நவம்பர் 28, 2012

குறளின் குரல் - 229


27th November, 2012

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
              (குறள் 220: ஒப்புரவறிதல் அதிகாரம்)

Transliteration:
Oppuravi nAlvarum kEDenin agdhoruvan
viRRukkOL thakka thuDaiththu

OppuravinAl – If by being benevolent
varum kEDenin – will only suffer a loss/ruin
agdhoruvan – that loss/ruin for someone
viRRukkOL – even by selling himself
thakka thuDaiththu –is worth having.

If a person’s benevolence results only in loss or ruin for him, it is worth having that loss or ruin, even if he has to sell himself for that ruin.  Here is another verse preaching extremely impractical goodness, virtue; good to read on books, but hard to practise and seldom seen in practice.

MaNakkuDavar, another most referred commentator says, if a loss of weath is there because of benevolence, it should not be construed as a loss or ruin; instead is should be considered a business exchange of selling something in return of getting something else. The implied meaning here is that, though this may seem like a loss or ruin, it is an investment for the eventual good in the current birth and in the ensuing births.

“If the benevolence brings forth only loss or destruction
 Even if one must sell himself, has to do without omission”


தமிழிலே:
ஒப்புரவினால்  -ஓப்புரவு நோன்பாக ஒழுகுதலால்
வரும் கேடெனின் - வருவது கெடுதலே என்றாலும்
அஃதொருவன் - அதை (கேட்டை) ஒருவன்
விற்றுக்கோள் - தன்னையே விற்றாகிலும்
தக்க துடைத்து - பெற்றுக்கொள்ளும் தகுதியை உடையது.

ஓருவர் தன்னுடைய ஒப்புரவினால் பொருள் அல்லது மற்ற விதமான கேட்டையும், அடைந்தாலும், அவர் அக்கேட்டையும் தன்னை விற்றாலும் அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இக்குறளும் அறநெறியின் உச்சத்தினை பிறருக்கு போதிப்பதாக உள்ளது. படிப்பதற்கும், சொல்வதற்கும் எளிது, பழக்கத்தில் கொண்டுவர கடினமானது.

மணக்குடவரின் உரையில், பொருள் கேடு என்றே பொருள் செய்திருக்கிறார்.  அவர் நேரும் பொருள்கேட்டை ஒரு வணிகத்தில் ஏற்படும் பண்டமாற்றாக, அதாவது ஒன்றை விற்று, மற்றொன்றை அடைவதாகக் கூறுகிறார்.  அதாவது, இது ஒரு கேடே அல்ல, பிற்காலத்திலும், அடுத்துவரும் பிறவிகளுக்குமான முதலீடு என்கிறார்.

பழமொழிப் பாடல் ஒன்று  இதே கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது:
“அடுத்தொன் றிரந்தார்கொன் றீந்தாரைக் கொண்டார் படுதேழை யாமென்று போகினும் போக”

இன்றெனது குறள்(கள்):
தன்னை விலைகொடுத்தும் ஒப்புரவு நோர்க்கலாம்
இன்னல் விளையுமானா லும்
thannai vilaikoDuththum oppuravu nOrkkalAm
innal viLaiyumAnAl um

ஏகார ஈற்று தன்னை, இன்னல் என்பவற்றின் பொருளை அழுத்திச் சொல்வதால் மேற்கண்ட குறளை சிறிது மாற்றியும் எழுதியுள்ளேன்.

தன்னையே விற்றாலும் ஒப்புரவு நோர்க்கலாம்
இன்னலே நேருமானா லும்
thannaiyE viRRAlum oppuravu nOrkkalAm
innalE nErumAnA lum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...