நவம்பர் 12, 2012

குறளின் குரல் - 214


12th November, 2012

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
               (குறள் 205: தீவினையச்சம் அதிகாரம்)

Transliteration:
ilanenRu thIyavai seyyaRga seyyin
ilanAgum maRRum pEyarththu

ilanenRu – Because of being poor
thIyavai – evil deeds/sinful deeds
seyyaRga – don’t do (looking for evil ways to become rich)
seyyin – if you do.
ilanAgum – will be poor
maRRum - then
pEyarththu – in all later births too


None should do sinful or evil deeds to others, because of their poverty. To think, by doing such deeds, they can earn wealth for their wellbeing is idiocy. On the contrary, by doing such deeds, they will continue to be poor in their future births too.

The same thought is expressed in the chapter about not coveting others wealth, in the verse starting “ilam enRu veggudhal seyyAr”. This is probably because to desire others possession will drive someone to extremes of even sin against others.

“Even in abject poverty, never do, any sinful deed
 It is carried to future births beyond present indeed”

தமிழிலே:
இலன்என்று - வறியராயிருக்கிறோம் என்று
தீயவை - தீமையான செயல்களை (குறுக்கு வழிகளில் செல்வம் சேர்க்கலாமென்று)
செய்யற்க - செய்யாதீர்
செய்யின் - அவ்வாறு செய்தால்
இலனாகும் - ஏழ்மையிலேயே இருக்க நேரிடும்
மற்றும் - மற்று
பெயர்த்து - பின்வரும் பிறவிகளிலும்.

எவரும் தாம் வறியராயிருக்கிறோமே, அவ்வறுமையைப் போக்க பிறருக்கு தீமை விளைவித்தாவது, தான் குறுக்குவழிகளிலே பொருள் ஈட்டலாம் என்று செய்யக்கூடாது. அவ்வாறு செய்யின், இற்றைப் பிறவிமட்டுமன்றி, ஏழேழ் பிறவிகளிலும், (பின்னர் வரும் பல பிறவிகளிலும்), வறியராகவே இருப்பர். இதுவே இக்குறளின் கருத்து.

இக்கருத்தையே “இலம் என்று வெஃகுதல் செய்யார்” என்று வெஃகாமை அதிகாரத்திலும் வள்ளுவர் கூறியிருக்கிறார்.

பிறர்பொருளைக் கவர்வதே அவர்க்கு செய்யும் தீமை என்பதால், வெஃகாமை அதிகாரத்தின்கண் சொல்லப்பட்ட கருத்தினை ஒட்டியே சொல்லப்பட்டதாகக் கருதலாம்.

இன்றைய குறள்:
ஏழ்மையினால் தீமைதனை செய்வாரின் ஏழ்பிறப்பும்
ஏழ்மையதே சூழ்ந்து வரும்

EzmaiyinAl thImaidanai seyvArin EzhpiRappum
EzhmaiyadE sUzhndhu varum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...