29th November,
2012
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
(குறள்
222: ஈகை அதிகாரம்)
Transliteration:
nallARu eninum koLalthIdhu mElulagam
illeninum IdhalE nanRu
nall ARu eninum – Even when it is said that getting charity is
good
koLal – being a benefactor of somebody’s charity is
thIdhu – is not good
mElulagam – Even if the high seat of heaven
illeninum – is denied
IdhalE – beging charitable is
nanRu – good
This verse presents two thoughts that are
contradicting in nature. When the life ends, even if the heavens have no
assured place for being charitable, still giving to poor is good for anyone.
This is perfectly right, as the charity should never be done with an
expectation of either equal or higher good.
This is only possible by people of soft and kind hearts. But, it begs a
question as to why would not heavens be open to such good souls?
Next thought says, even if it is said that accepting
others charity is good, doing so actually is bad. This thought does not seem or
the way it has been expressed is not, right.
Parimelazhagars’ commentary says: “IndhArkku avvulagu eidhudhal illai
enbAr uLarAyinum IdhalE nanRu”. This amounts to someone saying,”there
are people that say two plus two is five, but it should be four”. To quote
somebody saying something that is obvious and silly, is an equal amount of
idiocy. With dues respects to supreme work of vaLLuvar, this verse lacks the
finesse, clarity, and the sharpness of
expression.
A verse of puRanAnURu has a clarity of thought and a
nicer way of expressing the same topic.
“Iyena iraththal izhindhandRu” (To ask
someone to give something is lowly)
“IyEn enRal adhaninum izhindhanRu” (To refuse
somebody’s plea for alms is even worse)
“koL enak koDuththal uyarndhanRu” (To be
charitable and giving is great)
“koLLEn enRal adhaninum uyarndhanRu” (To
respectfully not accept such generosity is even greater)
The above lines so beautifully put across the
thought and action of giving and recieving.
vaLLuvar’s verse, has faield to express it with such clarity, which is
evident from the commentaries from others. Regardless of reasons, giving is a
great gesture. While refusing such a gesture is greater, accepting is
definitely not a bad act. To say so is
to undermine and be disrepectful of the very act of charity. Truly, it is
beyond comprehension as to why vaLLuvar said so!
Another line from puRanAnURu, “Iena iraththalO aridhE” implies the
wealthy state of the country during the times of this poet who wrote such. It
is common to see such overly praising poetry in literature attributed to some
king or patron. This line means, “it is
rare to see the people that ask others to give”.
Kambar has also said this thought beautifully -
“in uyirEnu koLLudhal thIdhu, koDuththal
nanRAl”, meaning, people of charitable nature would even go to the extent
of giving their life, without making fun of people that ask. But people of
righteous mind would refuse even such a great act of charity.
“Even
if no place in heavens, chairity is good
But the act of begging and recieving is bad”
தமிழிலே:
நல்லாறு எனினும் - பிறரிடம் பெறுவது, நல்லது என்று கூறப்பட்டாலும், பிறர் சொன்னாலும்
கொளல் தீது - அவ்வாறு பிறர் கொடுப்பதை
பெற்றுக் கொள்ளுதல் தீமையாம்
மேலுலகம் - வானுலகப் பதவியே
இல்லெனினும் - இல்லையென்று ஆனாலும்
ஈதலே - வறியவர்க்கு ஈதலாகிய ஈகைக் குணம்
நன்று - நன்றாம்.
இக்குறள் ஒன்றுக்கொன்று முரணான
இரு கருத்துக்களைச் சொல்லுகிறது. உலகவாழ்வு முடிந்தபின் வானுலகத்தில் சுவர்க்கத்தில்
இடமில்லை என்றாலும், வறியவர்க்கு கொடுத்தலாகிய ஈதல் நல்லது. முந்தைய குறளில் சொன்னது
போல பயன் நோக்காது வறியவருக்குச் செய்யும் ஈகையைப் போல் சிறந்தது ஏதுமில்லையெனில்,
அப்பண்பு ஈர நெஞ்சினருக்கே இருக்கும். அவர்கள் பிற தவறுகளில் ஈடுபடுவது அரிது. அவர்களுக்கு
ஏன் வானுலகப் பதவி மறுக்கப்படப் போகிறது?
அடுத்த கருத்து, பிறரிடம்
பெறுவது நல்ல வழியென்று சொல்லப்பட்டாலும், பெற்றுக்கொள்ளுதல் தீமை என்கிறது. இக்கருத்தைப்பற்றிய பரிமேலழகர் உரை, “ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார்
உளராயினும் ஈதலே நன்று” என்கிறது. இது, “இரண்டும்
இரண்டும் ஐந்து என்பாரும் உளர் ஆனாலும் இரண்டும் இரண்டும் நான்கென்பதுதான் சரி” என்பதுபோல்
உள்ளது. அவ்வாறு கூறுவது உளரலே தவிர மேற்கோளாகக் காட்டத்தக்கதல்ல. அதைப்போன்றுதான்
இதுவும். அதிகப்பேச்சுக்கு வள்ளுவர் மன்னிப்பாராக.
இங்கே, ஈகையைப் பற்றி புறநானூறிலே வரும்
வரிகளைப் பார்ப்போம்:
“ஈயென இரத்தல்
இழிந்தன்று
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக்
கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று”
மேற்கண்ட வரிகள் ஈகையைப் கொடுப்பதையும் பெறுவதையும்பற்றி
அழகாகச் சொல்கின்றன. எனக்கு ஏதேனும்
தாருங்கள் என்பது இழிந்த நிலையை குறிக்கும். இழிவானதும் ஆகும். அதைவிட இழிவான செயல்,
ஒருவருக்கு ஈயமுடியாத நிலையிலிருப்பதும், இருந்தும் ஈயமாட்டேன் என்கிற கஞ்சர்களின்
நிலைப்பாடும். அதேபோல், இல்லாத ஒருவருக்கு,
“இந்தா, கொள்” என்று கொடுப்பது உயர்வான பண்பும் செய்கையுமாம். அதை சுயமதிப்பின் காரணமாக,
பணிவுடன் மறுத்துவிடுதல் அதைவிட உயர்ந்த பண்பும், செய்கையுமாம்.
வள்ளுவரின் குறள், இதைச் சரியாகச் சொல்லவில்லை. எக்காரணம்
பற்றியும் கொடுத்தலாகிய ஈகை உயர்வே! ஆனால், நல்லவழியினால் செய்யப்பட்ட ஈகைச் செயலை
மறுப்பது பெருமையே தவிர, கொள்வதைத் தீது என்னல் சரியில்லை. அது ஈகைப் பண்பினரை மதியாதத்
தன்மையைக் குறிப்பதாகும். வள்ளுவர் எதை நினைத்து இவ்வாறு சொன்னாரோ?
புறநானூற்றில் வரும் மற்றொரு வரியான “ஈஎன இரத்தலோ
அரிதே” அக்காலத்திய வளமையைக் குறிக்கும் வரிகளாகக் கொள்ளலாம். புலவர்கள் அரசர்களைப்
பற்றிப் பாடும் போது, இவ்வாறு ஏற்றிப்பாடுவது வழக்கமே!
கம்பனின் கவிநயத்திலும்
தீது என்ற சொல்லாடல் உண்டு, ஆனால் நயத்தோடு. “வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர் வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால். எள்ளுவ என் சில? இன் உயிரேனும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்” (வேள்விப்படலம்: 29) என்ற வரிகள் சொல்வது இதுதான்:
“நீ வெள்ளறிவு உடையனாதலின், உன் இயற்கைக்கேற்ப
சொல்லினை. மேன்மைக் குணம்
உடைய பெரியோர்கள் தாம் வள்ளமை
உடையோராயின் தமது இனிய உயிரையே
என்றாலும் கொள்வோர்க்குக், கொடுப்பாரே
அல்லாமல் கூறி பரிகசிப்பரோ? அத்தகு வள்ளன்மையினர்
பிறர்பால் தமக்காக் கொடுப்பதை ஏற்றல் தீமைபோல் எண்ணி விலக்குவர் (தீமையென்று அல்ல!);
ஈதலே
நன்மையாகக் கொள்ளுவர்.
இன்றெனது குறள்:
வானகமே வாய்த்திலினும் வாழ்த்துமீதல்
- கொள்ளலோ
ஈனமாகும் எவ்வழியி லும்
vAnagaMe vAyththilinum vAzhthumIdhal – koLLalO
InamAgum evvazhiyi lum
உங்கள் குறள் விளக்கம் தவறு. இரந்து உண்டு வாழ்வதைப் போற்றும் ஆரியக்கருத்தினையும் சில வகுப்பாருக்குக் கொடுத்தால் நரகம் கிடைக்கும் என்னும் ஆரியக் கருத்தையும் மறுப்பதற்காகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய குறள். சரியாகப் புரிந்து கொள்ளாமல் விளக்கி உள்ளீர்கள். ஆனால், இதன் அடிப்படையிலான தங்கள் குறள் அருமை. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
பதிலளிநீக்கு