிறர்க்குக் கொடுப்பதால் தன்னுடைய சேமிப்பு
நிச்சயமாகக் குறைந்திடுமோ என்று, சுயநலமிகுதியால், தான்மட்டும் தனியாக உண்பர். அச்செயலானது,
பண்புக்குறைவும், பிச்சையெடுப்பதைவிட துன்பத்தைத் தருவதாம். தனித்திருந்து உண்ணுதலைப்
பற்றி, “விருந்து புறத்திருக்கக்” என்னும் குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பார். விருந்தோம்பும்
பண்பினர், செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் தகைமையினர். அது அவர்களிந்
ஈகைப் பண்புமாம்.
புறநானூற்றுப் பாடல் வரி(182:3), “தமியர் உண்டலும் இலரே” என்பதிலிருந்து, தனித்திருந்து
உண்ணாததைச் சிறப்பாகச் சொல்லலை அறியலாம். பதிற்றுப்பத்துப் பாடலொன்று, தனியாக நுகர்வோம்
என்ற எண்ணம் எழாமல், பிறரோடு பகிர்ந்து உண்ணும் வேட்கை கெடாமல் நுகரக்கொடுத்த சேரமானது
வள்ளமன்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.
“வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவினெஞ் சத்துப்
பகுத்தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே”
இன்றெனது குறள்(கள்):
பிறர்க்கீயக் குன்றுமென்று தான்மட்டும் உண்ணல்
திறமில் இரத்தலின் துன்பு
piRarkkIya kunRumenRu thAnmaTTum uNNal
thIRamil iraththalin thunbu
பிறர்க்கீயக் குன்றுமென்று தான்மட்டும் உண்ணல்
உறவிக் கிரத்தலின் துன்பு
(உறவி - உயிர், ஆன்மா - பிங்கலந்தை நிகண்டு)
piRarkkIya kunRumenRu thAnmaTTum uNNal
uRavik kiraththalin thunbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam