நவம்பர் 10, 2012

குறளின் குரல் - 212


10th November, 2012

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
               (குறள் 203: தீவினையச்சம் அதிகாரம்)

Transliteration:
aRivinuL ellAnd thalaiyenba thIya
seRuvArkkum seyyA viDal

aRivinuL ellAnd – Among all the best morals, virtues to be known
thalaiyenba – what is known as the foremost is
thIya – harm, sin against, evil
seRuvArkkum – even for enemies
seyyA viDal – no causing, doing.

Not thinking, causing harm, evil or doing sin againt the worst of enemies is the foremost of virtues to be known among all virtues. Knowledge is to know virtues. The first and the most important of all knowledge is not doing harm to enemies.

VaLLuvar has used the word “thalai” in many places. As “the important part of body”, “attempting to do”, “important”, and “the foremost” are some of the meanings that have beem implied by employing this word in more than twenty places he has used them. Foremost of the usage is also to mean “foremost”

“Among all virtues to be known and practiced, the foremost
Is not to cause harm or do evil even for enemies, the worst”

தமிழிலே:
அறிவினுள் எல்லாந் - அறிந்து கொள்ளத்தக்க நல்லனவற்றுள்
தலையென்ப  - சிறந்ததும், முதன்மையானதும், முன்பாகக் கருதப்படவேண்டியதும்
தீய  - ஊறு, தீங்கு, பொல்லாதன
செறுவார்க்கும் - தம்முடைய பகைவருக்கும்கூட
செய்யா விடல் - செய்யாது ஒழிதல்

தன்னோடு பகைகொண்டோர்க்கும் எத்தீங்கும் நினையாது, ஊறு விளைவிக்காது இருத்தல், அறிநது கொள்ளத்தக்க நல்லனவற்றுள், அறங்களுள் முதன்மையானதாம். அறிவென்பதே அறமானவற்றை அறிவதுதான். அவ்வாறு அறிந்தவற்றுள் தலைமையானது என்று போற்றப்படுவது பகைவருக்கும்கூட தீங்கு நினையாமை, செய்யாமை.

வள்ளுவர் “தலை” என்னும் சொல்லை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கையாண்டுள்ளார். உடல் உறுப்பாகவும்,  முற்படுதல் என்ற பொருளிலும், இன்றியமையாத என்ற பொருளிலும், முதன்மையானது என்ற பொருளிலும் இச்சொல் வந்தாலும், முதன்மையாக வருவது, முதன்மை என்னும் பொருளில்தான் - இக்குறளிலும்!

இன்றெனது குறள்:

பகைதனுக்கும் தீதுசெய்யா நல்லறிவே போற்றும்
தகைமைக்கு முன்னென் றறி

pagaiidhanukkum thIdhuseyyA nallaRivE pORRum
thagaimaikku munnen Rari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...