22nd
October, 2012
கண்ணின்று கண்ணறச்
சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச்
சொல்
(குறள் 184:
புறங்கூறாமை அதிகாரம்)
Transliteration:
kaNNinRu
kaNNaRach chollinum chollaRka
munninRu
pinnOkkAch chol
kaNNinRu – facing somebody directly
kaNNaRach – without decency, or as if seen the unseen, or blamingly
chollinum – even if a person speaks like that (it is better that
way)
chollaRka – Never speak
mun inRu – when a somebody is not in person or present
pinnOkkAch – without thinking of repurcussions
chol – words spoken as slanderously
Today’s verse is another one of those sayings that go like
this: “Even if you do that, it is
nothing wrong - but don’t do this!” VaLLuvar uses this type of construction in many
verses in ThirukkuraL. This verse says: “Even
speaking ill of someone infront of the person, is acceptable. But, speaking
behind slanderously should be avoided”.
Most commentators have interpreted as above. To speak of
one mistake/misdeed as better than other one can not be accepted as coming out VaLLuvar’s
thinking! His advice is addressed in
second person and hence should be interpreted thus: “Even if somebody abuses or
blames us on our face for deeds we have not done, we must refrain from talking
ill of them, especially in their absence. Avoiding slander even for those who
are mean to us on our face is what is recommended here. It is good to remember
another verse of VaLLuvar – “innA
seidhArai oRuththal”, here, which seems to fit this context also.
“Even
if somebody illspeaks without decency on our face,
Refrain slanderous talk about them as an act
of disgrace”
தமிழிலே:
கண்ணின்று –
ஒருவர் முகத்துக்கு எதிராக நின்று
கண்ணறச் –
நாகரிகமில்லாமல், பாராதவொன்றைப் பார்த்ததாக, பழியாகச்
சொல்லினும் -
சொன்னாலும்
சொல்லற்க –
சொல்லாமல் இருக்கவேண்டும்
முன் இன்று - ஒருவர் தனக்கு முன்பாக இல்லாத
நேரத்தில், (அவருக்கு புறமாக)
பின்நோக்காச் –
பின்விளவுகளை ஆராயாமல்
சொல் –
சொல்லுகின்ற புறங்கூறலை, பின் தூற்றிப் பேசுவதை
இன்றைய குறள், “அவ்வாறு செய்தாலும் தவறில்லை, ஆனால் இவ்வாறு
செய்யாதீர்” என்னும் முறையிலே அமைந்தது.வள்ளுவரின் குறள்களில் இதுவும் வாடிக்கையான
ஒரு முறைதான். ஒருவரை அவர்முன் நேரடியாகத்தூற்றி, பார்க்காதவற்றைப் பார்த்ததுபோல குற்றஞ்
சொல்லுவதும், நாகரிமில்லாமல் தூற்றூவதும் கூட பேசலாம், ஆனால், ஒருவரின் முதுக்குப்
பின்னாக, அவர் இல்லாத போது, அவரைப்பற்றித் அவதூறாகப் பேசுவது நாகரிகமில்லாத
செயலாதலால், அவ்வாறு செய்யாதொழிக என்கிறார் வள்ளுவர்.
மேற்காணுவது பொதுவான உரையாசிரியர்களின் விளக்கம்! இவ்வாறு
மற்றொரு தவறை கொடியதாகக் காட்டுவதற்காக, ஒருதவறை அதற்கு இது மேல் என்று சொல்வது
வள்ளுவரின் சிந்தனையாக ஏற்றிச் சொல்வது தவறு. இக்குறளின் பொருள் இப்படித்தான்
இருக்கவேண்டும்: ஒருவர் நம் முகத்துக்கு நேரே நின்று நம்மைப் பார்த்து, அவர்
நம்மைப்பற்றிப் பாராத ஒன்றைப் பார்த்ததாகச் சொல்லித்துற்றினாலும், அதற்காக நாம்
அவரைப்பற்றி அவரில்லாதபோது, புறங்கூறிப் பேசுதல் கூடாது. இவ்வாறு பார்க்கும் போது,
“இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்ற
குறளுக்கு இயைந்து பொருள் வருகிறது.
கீழ்காணும் நாலடியார் பாடலைப் பார்ப்போம்.
கணமலை நன்னாட.
கண்ணின் றொருவர்
குணனேயுங்
கூறற் கரிதால், - குணனழுங்கக்
குற்றம்
உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்(கு)
எற்றால்
இயன்றதோ நா
மலைத்தொடர் நாட்டு மன்னா!
பெரியோர், ஒருவரை நேராகப் பார்த்து அவர்க்கில்லா குணங்களை இருப்பதாகப் பொய்
கூறார்! ஆனால் சிற்றறிவினரோ ஒருவரிடம்
உள்ள நல்லகுணங்களை மறைத்துவிட்டு, அவர்களது குறைகளையே பெரிதாகச் சொல்லுவர்!
இத்தகையவர்களுக்கு நா என்பது எதனால் அமைந்தது? என்கிறது இப்பாடல்.
இன்றெனது
குறள்:
நேர்நின்று
தூற்றலே நன்றெனலாம் – பின்தூற்றிப்
பேர்கெடுத்துப்
பேசு தலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam