11th
November, 2012
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
(குறள் 204: தீவினையச்சம் அதிகாரம்)
Transliteration:
maRandum
piRankEDu sUzhaRga sUzhin
aRanjchUzhum
sUzhndavan kEDu
maRandum
– Even forgetfully
piRan
kEDu – Doing harm to others
sUzhaRga
– do not indend (to others)
sUzhin
– if you do (intend harm)
aRam
chUzhum – the god of justice will render
sUzhndavan – such person who thinks harm (to other_
kEDu – punishment
“Never indend harm to others – Otherwise
The reprimand of justice shall not be nice”
A person must not, even forgetfully think
harm or evil do for others. If it is thought, the person who thinks so, will
have appropriate reprimand from the God of justice. We can infer, even thinking
harm to others will have its drastic sentence of justice.
In Parimelazhagar’s commentary, it is said
that God of justice will think harm to persons who think harm to others. This
does not seem to fit the definition of God. A God is a supreme being devoid of
anger or thought of intending harm to someone. Even the so called punishment we
attribute from God, is to mend the person who errs.
It is difficult to surmise how vaLLuvar wrote
such a verse where he talks about “God of justice thinks harm” even if it is to
a person who thinks harm to others. Such a thought is not acceptable anyday as
God form is not rancorous to think or cause harm.
தமிழிலே:
மறந்தும் - ஒருவர்
மறந்தும் கூட
பிறன்கேடு - பிறர்க்கு தீங்கு நினைத்தலை
சூழற்க - எண்ணத்தினை ஒழிக்க வேண்டும்
சூழின்
- அவ்வாறு எண்ணினால்
அறஞ்சூழம் - நீதிகடவுள் எண்ணிவிடும்
சூழ்ந்தவன் - தீங்கு எண்ணியவனுக்குத்
கேடு - தீங்கினை
ஒருவர் பிறருக்கு மறந்தும்கூட தீங்கினை
எண்ணாதொழுக வேண்டும். அங்ஙனமின்றி எண்ணினால், தீங்கு எண்ணுபவருக்குத் தக்க
தண்டனையை நீதிக்கடவுள் எண்ணிவிடுவார். இக்குறளால் தீமையை நினைத்தாலே தீமை
உண்டாகிவிடும் என்பது சொல்லப்படுகிறது.
பரிமேலழகர் உரையில் அறக்கடவுள் பிறர்க்கு
தீங்கு எண்ணுபவருக்கு தீங்கை எண்ணிவிடும் என்று காண்கிறது. கடவுள் என்பவன்
பிறருக்கு கேடு விளைவிக்க நினைப்பவன் அல்லன். தவறு செய்பவர்களுக்கும் தவறை
உணர்த்தி திருத்துவானே தவிர. அவர்களுக்கு கேட்டினை நினைக்கவோ, செய்யவோ செய்யாது.
தண்டனை என்பதும் கூட தவறை உணரச்செய்யத்தான்.
வள்ளுவர் எதை நினைத்து இவ்வாறு எழுதினாரோ,
இக்குறளின் “அறக்கடவுள் கேட்டினை நினைக்கும்” என்னும் கருத்து ஒத்துக்கொள்ள
முடியாது.
இன்றைய குறள்:
நினைவிறந்தும் தீயபிறர்க்
கெண்ணாதே - எண்ணின்
நினைவருந்த நீதிசெ யும்
ninaiviRandum
thIyapiRark keNNAdhe – eNNin
ninaivarunda nIdhise yum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam