நவம்பர் 19, 2012

குறளின் குரல் - 221


19th November, 2012

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
              (குறள் 212: ஒப்புரவறிதல் அதிகாரம்)

Transliteration:
thALARRi thandha poruLellAm thAkkArkku
vELANmai seidhar poruTTu

thALARRi  - with own effort and industry
thandha - earned
poruLellAm - wealth
thAkkArkku – those who can benefit from that
vELANmai – help
seidhar poruTTu – to do that (help)

The purpose of earning and accumulating wealth with one’s own effort is to help the qualified and deserving people. This has been suggested as a model code and virtuousity of life.

The word “thALARRi” implies one’s own effort, not the wealth that comes out of other’s hard work or accumulated wealth. Similarly the word “thakkAr” means deserving persons – which brings a question as to who are all deserving persons! Those who live virtuously, the life of ascetic, the students who are in pursuit of knowledge, aged people that are incapacitated, and the poor people who are incapable of finding or doing work are all truly deserving people. It becomes almost a societal responsibility to take care of the above class of people, and is an imperative to every member of any society.

“The wealth earned with one’s own effort
 Is to help the deserving from the heart”

தமிழிலே:
தாளாற்றித்  - தாள் + ஆற்றி - தம்முடைய முயற்சியினால்
தந்த  - ஈட்டிய
பொருளெல்லாம் - செல்வமெல்லாம்
தக்கார்க்கு - அப்பொருளால் பயனுறத் தகுதியுடையவர்க்கு
வேளாண்மை  - உதவி
செய்தற் பொருட்டு - செய்தலுக்காகவாம்

ஒருவர் தன் முயற்சியாலே பொருள் ஈட்டி செல்வத்தினை சேர்ப்பதன் நோக்கம், தகுதியுடைய, உழைத்தலுக்கும், பொருளுக்கும் வழியிலாதவர்களுக்கு உதவுவதற்கேயாம். இதை ஒரு வாழ்வியல் தருமமாகவே பொதுவாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

தாளாற்றி என்றதனால் தம்முடைய முயற்சியல்லாது, பிறர்பொருளை கொண்டு அல்ல என்பதை உறுதியாகச் சொல்லுகிறார். தக்கார்க்கு என்ற சொல்லால், தகுதியுடையோர் என்ற பொருள் பெறப்பட்டாலும், தகுதியுடையவர்கள் யார் என்னும் கேள்வி எழுகிறது. அறவழி நின்ற துறந்தோர்க்கும், அறிவு வழி நிற்கும் மாணாக்கருக்கும், அயர்ந்த வயதினரான முதியோருக்கும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாது, உழைத்துப் பிழைக்கவும் இயலாது அல்லாடும் வறியவர்களுக்கும் கொடுப்பதே தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும்.

தாளாற்றலால் உதவுவதலை, “ தாளாற்றலால் செய்த பொருளை யாவர்க்கும் அளித்து” என்று புறநானூற்றுப் பாடல் வரிகள் (125:7-8) தெரிவிக்கின்றன.

இன்றெனது குறள்:
தக்கார்க் குதவவே செல்வம் முயன்றீட்ட
புக்குவர் ஒப்புரவா ளர்

thkkArk kudhavavE selvam muyanRITTa
puukuvar oppuravA Lar

1 கருத்து:

  1. Krish Mani5:26:00 AM

    Enna arumaiyAna kuRaL. Selvam ARu pOl OdinAl
    vaLam sezhikkiRathu. Kuttai allathu kuLam AnAl
    ketta vAdai varukirathu! nIr sendrukoNdE iruppathAl thAn
    gangai pOndRa nathigaL perumaiyAi pEsappadukindRana.
    thuipEm eninE thappuna palavE! selvanthan marunthuk
    kadai muthalALi pOla! ella marunthaiyum thAnE
    sAppitAl maRaNm uRuthi! pakuthuNdu palluyir
    Ombuthal ...... ellAm thalai!

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...