4th November, 2012
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
(குறள் 197: பயனில
சொல்லாமை அதிகாரம்)
Transliteration:
Nayanila chollinunj cholluga sAndROr
Payanila chollAmai nanRu
Nayanila – unkind, not nice, not giving happiness
chollinunj -
even if ( they = wisemen) speak
cholluga - speak
sAndROr- wise men
Payanila – useless and worthless words
chollAmai - not
speaking
nanRu – is good
Here is another verse which goes along the
theme of “Even if they speak like that, should not speak like this”. Wisemen,
even if they speak harsh words (may be harsh truth) towards others, should not
vain-speak.
Even if they speak unpleasant (may be
inconvenient truths), unsweet, undressed words, those words may intend good to
others. Aren’t they better than vain-speech? Though such comparisons tend to
say one is better than other, we may justify it as a way of pointing out mistake
or misdeed that’s worse.
The word “nayan” has several meanings as we
have seen already. The dictionary meanings are: wet, nice, goodness, use,
happiness, rightness, and justice. It is
puzzling why commentators interpret it as wisemen speaking “just” words. Here
we see a herd mentality among most commentators; invariably everybody has written
their commentary based on Parimelazhagar’s work as the first and primary Gospel,
directly or indirectly. Would wisemen
speak unjust words? Or would we call the people of unjust words as wisemen? But
harsh sounding words, as a matter of “truth-speak”, however inconvenient or
unpleasant or unkind to the listener, can be spoken by wisemen to mend
somebody. It is their duty too.
We should see this verse in the context of another
verse “inia uLavAga innAdha kUral” in a later chapter. Would wisemen speak unpleasant words?
Generally they won’t, but as a bitter pill to mend somebody, they would speak
words that sound harsh and scolding.
“Unpleasant, the wisemen may speak
But must never indulge
in vain-speak”
தமிழிலே:
நயனில – ஈரமில்லா,
இன்பந்தராத, நயமில்லாதாவை
சொல்லினுஞ் -
பேசினாலும்
சொல்லுக –
பேசட்டும் (ஆனால்)
சான்றோர் -
சான்றோர்கள்
பயனில – வெற்றாக,
வீண்பேச்சு, பயனற்று பேசுதல்
சொல்லாமை –
பேசாதிருத்தல்
நன்று - நல்லதாம்
மீண்டும் “அவர்கள் அவ்வாறு பேசினாலும் பேசலாம்,
இவ்வாறு பேசக்கூடாது” என்ற வகையிலே ஒரு குறள். சான்றோர்கள் சிலசமயங்களில் ஈரமில்லா, இன்பந்தராத,
நயமில்லாமலும் பேசலாம். ஆனால் பயனற்ற சொற்களை ஒருபோது பேசாமலிருத்தல் நல்லதாம்.
சான்றோர்கள் நெஞ்சில் சற்றும் ஈரமில்லாது, இனிமையற்று,
நயமற்று பேசினாலும், நமக்கு அவ்வாறு தோன்றினாலும், அவற்றால் விளையும் பயனேதேனும்
இருக்கலாம். பயனற்ற பேச்சைவிட அது நல்லதுதானே!
பயனற்ற பேச்சை அதிக குற்றமாகக் காட்ட, நயமற்ற, ஈரமற்ற, இனிமையற்ற பேச்சை
மேல் என்னல் பொருத்தமாக இல்லை. ஒன்றினும் மற்றொன்று மேல் என்னும் வழக்கு, ஒரு
தவறின் அதிகத்தன்மையை எடுத்துச் சொல்லவே என்று கொள்ளவேண்டும்.
தவிரவும், “நயன்” என்ற சொல்லுக்கு, ஈரம், நயம்,
இன்பம், நன்மை, பயன், மகிழ்ச்சி, செவ்வி, நீதி என்று பல பொருள்கள் இருக்கும்போது,
நீதி என்ற பொருளாகும் சொல்லாகக் கருதி, அதுவும் சான்றோர்கள் நீதியற்று பேசுவர்
என்று பொருள்வரும் படி மற்ற உரையாசிரியர்கள் சொல்லியிருப்பது பொருந்தவில்லை.
சான்றோர்களாக இருப்பவர்கள் நீதியின்றி பேசுவார்களா? நீதியின்றி பேசுபவர்களைச்
சான்றோர் என்னல் பொருந்துமா? ஈரமில்லாமல், உள்ளதை உள்ளத்தில் உறுத்துவதாக
இருந்தாலும் உள்ளவாறு உரைப்பது, சான்றோர் கடன்.
இக்குறளை, “இனியவுளவாக இன்னாத கூறல்” என்ற
குறளோடு பொருத்திப் பார்க்கவேண்டும். சான்றோர்களாக இருப்பவர்கள் இனியதில்லாமல்
இன்னா பயக்கும் சொல்வார்களா எனில், இல்லை. இன்னா பயக்கமலிருக்க, கசப்பான மருந்தைப்
போன்றதே அவர்களது கடிந்து சொல்லும் சொற்களுமெனக் கொள்ளல் வேண்டும்.
இன்றைய குறள்:
வெற்றாகப் பேசுதலின் மேலாமே ஈரமின்பம்
அற்றுசான்றோர் பேசுகின்ற சொல்
(ஈரமின்பம் - ஈரமும் இன்பமும்)
veRRAgap pEsudhalin mElAmE Iraminbam
aRRu sAndROr pEsuginRa sol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam