அக்டோபர் 21, 2012

குறளின் குரல் - 192

21st October, 2012

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
              (குறள் 183: புறங்கூறாமை அதிகாரம்)

Transliteration:
puRankUrip poiththuyir vAzhdhalin sAdhal
aRankURum Akkam tharum

puRankUrip – Talking ill about someone behind their back
poiththu – after that acting falsely as a nice person to them as well as others
uyir vAzhdhalin  - instead of living such a life of pretense and falsehood
sAdhal – it is better to die
aRankURum – and that will give what code books of virtues
Akkam tharum – call as wealth of life.

In the last two verses, vaLLuvar has said the following: It is better to avoid speaking slanderous about anyone, especially in their absence, or behind their back.  Even if virtuous deeds are not done, at least if a person does not speak slanderously of others it is good. In this verse, he says, instead of living such a life of slanderer, who maliciously illspeak of others, it is even better to perish and die. At least there is recourse of gaining the wealth as mentioned in code books of virtues by doing so. It alludes a lowly state of life to such persons.

Why would a person who willingly slander die because he is doing? vaLLuvar talks about people that are coerced to illspeak for financial gains and their livelihood. When somebody is put in a situation, to disparage others, instead of succumbing to such pressure, it is better to sacrifice life, even if it is threatening to their life.

Why does vaLLuvar likens the slanderous speak to a “lie” in this and previous verses? Mostly, when someone speaks of others slanderously, the person uses words of excess which tatamount to lying; Also, people that speak slanderously of others, when they sweet talk later, to the same person that they spoke of slanderously, that also is considered false.

Better to die than live speaking of others, slanderously, for personal gains-
As that will be a redemption of wealth as said in books on virtues definitely

தமிழிலே:
புறங்கூறிப் – ஒருவருக்கு பின்னாலே அவரைப் பற்றி தூற்றிப் பேசி
பொய்த்து – பின்பு இனியர் போல பொய்யாக
உயிர் வாழ்தலின் – உயிர் வாழ்ந்தோம் என்பதை விட
சாதல் - இறந்துபடுதல்
அறங்கூறும் – அறநூல்கள் சொல்லும்
ஆக்கம் தரும் – செல்வங்களைத் தரும்

புறம் பேசாதவனாயிருத்தல் நன்று, அறனற்றன செய்தாலும் புறம்பேசும் பொய்மை இல்லாதிருத்தல் என்று சொல்லி என்று முதல் இரண்டு குறள்களிலும் சொல்லி, இப்போது அவ்வாறு வாழ்வதைக் காட்டிலும் இறந்துபடுதலே என்று கூறுகிறார் வள்ளுவர். சீ! சீ! இப்படியும் ஒரு பிறவியாக வாழ்வதிலும், ஒருவர் இறந்துபோனால் மறுமையிலாவது அறநூல்களில் சொல்லப்படுகிற செல்வங்களைத் தரும் என்கிறார் வள்ளுவர்!

மாற்றாரைத் தூற்றி வாழ்வதிலே இன்பம் காண்பவர், ஏன் இறந்து படவேண்டுமென நினப்பார்? அதனால் இக்குறள் அவர்களுக்குப் பொருந்தாது. சிலநேரங்களில், தங்கள் வாழ்வாதாரத்துக்காக, பிறருக்கு தீய துணையாக, மற்றவரை தூற்றிச்சொல்லும் கட்டாயம் சிலருக்கு நேருவதுண்டு, அவர்களாக தூற்றும் குணமில்லாதவராக இருந்தாலும். அத்தகைய இக்கட்டான நேரங்களில் பொய்யென்றறிந்தும் பிறரைத் தூற்றி வாழ்வதை விட பொய்யோம், பிறரை புறங்கூறோம் என்றிறத்தல் நன்று என்பதையே வள்ளுவர் இக்குறளில் சொல்கிறார்.

புறங்கூறுதலாகிய பொய்மை என்று இக்குறளிலும் முந்தையகுறளிலும் கூறுவதன் காரணம் என்ன? பெரும்பாலும் ஒருவரைப்பற்றி அவருக்கு பின்புறமாக அவதூறு பேசி தூற்றுவதையே புறங்கூறுவது என்பார்கள். அவ்வாறு கூறப்படும் துற்றலானது, மிகைபடுத்தப்பட்டதாகவே இருக்கவேண்டும், அதனாலேயே அது பொய்மையை தன்னகத்தே கொண்டதாக ஆகிவிடும். தவிர அவ்வாறு புறம்பேசுகிறவர்கள் மற்றவர்களிடையும், எவரைப்பற்றி புறங்கூறினார்களோ, அவர்களிடமும் பொய்யாக இன்முகம் காட்டி பேசுபவர் என்றும் பொருள்படும்.

இன்றைய குறள்கள் இரண்டுவித கருத்தையும் சொல்வதற்காக எழுதப்பட்டன.

இன்றெனது குறள்(கள்):
பின்தூற்றி முன்னகைக்கும் பொய்வாழ்வின் சாதலே
நன்னூல்கள் நல்வளமென் கும்
pinthURRi munnagaikkum poivAzhvin sAdhalE
nanUlgaL nalvaLamengum

பின்தூற்றிப் பொய்சொல்ல வாழ்தலினும் சாதலே
நன்னூல்கள் நல்வளமென் கும்
pinthURRi poisolli vAzhdhalinum sAdhalE
nanUlgaL nalvaLamengum                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...