நவம்பர் 09, 2012

குறளின் குரல் - 211


9th November, 2012

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
                 (குறள் 202: தீவினையச்சம் அதிகாரம்)

Transliteration:
thIyavai thIya payaththalAl thIyavai
thIyinum anjap paDum

thIyavai - Bad/Sinful/Evil deeds
thIya - Harm
payaththalAl - yielding
thIyavai - Such deeds (bad/sinful/evil)
thIyinum - worse than flame/fire
anjappaDum - will be feared.

Though a person that indulges in evil/sinful deeds might think that their deeds would bring them good, at the end, like “thanvinai thannaich chudum”, it would come back and harm the same person.

Because of that, a person must fear that the evil or sinful deeds destroy and perish the evil-doer, to ashes like the burning flame of the fire. By likening to scorching fire, it is implied that those who think and indulge in evil/sinful deeds will also perish to ashes burnt by their own evil deeds.

 “Since the sinful deeds yield only harm
  They will be feared as fire that storms”


தமிழிலே:
தீயவை - தீய செயல்கள்
தீய - தீமையை, தீங்கை
பயத்தலால் - தரும் ஆதலால்
தீயவை - அத்தகைய தீய செயல்கள்
தீயினும் - சுட்டு பொசுக்கி நீராக்கிவிடும் வெந்தீயைக் காட்டிலும் கொடியதாகச் சுடுமென
அஞ்சப்படும் - பயப்படப்படும்

தீய செயல்களைச் செய்யும் ஒருவருக்கு, தமது செயல்களால் தமக்கு ஏதோ நன்மைத்தான் விளையப்போகிறது என்ற எண்ணம் தோன்றினாலும், முடிவிலே “தன்வினைத் தன்னைச் சுடும்” என்பது போல், அவருக்கே அத்தீவினைகள் தீங்கை விளைவித்து விடும். அதனாலேயே அத்தீவினைகளை ஒருவர் தன்னைச் சேர்வாரை அழித்து சாம்பலாக்கி விடும் கொடும் வெந்தீயை விடவும் கொடுமையானதென்று எண்ணி அஞ்ச வேண்டும். 

தீயின் கொடுமையைச் சொல்வதன் மூலம், தீவினை செய்வாரும் தங்கள் வினையாலேயே சுடப்பட்டு, பொசுங்கிப் போவர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளுவர்.


இன்றெனது குறள்:
தீமைதரும் தீவினை தீய்த்துவிடும் தீத்தணலின்
தீமையினும் தீமையான தீது

thImaitharum thIvinaigaL thIththaNalil thIyndhuviDum
thImaiyinum thImaiyath thIdhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...