18th
November, 2012
அதிகாரம் 22: ஒப்புரவறிதல் (Worldly wise, Societal conformance)
[This chapter is about being worldly wise and
living according to the living code of the world society or in other words,
simply conforming to the society. Unlike what is preached thorugh the
scriptures, this has to do with observing the acceptable norms of the world and
living accordingly.
கைம்மாறு வேண்டா கடப்பாடு
மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
(குறள் 211: ஒப்புரவறிதல் அதிகாரம்)
Transliteration:
kaimmAru vENDA
kaDappADu mArimATTu
enARRung kollO ulagu
kaimmAru – return of
favor
vENDA – not desiring
kaDappADu – the service
mentality towards the society
mArimATTu – The clouds
that gift rains to the world
en – what in return
ARRung kollO - can do,
Ulagu? – the world?
When there is call of
duty for the society, one must do without thinking what will be the return yield.
What do clouds expect for their gift of rains to the world? Or, for that matter,
what can be done by the world in return to the clouds? Clouds do their ordained
duty without any expectations.
Here is a quote from
the poem “perunkadhai”: which talks about not “doing return favors” :
“nammATTudhaviya nannarkkInDoru kaimmARARRudhal enRum inmayin”, Anoher poetic
work naRRiNai also says that there is no favour that can be done to Clouds for
their benovelence. “virundevan seikO thOzhi.. malaiyimaippadhu pOl, minnis
silavalERRODu seRindavim mazhaikkE”.
Some commentaries have
interpreted “oppuravu” as help done by somebody. The word means everyone’s
obligation to the society.
“Without expecting
return favours we must do our duty to the society
After all what returns do clouds expect from
the world for its bounty?
தமிழிலே:
கைம்மாறு - பதிலீடு, பதில் உதவி
வேண்டா - எதிர்பாராத
கடப்பாடு - ஒப்புரவு, சமூகத்துக்கு உதவும் உறுதிப்பாடு உள்ள
மாரிமாட்டு - வானிருந்து பொழியும் மேகங்களுக்கு
என் - என்ன பதில் உதவி
ஆற்றுங் கொல்லோ - செய்ய முடியும்?
உலகு? - இவ்வுலகினால் (மேகம் வழங்கும் கொடைக்கு உலகம் என்ன திருப்பிச்
செய்யமுடியும்?)
ஒருவர் சமுதாயத்துக்கான கடன்களை
ஆற்றும் போது, இன்ன செய்தால், இன்ன பயன் என்று எண்ணாமல் செய்யவேண்டும். தன் கொடையாக
மழையை வாரி வழங்கும் மேகங்கள், என்ன பதிலீட்டை எதிர்ப்பார்க்கின்றன உலகத்தவரிடம்? உலகோர்தான்
என்ன திருப்பிசெய்துவிட முடியும்? மேகங்கள் தம் சமூகக்கடனாகப் பொழிந்து உயிர்களை வாழ
வைக்கின்றன.
கைம்மாறு செய்யாமைபற்றிய
பெருங்கதைப் பாடலொன்று இவ்வாறு சொல்கிறது. “நம்மாட்டுதவிய
நன்னர்க்கீண்டொரு கைம்மாறாற்றுதல் என்றும் இன்மையின்”. மாரிக்கு கைம்மாறு இல்லை
என்பதை, நற்றிணைப்பாடல் ஒன்று, “ விருந்தெவன்
செய்கோ தோழி… மலையிமைப்பதுபோல் மின்னிச் சிலைவலேற்றோடு செறிந்தவிம் மழைக்கே.” என்கிறது.
சிலர் உரை செய்திருப்பது போல, ஒப்புரவு என்பது ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும்
உதவியல்ல. இது ஒவ்வொருவரின் சமூகக் கடமையையும் குறிக்கிறது,
இன்றைய குறள்:
பதிலீடு வேண்டாது செய்கடன்கள்
வான்தன்
நிதிவாரி பெய்தலைப் போல்
padhilIDu vENDAdhu seikaDangaL vAnthan
nidhivAri peidhalaip pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam