20th
October, 2012
அறனழீஇ அல்லவை செய்தலின்
தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
(குறள் 182:
புறங்கூறாமை அதிகாரம்)
Transliteration:
aRanazhIi allavai
seidhalin thIdhE
puRanazhIip poiththu nagai
aRanazhIi –
Destroying what is virtuous
allavai - being sinful
seidhalin thIdhE
– worse than and doing that
puRanazhIip -
talking slanderously about someone
poiththu - and when later seeing them
nagai –
pretends to be smiling and taking to them falsely
This
verse is the continuation of the previous verse. Destroying the virtues,
indulging in sinful activities is bad. Worse that would be to speak
slanderously about someone, and when seeing that person, as if nothing
happened, have a smile and carry on a fasles conversation.
Distinctly
from other commentators, kAlingar seems to have interpreted this verse more
meaningfully. He seems to imply, to talk about others in their absence that too
filled with lies and to laugh at others is wrong. It is inevitable to say the
bad qualities of someone, in their absensce to others to caution them. It can
not be condemned as wrong doing of slander. It may simply be to caution others.
So, he refers to the slanderous talk filled with lies and he condemns only
that.
In recent
times, less than two centuries back, Mayavaram vEdanAyakam PiLLai in his work “nIdhi
nUl” has devoted an entire chapter on this topic. He says, good people will not
slander anybody in their absence. vEdanAyakam
PiLLai further says, different from vaLLuvar, even if it is truthful, one must
not indulge in slanderous talk. It would be equivalent to a lie. Even lying is considered truthful in situation, if we can say good things about someone in their absence.
“Even destroying virtues
and being sinful are acceptable
Than to speak slander and
have a false smile as affable”
தமிழிலே:
அறனழீஇ –
அறத்தினை அழித்து
அல்லவை –
பாவமான செய்கைகளை
செய்தலின் தீதே – செய்வதைக் காட்டிலும் தீமையாம்
புறனழீஇப் –
ஒருவரை இழித்துப் புறங்கூறி
பொய்த்து – அவரைப்
பின்பு காணும்போது பொய்யாக (இது பலரின் உரையையும் ஒத்தது). அவ்வொருவரைப் பற்றிப்
பொய்யானவற்றைப் பிறரிடம் பேசி
நகை –
அவரிடம் சிரித்துப் பேசுதல் (ஏளனமாக செய்து)
கடந்த
குறளின் தொடர்ச்சியாக இக்குறள் கருத்து சொல்லப்படுகிறது. அறனை அழித்து, பாவமான
செய்கைகளை செய்வதிலும் தீமையாம். ஒருவரைப் பற்றி புறம்பேசிவிட்டு, பின்பு
அவரைக்காணும் போது பொய்யாகச் சிரித்துப் பேசுதல். புறங்கூறுதலே பெரிய தீமை. அதைவிட
பெரிய கேடு, அப்படி புறங்கூறியவரே தாம் புறம்பேசியவரைக் காணும்போது, பொய்யாக
சிரித்துப் பேசுதல்.
எல்லோரும்
இவ்வாறே பொருள் கூறியுள்ள போதிலும் காளிங்கரின் உரை சரியானதாகப் படுகிறது. இவ்வுரைப்படி,
ஒருவரைப் பற்றிப் புறங்கூறி என்பது மட்டுமல்லாமல், அதுவும் பொய்யானவற்றைக் கூறி
ஏளனம் செய்து பிறரோடு எள்ளி நகையாடுவது. இவ்வாறு பொருள் கொள்வது பொருந்தி
வருகிறது. ஒருவரைப்பற்றிய அவரது விரும்பத்தகாத உண்மை செய்திகளை சில நேரங்களில்
பிறரோடு பேச நேர்ந்துவிடுகிறது. புறம்பேசுதல் என்றாலும் தவிர்க்க முடியாதது. இதை ஒருவரை எச்சரிக்கும் விதமாகவும் இருக்கலாம்.
இதை முற்றிலும் தவறென்று கூற முடியாது. அதனாலேயே “பொய்த்து நகை” என்று சொல்லி “பொய்யானவற்றைச்
சொல்லி” எள்ளி நகையாடுவதைத் தான் கண்டிக்கிறார் வள்ளுவர்.
நீதிநூல்
எழுதிய முனிசீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, “தாம்பழியுளரால் தகுதியோர் பிறர்நோம்படி
யவர்குறை நுவலுவார்களோ” என்பார். இவர் வள்ளுவருக்குப் பிறகு புறங்கூறுதலைப்பற்றி
ஒரு அதிகாரமே எழுதியுள்ளார். பிறர் மனம் வருந்தும்படி அவர் குறையை அவரில்லாத இடத்துச்
சொல்லுதலாகிய புறங்கூறுதலை தக்கவர் கூறார்; கூறின், புறங்கூறுவார் மேல் பழி சுற்றும்
என்னும் உண்மை உணர்தலான். என்கிறார்.
அவரே
வேறு பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
இன்னலே யேதிலார்க் கிழைக்கு
மச்சொலே
முன்னமெய் யென்னினும் முழுப்பொய்
போலுமாம்
அன்னவர் குறையினை யறிந்து மின்றெனப்
பன்னுபொய் மெய்யினும் பாடு டைத்தரோ.
பிறர்க்குத்
துன்பம் தரக்கூடிய சொல், வாய்மையாக இருப்பினும் பொய்ம்மையாம். அவருடைய குற்றத்தை உணர்ந்தும்,
இல்லையென்று பொய் சொல்வது மெய்ம்மையாம். இப்பாடல் வள்ளுவரின் கருத்துக்கும் மேலே
சென்று புறங்கூறாமையை வலியுறுத்துகிறதாக அமைகிறது. உண்மையாக இருப்பினும் புறங்கூறாமல், பொய்யாக
நல்லவற்றைக்கூறினாலு, அதுவே வாய்மை என்கிறார்.
இன்றெனது
குறள்:
தீதாம் அறன்மறுத்து
செய்தீதின் பின்தூற்றி
ஓதாப்போல் பொய்ப்புன்
சிரிப்பு.
thIdhAm aRanmaRuththu
seithIdhin pinthURRi
OdhAppOl poippun sirippu.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam