அக்டோபர் 18, 2012

குறளின் குரல் - 189


18th October, 2012

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
                  (குறள் 180: வெஃகாமை அதிகாரம்)

Transliteration:
iRaleenum eNNAdhu veggin viRaleenum
vENDAmai ennum serukku

iRal – devastating end, destruction
eenum – gives
eNNAdhu  - not thinking that it is wrong
veggin – coveting others possessions
viral – pride, victory
eenum - gives
vENDAmai  ennum - not desiring such illgotten wealth
serukku – rightful happiness or wealth

Without thinking about the repercussions, coveting others belongings will bring upon a ghastly end or destruction to a person, which can be wealth or life.  When someone is able to not desire such illgotten wealth, that itself will bring pride and victory to a person, which is better wealth. Why is it victory in addition to pride? Is it not winning over senses a victory?

Destruction brought forth because of coveting is because of the sin that it is and the enemity followed by smear as a result.  As the end verse of this chapter, vaLLuvar sums it up with the ill effects of coveting and good effects of not doing so.

The three chapters of not desiring others spouse(piRani vizhayAmai) , not desiring others possessions (veggAmai) and not thieving (kaLLAmai) are inter-related. The underlying idea is not taking away other belongings knowingly or unknowingly.  Perhaps vaLLuvar could have thought that by saying the samething in the specific contexts again and again, it could better be embedded in the minds of the people. But all of them have a fundamental basis of “wrong thinking”, avarice, jealous as the underlying bad elements. It is interesting that the word “veggAmai” has not been used much in other literary works other than vaLLuvar.

What would be the reason for him to keep these apparently similar topics in under different sub-cantos? veggAmai is under “illaRaviyal” (Chapters pertinent to family life) and kaLLAmai is under “thuravaRaviyal” (Chapters pertinent to ascetics). Perhaps the intention was to create separate code books for people of different pursuits.

A verse in Thirumanthiram 3rd thantra, of ThirumuLar, interestingly points out similar values as in chapters for ascetics in ThirukkuraL, as austerities to be practiced.

kollAnpoi kURAn kaLavilAn eLkuNan
nallAn aDakka muDaiyAn naDuchcheyya
vallAn paguththuNbAn mAsilAn katkAma
illAn niyamath thiDaiyil ninRAnE

“Destruction will be served for coveting, thoughtless!
  Not desiring illgotten brings the pride and success “

தமிழிலே:
இறல் – அழிவை, முடிவை
ஈனும் - தரும்
எண்ணாது – தவறென்று சிந்திக்காமல்
வெஃகின் – பிறர்பொருள் கவர்தல்
விறல்- பெருமை, வெற்றி
ஈனும் - தரும்
வேண்டாமை என்னுஞ் – விரும்பாமை என்கிற (அவ்வழியாக வரும்)
செருக்கு – செல்வம், அதனால் வருகிற மகிழ்ச்சி

ஒரு தவறான குற்றமாகிய செயலைச் செய்வதனால், ஏற்படும் பின்விளவுகளைப் பற்றி சிந்தியாமம், பிறர் பொருள் கவருதலாகிய குற்றம், ஒருவருக்கு அழிவாகிய முடிவைத் தரும். அவ்வழிவு செல்வம், வாழ்வு, அல்லது உயிராகக்கூட இருக்கலாம். அவ்வாறு கவர்தலால் வருஞ்செல்வம் வேண்டாம் என்கிற மகிழ்ச்சி (அதுவே செல்வமுமாம்) பெருமையும் வெற்றியும் தரும். பெருமை சரி, வெற்றி எவ்வாறு? வேண்டாம் என்பதே மனமாகிய புலனை வெற்றி கொண்டதற்கான அடையாளம்தானே?

அழிவு என்பது, கவருதலாகிய பாவம், அதனால் வரக்கூடிய பகை, பழி இவற்றினால்தான். இவ்வதிகாரத்தின் முடிப்புக் கருத்தாக கவராடலின் இழிமையைக்கூறி, அதனால் வரும் அழிவைக் கூறி, அவ்வாறு செய்யாமையினால் வரும் மகிழ்வைத்தரும் வெற்றியாம் பெருமைபற்றி கூறி முடிக்கிறார் வள்ளுவர்.

பிறன் மனை விழையாமை, வெஃகாமை, கள்ளாமை என்கிற மூன்று அதிகாரங்களினாலும், ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்துகளையே வள்ளுவர் கூறுகிறார். மூன்றுமே பிறர் உடமையைக் கவருதலாகிய குற்றம். கருத்துக்களைக் குறிப்பிட்ட காரணம் பற்றி சொல்வதால், மனதில் பதிய வாய்ப்பிருப்பதால் சொல்லியிருக்கலாம்; மூன்றுக்குமே அடிப்படை தவறான சிந்தனை, தமக்கில்லையென்றோ, அடுத்தவருக்கு மட்டும் இருக்கிறதே என்றோ பொறாமை, பேராசை இவைகள்தான். வெஃகாமை என்ற சொல்லை வள்ளுவரைத் தவிர வேறு யாரும் அதிகம் கையாண்டதாகத் தெரியவில்லை.

வெஃகாமையை இல்லறவியலிலும், கள்ளாமையை துறவறவியலிலும் வைத்ததன் காரணம் என்னாவாயிருக்கும்?  வெஃகாமை, கள்ளாமை` என்பவற்றுள் வெஃகாமை பொருள் பற்றியும், கள்ளாமை அதுமட்டுமல்லாது புகழ், நூற்பொருள், மெய்ப்பொருள் உணர்வு முதலியன பற்றியும் கூறுவது ஒரு காரணமாய் இருக்கலாம். அன்றியும், இவ்வியல் வழி பகுப்பு, ஒவ்வொரு வழி சேர்ந்தாருக்குமான வாழ்வியல் கையேடாக இருக்கவேண்டி செய்திருக்கலாம்.

திருமந்திரப்பாடல் மூன்றாம் தந்திரத்தில் துறவோருக்கான இயமங்களைப் பற்றிக் கூறும் போது, வள்ளுவர் துறவறவியலில் வைத்த அதிகாரக்கருத்துக்களையே பெரும்பாலும் திருமூலரும் வரிசைப்படுத்தியுள்ளதைப் பார்க்கலாம்.

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.
 

இன்றெனது குறள்(கள்):
கொன்றிடும் சிந்தியாது வவ்வுதல் – பெற்றிடும்
வென்றியாம் வேண்டாச் சிறப்பு
konRiDum sindhiyAdhu vavudhal peRRiDum
venRiyAm vEnDAch siRappu.

விளைவறியா வவ்வல் அழிக்கும்வேண் டாமை
இளைப்பிலா வெற்றி தரும்
viLaivaRiyA vavval azhikkumvEN DAmai
iLaippilA venRi tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...