17th
November, 2012
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
(குறள் 210: தீவினையச்சம் அதிகாரம்)
Transliteration:
arunkEDan
enbadhu aRiga marungODi
thIvinai
seyyAn enin
arunkEDan
enbadhu – one who will almost have no destruction come to him
aRiga
– know thee
marungODi
– goes to the ways of non-virtuous ways
thIvinai
– evil/sinful deeds
seyyAn
enin – if does not do.
As the end verse of this chapter vaLLuvar
says: One who does not run to the side of non-virtuous ways to do evil/sinful
deeds towards others will be known as a person of rare and almost no
destruction to him. Seems like double negatives to indicate a positive outcome!
This verse seems to be an answer to
somebody’s question as to who will have destruction come to him/her rarely and
almost never. The question itself seems
to be of a general nature as to “who will not have destruction?” and the reply has
been said in the context of “evil/sinful deeds”.
After reading this verse, a thought to
regroup the kuRaL verses in the style of “prasnOththara maalikA” (a compendium
of general questions and answers) comes to mind. This certainly feels like
another chapter filler. When vaLLuvar himself has said categorically in another
chapter “Uzhin peruvali yAvuLa?” (Which other greater force is there than
fate?”), it is not agreeable to read proclamations such as “those who don’t do
these deeds will not face those repurcussions”. We have to question the
veracity of everything that has been said, once again by the spirit of his own
aphorism, “epporuL yAr yAr vAy kEtpinum”…
“Who
will not face destruction - almost none is, one
That dosen’t stead devious path nor do deeds
of sin”
தமிழிலே:
அருங்கேடன்
என்பது - கேடுகள் தன்னைச் சூழாதவன் என்பவன் (அரும் கேடன் - கேடுகளுக்கு அரியவன், அவை இல்லாதவன்)
அறிக - ஒருவனை
அறிந்து கொள்வீர்
மருங்கோடித்
- கொடுமையான நெறிகளின் பக்கம் ஓடி (செம்மையான
நெறிகளை தேடாது)
தீவினை - பிறருக்கு
தீவினைகள்
செய்யான்
எனின் - செய்யாதவர் என்பவர்.
இவ்வதிகாரத்தின் முடிவுக்குறளாக இவ்வாறு
கூறுவார்: கொடுமையான நெறிகளின் பக்கம்
ஓடி, பிறருக்கு தீவினைகள் செய்யாதவர்களை கேடுகள் அவரைச் சூழுவது அரிதானவர் என்று
அறிவீர்.
யார் கேடுகளுக்கு அரிதானானவர் அல்லது யாரை
கேடுகள் சூழாது என்ற கேள்விக்கு சொல்லப்பட்ட பதில்தான் இது. இது பொதுவாகக் யார், கேடுகளுக்கு அரிதானவர்
என்று கேட்கப்பட்ட ஒரு பொது கேள்விக்குச் சொல்லப்பட்ட பதிலாகத் தான் தெரிகிறது.
பொதுவாக, இவ்வாறு ஓரு கேள்வி கேட்கப்படும்
போது, எப்படியெல்லாம் இருந்தால் இத்தகைய நலனோ, குணமோ ஒருவருக்கு இருக்கும் என்னும் பதிலும் பிறக்கும். இக்குறளுக்குப் பிறகு, கேட்கப்பட்ட கேள்விகள்
என்ன, அக்கேள்விகளை ஒட்டி எவ்வாறெல்லாம் வள்ளுவர் பதில் கூறியிருக்கிறார் என்று,
அதிகாரத் தொகுப்புகளை கேள்விகள்-பதில்கள் வாயிலாக தொகுக்க வேண்டுமென்று
தோன்றுகிறது. ஊழின் பெருவலி யாவுள என்று
வினவக்கூடிய வள்ளுவரே, இவ்வளவு ஆணித்தரமாக இதைச் செய்யாதார் இதனுக்கு ஆட்படார்
என்று கூறியிருப்பாரா என்னும் ஒரு ஐயம் வருகிறது. இக்குறள் ஒரு அதிகார
நிரப்பியாகவே தோன்றுகிறது.
இன்றைய குறள்:
கொடுநெறியிற் சென்றேதும்
தீவினைகள் செய்யார்
கெடுதலுக்கு ஆளாகா தார்
koDuneRiyiR senREdhum thIvinaigaL seyyAr
keDudhalukku ALAgA dhAr
கொடுநெறியிற் சென்றேதும்
தீவினைகள் செய்யார்
கெடுதலில்லா நல்லறத்தி
னர்
koDuneRiyiR senREdhum thIvinaigaL seyyAr
keDudhalillA nallaRaththinar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam