7th November, 2012
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(குறள் 120: பயனில
சொல்லாமை அதிகாரம்)
Transliteration:
Solluga solliR payanuDaiya sollaRka
solliR payanilAch chol
Solluga -
speak
solliR - If
you have to speak or in what you want to say
payanuDaiya -
that which are useful to others
sollaRka – Don’t speak (otherwise)
solliR – when you speak
payanilAch – useless or wasted
chol - words
A simple verse which has a
very straight forward command to people. After analyzing the vain-speak from
different angles, here vaLLuvar says emphasizing, if one must speak, they must
speak what is useful to others. Otherwise, it is better not to speak such
useless words.
The verse has the word “sollil”
in two places. Both are subtly different. “sollir” refer to persons that indulge
in vain-speak and tells them, if they feel the urge to open their mouth to say
something, it must be useful or else they must avoid vian-speak. In other form,
it refers to “among all things said by a person”
“If a person must speak, useful
It must
be, and not useless spill”
சொல்லுக –
பேசுக
சொல்லிற் –
உங்கள் சொற்களில்
பயனுடைய -
பிறருக்கு பயனை விளைவிக்கக்கூடியவையாக இருந்தால்
சொல்லற்க –
அவ்வாறு பேசகூடாது (எப்போது?)
சொல்லிற் –
உங்கள் பேச்சினிலே வரும் சொற்கள்
பயனிலாச் –
எவருக்கும் எப்பயனையும் அளிக்காத
சொல் – சொற்களாக இருந்தால்.
எளிய குறள். அதிகாரத்தின்
முற்றுக் குறளாக வருவதால், பயனில பேசுதலை பல கோணங்களில் கூறிவிட்டு, இக்குறளில்,
ஒரு உத்தரவாகவே சொல்லுகிறார் வள்ளுவர். பேசினால் உங்கள் சொற்கள் பிறருக்கு பயனை
விளைவிக்க வேண்டும். இல்லையெனில் அவ்வாறு பயனிலாச் சொற்களைப் பேசாதிருக்கவேண்டும்.
இது இக்குறள் சொல்லும் கருத்து.
“சொல்லிற்” என்பதற்கு, “பேசுவதாக
இருந்தால்” என்று பொருள் கொள்ளலாம். அல்லது அவர்கள் “பேசும் சொற்களில்” என்றும்
பொருள் கொள்ளலாம். அதாவது பேசுவதாக
இருந்தால் பயனுடையதாகப் பேசுக என்றும், அல்லது நீங்கள் சொல்லக்கூடிய சொற்களுள்
பயனுடைய சொற்களையேச் சொல்லுக என்றும் இருவிதமாகக் கொள்ளலாம். இக்குறளின் எளிமை, இதைச் செய் அல்லது செய்யாதே என்கிற
அறிவுறுத்தல், வள்ளுவனின் அறத்திண்மையின் வலிமையைக் காட்டுவதாகவும் அத்திண்மையின்
உறுதிப்பாட்டினால் அவர் சமூகத்தின்மேல் கொண்ட உரிமையும் காட்டுவதாக உள்ளது.
இன்றைய குறள்:
பயனுடை சொற்களன்றி மற்றெதுவும் சொல்லல்
நயனிலை என்று உணர்
payanuDai soRkaLanRi maRRedhuvum sollal
nayanilai enRu uNar
payanuDai soRkaLanRi maRRedhuvum sollal
nayanilai enRu uNar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam