5th December, 2012
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
(குறள்
228: ஈகை அதிகாரம்)
Transliteration:
Iththuvakkum inbam aRiyArkol thAmuDamai
Vaiththizhakkum vanka Navar
Iththuvakkum – the pleasure of being charitable and giving
to the deserving
inbam – and the happiness it brings
aRiyArkol? -
Don’t they know?
thAmuDamai - all
their wealth
Vaiththizhakkum - they
keep under lock and key and eventually lose without being useful to anyone
vankaNavar – the ones without compassion
The pleasure of being
charitable, giving to the really deserving, and the immense happiness it
brings, vaLLuvar asks, don’t they know? Who? The ones that keep all their
wealth for themselves and eventually lose them all without being useful to
anyone. They are also called people devoid of compassion.
Two important points
are implied in this verse.. First. The act of charity brings happiness and
satisfaction to the giver. Secondly, the uncharitables ones lose their wealth
to wrong people as alluded by the popular adage of AuvayyAr, “IyAr thETTai thIyar koLvar”. This verse also implies that miserly minds do
not enjoy the wealth themselves also. They do not have happiness with keeping
the wealth anyway.
“ Don’t compassionless misers know the happiness of
charity?
Instead of keeping
their wealth and lose it all out of stupidity!”
பிறருக்கு கொடுப்பதால் ஏற்படும்
மகிழ்வும், அதனால் வரும் இன்பமும் அறியாதவர்களோ அருளற்று, தங்கள் செல்வத்தையெல்லாம்
நற்பணிகளுக்கோ, பிறர்க்கு ஈவதற்கோ பயன்படுத்தாது, பின்பு மொத்தமாக இழப்பவர்கள்? “ஈயார்
தேட்டை தீயார் கொள்வர்” என்று ஔவையார் சொல்லியிருப்பது போல, செல்வமிருந்தும் பிறர்கீவதற்கு
மனமில்லாத கஞ்சர்களின் செல்வத்தை, பிறை களவாடிச் செல்வர், அவர்களே அறியாத வழிகளில்.
இரண்டு செய்திகளை இக்குறள் சொல்கிறது. ஈகை அளிப்பது உவகையும், மனநிறைவையும். அக்குணமில்லா
மனத்தளவில் வறியர் என்போர், தங்கள் செல்வத்தை முறையில்லா வழிகளிலோ அல்லது களவாடப்பட்டோ
இழப்பர். அச்செல்வம் இருப்பதினால், மகிழ்ச்சியில்லை, மாறாகக், குறையக்கூடாதே, களவாடப்படக்கூடாதே
என்னும் கவலைதான் எஞ்சும்.
சம்பந்தர் ஆக்கூர் தேவராப்பதிகத்தில்,
“இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி
மாடமே” என்கிறார். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எநிநே தப்புந பலவே” என்கிறது
புறநானூற்றுப் பாடலொன்று (189:7-8). “கொன்னே வழங்கான் பொருள்காத்திருப்பானேல் அஆ இழந்தான்
என்றெண்ணப்படும்” (நாலடியார் 9), “கொடாஅது வைத்தீட்டினார் இழப்பர்” (நாலடியார் 10)
என்ற நாலடியார் பாடல்களும் இக்குறளின் கருத்தையொட்டியன.
ஈத்துவக்கும் - பிறருக்கு ஈவதால் ஏற்படும் மகிழ்ச்சி (உதவி பெற்றவரின் மகிழ்வைக்கண்டு)
இன்பம் - அவ்வின்பத்தை
அறியார்கொல் - அறியாதவர்களோ ?
தாமுடைமை - தன்னுடைய செல்வத்தையெல்லாம்
வைத்திழக்கும் - பூட்டிவைத்து, ஒருவருக்கு ஈயாமல் பாதுகாத்து, பின்பு ஒன்றுக்கும் உதவாமல்
இழக்கின்ற
வன்கணவர் - அருளற்றவர்
இன்றெனது குறள்:
ஈயாமல்
தம்பொருளை வைத்திழப்பர் ஈத்துவப்பில்
தோயா
அருளற்ற வர்
IyAmal thampoRuLai
vaiththizhappar Iththuvappil
thOyA aruLaRRa var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam