20th
November, 2012
புத்தே ளுலகத்தும் ஈண்டும்
பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
(குறள் 213: ஒப்புரவறிதல் அதிகாரம்)
Transliteration:
PuththE Lulagaththum INDum peRalaRidhe
Oppuravin nalla piRa
PuththEL ulagaththum – Even in the abode of Heavenly beings
INDum – and on this earth
peRal aRidhe – it is rare to get
Oppuravin – other than helping incapacitated
(physically) or with no wherewithal (otherwise)
nalla – the best blessing
piRa - other
There is nothing better
good than helping those who are poor and incapacitated physically even in
heavenly abode of Gods, and on this earth. This is what this verse conveys.
Why is it rare even to heavenly
beings? Since there is no poverty in heavens, there is none to ask alms and
hence none to give either. So the pleasure of giving is not there for heavenly
beings. Hence the very thought that the heaven is a pleasurable place is false.
In the chapter on
“seeking alms”, (Chapter 106, verse 8) Parimelazhagar quotes, “IvArum koLvArum illAdha vAnaththu vAzhvArE
vankaNavar”. This verse says since
the heavens don’t have anybody to seek alms and because of which there is none
to give, the people of heavens are rude and evil people. This seems to be an
extreme conclusion or simply an exalted poetic expression. That verse says, if
there is no one to seek alms on this earth, it is like a lifeless wooden toy.
There are many other
literary references regarding the act of benevolence towards have-not’s. Auvayyar in
her work AththichchUdi simply commands, “oppuravu
ozhugu”. Another sangam literature
“mudhumozhi kAnchi” says: “oppuravu
aRidhalin thagu varavu illai”. Other works like AchArkkOvai and nAladiyAr
have ample references to “oppuravu”.
“None better than benevolence at all
To heavenly Gods or
earthly souls”
புத்தேள் உலகத்தும் - வானோராகிய தேவர்கள் உலகத்திலும்
ஈண்டும் - இப்பூவுலகிலும்
பெறலரிதே - பெறுவதற்கு அரியதாம்
ஒப்புரவின் - இயலார்க்கு (பொருளீட்ட, உடலால் முடியாதவர்க்கு)
உதவுதலின்
நல்ல - சிறந்த, நன்மையான
பிற - மற்றவை
வானோர்களாகிய தேவர்கள் வாழும் உலகத்திலும், இப்பூவுலகத்திலும், உடலாலும், திறனாலும்
வாழ்வாதாரம் ஈட்ட இயலாதவர்களுக்கு உதவுதலைவிட சிறந்ததும், நன்மையானதும் இல்லை என்பது
இக்குறளின் கருத்து.
வானோர் உலகத்துக்கு இது அரிது என்றதன் காரணம் என்ன? வானுலகத்தோர்க்கு வறுமையின்மையான்
இரப்பதுமில்லை, அஃதின்மையால் கொடுப்பதுமில்லை. ஈத்துவக்கும் இன்பம் என்ற ஒன்று வானுகத்திலும்,
எல்லோரும் விழையும் சொர்க்கத்திலும் கிடையாது. சொர்க்கம் இன்பமயமானது என்னும் கருத்தும்
இதனால் பொய்யானது.
இரவு அதிகாரத்தில் (106) வரும் 8வது குறளுக்கான உரையில், “ஈவாரும் கொள்வாரும் இல்லாத
வானத்து, வாழ்வாரே வன்கணவர்” என்பார் பரிமேலழகர்.
அதாவது அவர்களைக் கொடியவர்கள் என்றே கூறுகிறார். அக்குறளும் “இரப்பாரை இல்லாயின்
ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று” என்கும். குளிர்ந்த இடத்தையுடைய இவ்வுலகானது,
வறுமையிலே இரப்பார், தானம் விழைவோர் இல்லையெனில், உயிரில்லா மரப்பாவையினை ஒக்கும் என்கிறார்
வள்ளுவர்.
ஒப்புரவைப்பற்றி மற்ற இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதையும் சிறிது பார்க்கலாம்.
ஆத்திச்சூடியில் ஔவையும் செய்யத்தக்கவற்றுள், அகார வருக்கத்தில் “ ஒப்புரவு ஒழுகு”
என்பார் கட்டளயாகவே. மதுரை கூடலுர் கிழாரின் முதுமொழிக் காஞ்சியில், “ஒப்புரவு அறிதலின் தகுவரவு
இல்லை” என்பார். கயத்தூர் பெருவாயின் முள்ளியார்
யாத்த ஆசாரக்கோவையின் முதல் பாடல் “நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத
எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு
நட்டல், - இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து” என்கும்.
இன்றெனது குறள்:
இயலார்க் குதவுதலின் வானோர்க்கும் வையத்
தியங்குவோர்க்கும் ஏற்றம் இல
iyalArk kudhavudalin
vAnOrkkum vaiyath
thiyanguvOrkkum ERRam
ila
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam