5th November, 2012
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
(குறள் 198: பயனில
சொல்லாமை அதிகாரம்)
Transliteration:
Arumpayan Ayum aRivinAr sollAr
Perumpayan illAdha sol
Arumpayan – Benefits that are rare to get
Ayum -
knowing in detail about the pros and cons of them
aRivinAr – people of such analytical bent of mind
solar – will not say
Perumpayan –huge benefits
illAdha -
that not bearing
sol - words
People of discerning intellect
will not utter useless, none yielding words.
Here is a verse saying, what is very well known to everyone, except in
the form of poetry. Sometimes, we feel that vaLLUvar has written some of these
just for the sake of poetical metre. Some commentaries imply a meaning of “arum
payan” as “rare to get benefits” such a good rebirth and heavenly abode after
demise – all of which are futuristic and mostly construed. Not surprising that commentaries from almost everyone, have shown
no great interpretations for such verses.
“No useless words will be in dialect
Of persons
of discerning intellect “
அரும்பயன் –
கிடைப்பதற்கு அரிய பயன்களை
ஆயும் – ஆராய்ந்து தெளியும்
அறிவினார் –
அறிவினை உடையவர்கள்
சொல்லார் –
சொல்ல மாட்டார்
பெரும்பயன் –
மிகுந்த பயனை
இல்லாத – தன்னகத்தே கொள்ளாத
(வீண் சொற்களைச்)
சொல் - சொற்களை.
அரிய பயன்களை அளிக்கக்கூடியவற்றை
பற்றி ஆராய்ந்து அறியும் அறிவுள்ளவர்கள், பெரிய பயனேதும் அளிக்காத வீண்சொற்களைக்
கூறமாட்டார்கள். எல்லோருக்குமே வெகுவாக ஒருகருத்தைக் கவிதையாகச் சொன்னதைத் தவிர, இக்குறள்
பெரியதான எந்தவொரு கருத்தையும் சொல்லிவிடவில்லை. அரும் பயன், பெரும் பயன் என்னும்
எதுகை நயத்துக்காக யாக்கப்பட்டது போன்றுளது. வீடு என்னு பேறு என்றும், மதிப்புடன்
கூடிய மறு பிறப்பு போன்ற அரிய பயன்களை நாம் கொண்டாலும், அவ்வாறு நாம் கொண்டு
கூட்டிக்கொண்டதாகவே அமையும்.
இன்றைய குறள்:
வீண்சொலார் விண்டறிந் தாய்ந்து உறுபயன்
காண்கின்ற மாண்புடை யார்
vINsolAr viNDaRin dhAyndhu uRupayan
kaNginRa mANbuDaiyAr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam