நவம்பர் 29, 2012

குறளின் குரல் - 230


28th November, 2012

அதிகாரம் 23: ஈகை (Giving, Charity)
[This chapter is about “giving” or being charitable. Why is different from the previous chapter of “oppuravaridhal” (ஒப்புரவறிதல்)? Benevolence is a character, but giving and doing charity are actions. Parimelazhagar further adds, that being charitable is looking towards future births unlike the character of benevolence, which is for the current birth. It does not sound appropriate. Genuinely benevolent people donot give expecting anything return. So are people that give unhesitatingly.]

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்த
                 (குறள் 221: ஈகை அதிகாரம்)

Transliteration:
vaRiyArkkonRu IvadhE IgaimaR RellAm
kuRiyedhirppai nIra thuDaiththu

vaRiyArkku – To poor people
onRu IvadhE – giving what they need
Igai – is called charity
maRRellAm – others i.e to give other what they want
kuRi yedhirppai – is to expect an equal favor
nIrathu uDaiththu – of that nature (expecting return favor)

Being the first verse in this chapter on charity, vaLLuvar defines what real charity is. After defining what is benevolence in the previous chapter, in this chapter he talks on the subject of charity.

Chairity is giving to poor that don’t have anything. Giving to other is with some expectation of return favour.

There are references in NAlaDiyAr, puRananURu reflecting the similar thought. The word usage “kuRiyedhirppu” mean expecting some kind of a return favor in equa measure, when giving something to others.  References this word can be seen in puRanaNUru and muththoLLAyirm.

“Giving to destitute is a true charity and aid
To others, it is measured in return of reward”

தமிழிலே:
வறியார்க்(கு) -  இல்லாத ஏழைகளுக்குக்
ஒன்று ஈவதே - அவர்களுக்கு வேண்டியதை கொடுப்பதே
ஈகை - தானம் எனப்படும்
மற்றெல்லாம் - மற்றவர்களுக்கு அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பது
குறியெதிர்ப்பை - செய்த அளவிற்கு அவர்களிடமிருந்து பயனை எதிர்பார்க்கும்
நீரது உடைத்து - தன்மையை உடையது.

ஈகை அதிகாரத்தின் முதற்குறளிலே, ஈகை என்றால் என்னவென்று வள்ளுவர் வரையறுக்கிறார். ஓப்புரவாற்றல் அதிகாரத்திற்கு வரும் ஈகை என்பது வள்ளன்மைப் பண்பை மட்டும் சொல்லாது, தானம் செய்தலின் சிறப்பைப் பற்றி கூறுகிறது.

இல்லாத ஏழைகளுக்குச் செய்யும் தானமே, “தானம்” அல்லது “ஈகை” எனப்படும்! அதுவல்லாது பிறருக்கு தானம் என்ற பெயரில் செய்வதெல்லாம், அதே அளவிலும் அதற்கு மேலும் எதிர் பயனை நோக்கிச் செய்யப்படுதலாம்.

“ஆற்றுதலென்பது ஒன்று அலந்தவர்க்குதவுதல்” என்கிறது கலித்தொகை (கலி: 133:6)
“வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றை இடுவாரன்றோ பயன் கருதாது பிறர்கு இடுமவர்களாவார்.” என்னும் புறநானூற்று வரிகள் (புற:136).

நாலடியாரும், “ ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையா தாற்றாதார்க் கீவதா மாண் கடன்” என்கும்.

குறியெதிர்ப்பு” என்ற சொல்லாட்சி, புறநானூற்றிலும், முத்தொள்ளாயிரத்திலும் வருவதைக் கீழ்காணும் பாடல் வரிகளில் காணலாம்.

“நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும்” (புற:163:4), “குறித்துமாறெதிர்ப்பை பெறாமையின்” (புற:333:11). “கூற்றுங் குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே” (முத்தொள்ளாயிரம்).
                                                                                                                                                                                   
இன்றெனது குறள்:
பயன்நோக்கிச் செய்வதாம் ஏழையர்க் கீயா
நயனிலாரின் ஈகைச் செயல்

payannOkkich  seyvadhAm EzhaiyArk kIyA
nayanilArin Igaich cheyal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...