நவம்பர் 06, 2012

குறளின் குரல் - 208

6th  November, 2012

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
                              (குறள் 199: பயனில சொல்லாமை அதிகாரம்)

Transliteration:
poruLthIrndha pochchAndhunj chollAr maruLthIrndha
mAsaru kAtchiyavar

poruLthIrndha  - without any useful meaning
pochchAndhunj  - even forgetfully
chollAr – won’t speak
maruLthIrndha – without any aberrations to the intellect (without the intellectual dizziness)
mAsaru – and blesmishless
kAtchiyavar – persons of such vision, demeanor

Our intellect can sometimes blind us or even give dizziness due to our own self-bloatedness. This has nothing to do with the knowledge that gives us intellect. It is in the way we assimilate that knowledge and have arrogance built in us du to that acquisition. It gives us ignorance of larger purpose of the knowledge. This is the reason why vaLLuvar has said, “kaRka kasaDaRa” in a different verse. Because of the blurred intellect, we tend to speak sometimes useless words that yield none to anyone. 

People of blemishless vision as well as unblurred knowledge will never utter, even forgetfully useless words that do nothing to anyone. Words spoken, the intended meaning and the reason for saying must be known before we utter anything. People of such gift are blessed with pure knowledge and vision of the world.

“People of blurred and blemishless intellect and vision
 Never speak meaningless even as a forgetful addition”

தமிழிலே:
பொருள்தீர்ந்த – எவ்வித பொருளுமில்லாத வெற்றான பேச்சினை
பொச்சாந்துஞ் - மறந்தும்கூட
சொல்லார் - பேசமாட்டார்கள்
மருள்தீர்ந்த – அறிவு மயக்கம் நீங்கிய
மாசறு – கறையேதும் இல்லாத
காட்சியவர் – தூய அறிவினால் இவ்வுலகினனைக் காண்பவர்கள்

நம்முடைய அறிவானது, நாம கற்றவற்றினால் சில சமயங்களில் மயங்கிவிடுவது உண்டு. இதனாலேயே “கற்கக் கசடற” என்பார் வள்ளுவர். இவ்வறிவு மயக்கத்தினால் நாம் பேசக்கூடாதவற்றை, மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பயனற்றவற்றைப் பேசுவதுண்டு. அவ்வாறில்லாமல், அறிவு மயங்காது, கறையேதும் இல்லாத நோக்கினர், என்றும் மறந்துங்கூட பொருளில்லாத, அதனால் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார்கள்

சொல்கின்ற சொல்லும், அதன் பொருளும், சொல்வதற்குண்டான காரண காரியங்களும் அறிந்தவர்கள், மயக்கமில்லாத, கறையில்லாத தூய அறிவினால் இவ்வுலகை காண்பவர்கள் என்பதும் இதனால் தெளியப்படுகிறது,

இன்றைய குறள்:
மறந்தும் பொருளில பேசார் கறையும்
பிறமயக்கம் ஏதுமில் லார்

maRandhum poruLila pEsAr kaRaiyum
piRamaykkam Edhumil lAr                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...