4th December, 2012
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(குறள்
227: ஈகை அதிகாரம்)
Transliteration:
paththUN marIi yavanaip pasiyennum
thIppiNi thINDal aridhu
paththUN – One who shares his food with others
marI iyavanaip – and has practiced such good virtue
pasiyennum thIppiNi – the bad sickness that hunger is
thINDal – to touch
aridhu – is rare
Sharing in general
is a good virtue; especially sharing our food with those that suffer hunger is
a greater virtue. It is visualized as a vaccine for the worst disease that
hunger is. Best of charity is not giving
material things, but feeding the poor, when they are hungry. Like last verse, this one also places
“hunger” as the center reason around charity.
The word “thIppiNi”
is used figuratively here. A disease destroys a person mostly. Sometimes, it destroys the people that are in
contact too. Sometimes it can destroy a society as described in the previous
verse. It can make a person speak lies, steal and transform to be a bad element
of the society to spread social disfunction slowly but steadily to a larger
society. It is pictured as the root cause of spread of evil.
How does sharing
prevent the disease that hunger is? It protects the person as a shield of
“Dharma” if ever, and when tough times are there in his/her life too.
“InnA nArppadhu”
says categorically that it is painful to go and eat in such people’s house.
“One who shares his food to unaffordable, hungry-poor
Will not be affected
by the disease that hunger is, ever”
தமிழிலே:
பாத்தூண் - தன்னிடமுள்ள உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணப்
மரீஇயவனைப் - பழகியவனை
பசியென்னும் தீப்பிணி - பசியெனப்படுகிற
கொடிய நோயானது
தீண்டல் அரிது - தீண்டுவது என்பது அரிதாக
நடக்ககூடியது,
தன்னுடைய உணவை இல்லாதவரோடு
பகிர்ந்து உண்ணும் பண்பினருக்கு, பசியென்னும் கொடிய நோய் தீண்டுவது அரிதாம். அவ்வீகையே பசியென்பது கொடிய நோய்க்குக் காப்பான்
என்பது உணர்த்தப் படுகிறது. ஈகையிலே சிறந்தது, பொன்னோ, பொருளோ கொடுப்பதல்ல. பசித்திருக்கும்
உண்ண உணவில்லா வறியவருக்கு ஊண் கொடுத்து அவரது பசியை ஆற்றலே! கடந்த குறளைப் போலவே,
இக்குறளும் பசியை முன்வைத்து ஈகையை சிறப்பித்து பேசுகிறது.
தீப்பிணி என்றது, தீயவையைத் தரக்கூடிய நோய் என்பதனால் மட்டுமல்ல. நோய் தனிமனிதனை
அழிப்பது, சில நேரங்களில் சேர்ந்தவரையும் அழிக்கும் தொற்று நோய். பலசமயங்களில் சமூகத்தையே
அழிக்கக்கூடிய தீமையைப் பரப்பும் நோயுமாம்.
எப்படி என்பதை சென்ற குறளுக்கான விளக்கத்திலேயே சொல்லப்பட்டது. பசியென்பது பத்தையும்
பறக்கச்செய்து, களவு, பொய் போன்ற மனம், மற்றும்
ஒழுக்கக்கேட்டை விளைவிக்கும் நோயுமாம்.
பகிர்ந்துண்ணலுக்கும், அதனால்
அவ்வறம் நின்றார்க்கு பசியென்னும் கொடியநோய் அண்டாது என்ன தொடர்பு? அவ்வறச் செயலால்,
அவர்களுக்கு வறுமையாலோ, அன்றி வேறு காரணங்களாலோ உண்ண உணவு இல்லையாயின், அவர்கள்முன்னர்
செய்த தருமமே அவர்களைக் காக்கும்.
பகுத்துண்ணலைப் பற்றி, “பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல்” (குறள் 322) என்றும், “தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்”
(குறள் 1107) என்றும் கூறுகிறார். நாலடியார் (271) “நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும்
உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்” என்று கூறுகிறது. இன்னா நாற்பது பாடலொன்றில்,
“பாத்துணலில்லார் உழைச்சென்று உணலின்னா” என்கிறது,
இன்றெனது குறள்:
இல்லாரோ டூண்பகிர்ந்து உண்பார்தம்
இல்லத்தில்
நில்லாப் பசியெனும்தீ நோய்
illArO DUNpagirndhu
uNbArtham illaththil
nillAp pasiyenumthI nOi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam