2nd December, 2012
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
(குறள்
225: ஈகை அதிகாரம்)
Transliteration:
ARRuvAr ARRal pasiARRal Appasiyai
mARRuvAR ARRalin pin
ARRuvAr – one who is strong in penance
ARRal – has the ability to
pasiARRal - control hunger
Appasiyai – someone who is hungry
mARRuvAR - to feed someone that cannot afford food
ARRalin pin – even better than who can control hunger with
the strength of penance
Those who do penance
have the power to control their hunger for longer periods. Even that power is
secondary compared to those who can, with their charity quench the hunger of
poor that cannot afford food, according to vaLLuvar. In one of the 5 major kaavyaas of Tamil,
MaNimEkalai, the author “sAththanAr” says, “maNthiNi njAlaththu vAzhvOrkkellAm uNdikoDuththoR uyir koDuththOr”,
stressing the importance of feeding the poor as a charitable deed. In another
sangam work, a verse in puRanAnURu, chozhA king kiLLivaLavan, speaks about the “hunger quenching virtue of charity” of
a man, “siRukudikizhAn paNNan”
(verse 173).
The same beginning
phrase “ARRuvAr ARRal” is used in
verses 891 and 985 in different chapters. In both placed the phrase means, “the
best among those who do a deed of a class”. In this verse, it has been said in
the context of persons that do penance, who have the capacity and power to
control their hunger.
“Better than, to control hunger through penance, a power,
Is the ability to
quench the hunger of unaffordable poor”
தமிழிலே:
ஆற்றுவார் - தவவலியினரான ஒருவரின்
ஆற்றல் - வலிமையானது (எதற்கு?)
பசிஆற்றல் - தன் தவ வலிமையினால்
தம் பசியை ஆற்றிக்கொள்ளுதல்
அப்பசியை - அப்பசியை (இல்லார்க்கு,
வறியர்க்கு உண்டாகும் பசியை)
மாற்றுவார் - மாற்றக்கூடிய (தம்முடைய ஈகையினால்) ஆற்றல் உடையவர்தம்
ஆற்றலின் பின் - ஆற்றலுக்குப் பிறகுதான் (தவவலிமையினரின் பசியடக்கும் ஆற்றல் கூட)
தவவலியில் சிறந்தோர்க்கு தம் பசியை அடக்கிக்கொள்ளும் ஆற்றலுண்டு. வறியரது பசியை
தம் ஈகையால் அடக்குபவரின் வலிமைக்கும் முன்னால் தவவலியினரின் பசியை அடக்கும் ஆற்றல்
ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். மணிமேகலையில், “மண்திணி
ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர்
கொடுத்தோர்” (பாத்திரம்
பெற்ற காதை, வரிகள் 95-96) என்பார் சாத்தனார். இவ் வழக்கினின்றும்
உண்டிகொடுக்கும் ஈகையின் சிறப்பு புலப்படும். புறநானூற்றுப்பாடல் (173) ஒன்றில், சிறுகுடிகிழான் பண்ணனின்
பசியாற்றும் அறத்தைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறப்பித்துப் இவ்வாறு
பாடுகிறான்.
"யான்வாழு நாளும் பண்ணன்
வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின
திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந்
தன்ன
வூணொலி யரவந் தானுங் கேட்கும்
பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்
கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கு
மிருங்கிளைச் சிறா அர்க்
காண்டுங் கண்டு
மற்று மற்றும் வினவுதுந்
தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின்
எமக்கே."
பெரியாரைப் பிழையாமை அதிகாரத்தின்
முதற்குறளிலும் (891), சான்றாண்மை அதிகாரத்தின் ஐந்தாவது குறளிலும் (985) “ஆற்றுவார்
ஆற்றல்” என்ற தொடரே துவக்கமாக உள்ளது. இவ்விரண்டிலும், தாங்கள் எடுத்துக்கொண்ட கருமத்திலே
ஆற்றலில் சிறந்தவர்களில் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. உண்ணா நோன்பிருக்கும் வலிமையும்
ஆற்றலும் தவத்தில் சிறந்தவர்களுக்கே இயலுமாகையால், ஆற்றுவார் ஆற்றல் என்பது, இவண் அவர்கள்
மேலே ஏற்றிச் சொல்லப்பட்டது.
இன்றெனது குறள்:
உண்ணாமல் நோர்ப்பதினும் மேலாமே
ஊணிலாரை
உண்ணுவித் தாற்றல் பசி
uNNAmal nOrppadhinum mElAmE UNilArai
uNNUvith thARRal pasi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam