அதிகாரம் 19: புறங்கூறாமை (Not speaking
slanderous)
[Slander is talking behind somebody’s back
with false and malicious intentions. Also known as defamation, calumny,
vilification, traducement, etc., it is a negative communication implied to be
factual, done by famacides, with an intention of ruining another’s reputation among known people of the community, society. Since this as bad a trait as
jealousy and covetous, it is placed after these chapters. Regardless of the
order, talking behind someone’s back is plain gossip and is the way of lowly
characters]
19th
October, 2012
அறங்கூறான் அல்ல செயினும்
ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
(குறள் 181:
புறங்கூறாமை அதிகாரம்)
Transliteration:
aRangkURAn
alla seyinum oruvan
puRangkURAn
enRal inidhu
aRangkURAn – not doing what is
acknowledged to be virtuous
alla* - deeds which are not virutous
seyinum – even if such* are done
oruvan – a person
puRangkURAn - if does not
indulge in slanderous talk
enRal – to live so
inidhu – is a sweet trait
Even if a person does not do what are stipulated as
virtuous deeds, and does only sinful deeds, if the person does speak
slanderously, that itself is considered good. Like in many other chapters,
vaLLuvar begins this chapter with a general statement on this topic. Bharatiyar,
to get children trained not to speak slanderously advices so by saying “puRam sollalAgAdhu pAppA”.
All works on virtuous code of coduct admonish slanderous speech. NAladiyAr says, wisemen would wish that they
become mute, if a situation arises to speak slanderously about somebody.
vaLLalAr, a recent saint poet warns people not to mix with slander-speaking
people( “uLonRu vaiththup puRam onRu
pEsuvOr uRavu kalavAmai vENDum”).
“Even ignoring
virtues and be sinful are allowable
If the one avoids sladering to be conisdered noble”
தமிழிலே:
அறங்கூறான் - இஃது அறம் என்று சொல்லக்கூடியவற்றைச் செய்யாது
அல்ல – அறத்திற்கு புறம்பான பாவங்களைச்
செயினும் -
செய்தாலும்
ஒருவன் –
ஒருவர்,
புறங்கூறான் –
மற்றவர்களை அவரில்லாத நேரத்தில் பிறறிடம் தூற்றிப் பேசாமல் இருப்பவர்
என்றல் -
என்றிருப்பது
இனிது-
இனிமையான ஒன்று
ஒருவர் அறமென்று சொல்லப்பட்டவையை செய்யாமல், பாவங்களை
செய்தாலும், மற்றவர்களை தூற்றி அவர்களுக்கு பின்னால் பேசுகிறவன் இல்லை என்றிருதல்
நன்றாம். வள்ளுவர் மற்ற அதிகாரங்களில் சொல்வதுபோல், பொதுக்கருத்தாகக் கூறுவது இது.
பாரதியாரும் தன்னுடைய பாப்பா பாட்டிலே, “இளமையில் கல்” என்பதற்கு ஏற்றவாறு “புறஞ்சொல்லாலாகாது
பாப்பா” என்பார்.
உலகநாதர் தன்னுடைய உலகநீதி என்ற நூலில் “போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்”, “காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம், புண்படவே
வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம், புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்று
சொல்லுகிறார். வள்ளாலார் சுவாமிகள் “உள் ஒன்று
வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று சொல்கிறார். எல்லா
நீதி நூல்களும் புறங்கூறாமையை இழிந்து உரைப்பதோடு, புறங்கூறுவாரோடு சேருவதையும்
வேண்டாமென்கின்றன.
பெரியோர்
பெருமையைப் பற்றி பேசும் அதிகாரத்தில், நாலடியார், “பிறர் மறையின்கட் செவிடாய் திறனறிந்து ஏதிலாரிற்கட் குருடனாய் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு” என்னும்.
அதாவது தீமைதரும் புறங்கூற நேரின் ஊமையாகிவிட வேண்டுமென்ற குணமுடையவரே மேலோர்
என்கிறது இப்பாடல். “இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் பழிப்புறம் சொல்லாப் பண்பினன்”
என்று புறங்கூறுதலை பழித்து, கூறாததை பண்பு என்றும் சொல்கிறது பெருங்கதையில் வரும்
இவ்வரிகள்.
இன்றெனது
குறள்:
சொல்லும்
செயலும் அறமொழிந்தும் பின்தூற்றா
நல்லொழுகல் எல்லோர்க்கும்
நன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam