3rd December, 2012
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(குறள்
226: ஈகை அதிகாரம்)
Transliteration:
aRRAr azhipasi thIrththal agdhoruvan
peRRAn poruLvaip puzhi
aRRAr – Poor and that who can not afford
azhipasi – their excessive hunger (because they don’t
get food regularly)
thIrththal – to quench that
agdhoruvan – is for someone
peRRAn – who is wealthy
poruL – and his wealth
vaippuzhi – is safe to keep investing in that virtue of
feeding (more like an investment of for after life in heavenly abode)
Wealth of rich is safe in the virtuous deed of feeding those who do not
have the wherewithal to feed themselves, regularly because of their poverty.
Though it may seem like an expense, it is actually a saving for the life, in
the heavenly abode after leaving the mortal coil.
The word “azhipasi” is used because how hunger can destroy a person.
“azhi” means “to destroy”. What is destroyed if somebody is hungry? Of course
the physical body suffers deterioration. Also, the moral character and spirit
will dwindle down and eventually when the hope to live by fair means, is
diminished to nothing, a person of that poverty will be pushed to steal, rob
others of wealth. Most of the thieves start because they are not able to feed
themselves or their family. So, the society has the responsibility to feed the
poor to stop the personal destruction of an individual and eventually the moral
fabric of the society.
Both maNimEkalai (Seeththalai
sAththan) and nalvazhi (AuvayyAr)
list all that will happen, when a person suffers of hunger. There is a saying
in Tamil, “pasi vandhiDa paththum
paRandhu pOm”, meaning that 10 different virtues will leave a person, if he
suffers hunger. They are honor, good family, education, benevolence, knowledge,
charitability, penance, status, the industry, and going after women.
“Saving for the heavens, it
is to feed those that suffer hunger
For all who are wealthy and have the wherewithal
to this cure”
தமிழிலே:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அற்றார் - வறியர், உண்பதற்கு உணவே எப்போதாவதுதான் கிடைக்கப்பெறுபவர்
அழிபசி - அவர்களின் மிகுந்த பசியை
தீர்த்தல் - தீர்த்து வைத்தலாகிய அறம்
அஃதொருவன் - அவ்வறமானது ஒருவர்
பெற்றான் - அதாவது பொருள் படைத்தவர்
பொருள் - செல்வத்தை
வைப்புழி - வைக்கக்கூடிய இடம் (இதுதான் சுவர்கத்துக்கான் முதலீடு அல்லது வைப்புநிதி)
உண்பதற்கு ஒன்றுமில்லாரின் வயிற்றுப்பசியினைப் போக்க அவருக்கு உணவளிப்பதே ஒருவர்
வைத்திருக்கும் செல்வத்தை பாதுக்காப்பாக வைக்கக்கூடிய சேமநிதி. வறியார்க்கு உணவு ஈவதில்
ஏற்படும் செலவு, புண்ணியதை சேமித்து வைக்கும் நிதியாகும்.
“அழிபசி” என்றது எதனால்? “பசிவந்திட பத்தும் பறந்துபோம்” என்னும் வழக்குள்ளது.
பசியின் கொடுமை, உடம்பை மட்டுமல்லாது, மானம், வெட்கம், நல்ல பண்புகளில் உள்ள நம்பிக்கை
போன்றவற்றை அழித்துவிடும். வயிற்றுக்கு இல்லாத கொடுமைக்கு திருடச் செல்பவர்கள் உண்டு.
பெரும்பாலும் ஆரம்ப நிலைத் திருடர்கள் தங்கள் வயிற்றுக்கோ, தங்கள் குடும்பத்தினரின்
வயிற்றுப் பசிக்காகவோதான் திருட ஆரம்பிக்கிறார்கள். அத்தகைய பசியையே “அழி பசி” என்று
குறிக்கிறோம். அது கொண்டவரை அழித்து, சமூகத்தினரையும் அழித்துவிடும். மணிமேகலையில்
வரும் கீழ்கண்ட வரிகளைப் படித்தால் பசிப்பிணி என்பது எதையெல்லாம் செய்யும் என்கிற பட்டியலே
கிடைக்கும். இதேயே பரிமேலழகர் “மிக்க பசி” என்று அதிகத்தன்மையைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புணை விழூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூணணி மாதரோடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி” (மணிமேகலை:
11:76-80)
பசிப்பிணி என்பதையே வள்ளுவர் அடுத்த குறளில் “பசியென்னும் தீப்பிணி என்பார்.
நோய் மட்டுமல்ல, தன்னையும், பிறரையும் அழிக்கவல்ல தீயவை தரும் நோய் என்பார் வள்ளுவர்.
ஔவையார் கூறிய பசி வந்திட பறந்து போகும் பத்தாவன:
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை
- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்
பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
இன்றெனது குறள்:
செல்வர்தம் செல்வத்தால் இல்லார் மிகுபசியை
இல்லாச் செயலே அறம்
selvartham selvaththAl illAr migupasiyai
illAch cheyalE aRam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam