21st November, 2012
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
(குறள்
214: ஒப்புரவறிதல் அதிகாரம்)
Transliteration:
oththa dharivAn uyirvAzhvAn maRRaiyAn
seththAruL vaikkap paDum
oththadh(u) –
benevolence is the right code of living for the word
arivAn - knowing and
understanding such as the truth
uyirvAzhvAn – is considered a living soul.
maRRaiyAn - Others
seththAruL – among dead (though has life, but without soul
or knowledge of virtue)
vaikkappaDum – is considered.
This verse sounds like
the epitome of vaLLuvar’s disgust for those who do not show benevolence. The
word “seththAn” , equivalent to ordinary and casual sounding “He is dead”, is
somewhat derogatory in its usage. VaLLuvar’s hints as to what he thinks of
people that lack benevolence as a virtue.
What is appropriate for
the worldy living is the large heartedness, benevolence to help others in need.
Only such people are considered to be “living”.
Others are considered as good as “dead”, because only a corpse is
insensitive to people that are before it (alluding to people that need
helping). Those who have heart beat and compassionate persona, cannot be indifferent
to other’s need.
In the chapter of
“Being devoid of anger” (veguLAmai), vaLLuvar points to people that get angry
also as “dead people” (iRandhAr iRandhAr
anaiyar sinaththai thuRandhAr thuRandhAr thuNai – verse 310). We have already seen in the chapter on “Avoiding slander” (puRang kURAmai), he denounces slanderous talk and says it is better
to be dead than indulge in slanderous talk. In a later chapter 101 (nanRiyil selvam), he
will say, those who have huge wealth and are not enjoying it, either self or
helping others, are equal to dead.
It is perfectly right
to condemn bad traits and say strong words against them. But to say the same
referring to a person, even fictitiously appears contray to “compassionate
posture” that vaLLuvar otherwise exhibits. When he says even the punishing
should be done by good deeds to make a person shameful of his mid-deeds, to
equate a person to a dead corpse does not fit his otherwise equanimous stature.
“One with benevolence as the trait of the world lives
Others are
considered one among the dead corspse”
தமிழிலே:
ஒத்தத(து) - இது உலக நடைக்கு ஒப்பானது என்று (ஒப்புரவாம் பிறர்க்கு
உதவும் பெருந்தன்மை)
அறிவான் - அறிந்து, அதன்படி ஒழுகுபவன்
உயிர்வாழ்வான் - உயிர் வாழ்கின்றவராகக் (உயிரோட்டம் உள்ள ஒரு சீவனாக)
கருதப்படுவான்
மற்றையான் - மற்றவரெல்ல்லாம் (அவ்வொப்புரவின்படி ஒழுகாதார்)
செத்தாருள் - இறந்தவருள் (உயிருள்ள பிணமாக, ஏனெனில் அறிவும்,
ஒழுக்கநெறியும் அறியாதவர்)
வைக்கப்படும் - கருதப்படுவர்.
வள்ளுவரின் வெறுப்பின் உச்சமாக
இக்குறள் ஒலிக்கிறது. “செத்தான்” என்பது, மிகவும் மரியாதைக் குறைவான சொல், இறந்தவரைக்
குறிக்க. ஒப்புரவு இல்லாரை, அவ்வாறு சொல்வதன் மூலம், பிறர்குதவி செய்யும் குணமில்லாரை
அவர் எவ்வாறு நினைக்கிறார் என்பதைத் தெளிவாக காட்டிவிடுகிறார்.
உலகநடைக்கு பிறருக்கு உதவி
செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர், மற்றவரெல்லாம்,
உயிரிருந்தும் பிணம் போன்றவரே. ஏனெனில் பிணத்துக்குத்தான் தன்முன்னர் தோன்றும் இல்லார்க்கு,
அவர் முகமறிந்து உதவுதல் என்பது இயலாது. இதயத்தில் துடிப்பும், ஈரமும் உள்ளோர்க்கு
அவ்வாறு பாராமுகமாய் இருத்தல் இயலாது.
வெகுளாமை அதிகாரத்தின் இறுதிக்குறளிலும்,
சினம் உடையவர்களையும் இறந்தார் என்றே குறிக்கிறார்.(இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை - குறள் 310). புறங்கூறுதலின் சாதலே மேல் என்று புறங்கூறாமை
அதிகாரத்திலும் (குறள் 183) கூறியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பின்னால் வரக்கூடிய நன்றியில் செல்வம் அதிகாரத்திலும் (101), முதற்குறளில்
(1001), பெரும்பொருளை வைத்துக்கொண்டு, அதனை தானும் துய்காமல், பிறருக்கு உதவாமல் இருக்கிறவனை
“செத்தாருக்குச்” சமமாகச் சொல்லுகிறார்.
ஒரு நன்றில்லா குணத்தை பழிப்பதும்
அல்லது இடித்துச் சொல்வது முறையே. அதையே ஒரு மனிதனில் மேல் ஏற்றிச் சொல்லுவது, வள்ளுவர்
மற்ற இடங்களில் காட்டும், அறிவுறுத்தும் மனித நேயத்துக்கு முறண்பாடாக உள்ளது. தண்டிப்பதையும்
நன்னயமாகச் செய்துவிடல் என்று அறிவுறுத்தும் வள்ளுவர், ஒருவரை பிணத்துக்குச் சமமாகச் சொல்லுவது சரியாகத்
தோன்றவில்லை!
இன்றெனது குறள்:
உயிர்மை உளரென்போர் ஒப்புரவு
உற்றோர்
உயிரற்றோர் அன்றோ பிறர்?
Uyirmai uLarenbOr
oppuravu uRROR
uyiraRROr anRO piRar?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam