செப்டம்பர் 16, 2012

குறளின் குரல் - 157


16th September, 2012

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
                  (குறள் 148:  பிறனில் விழையாமை அதிகாரம்).

Transliteration:
piRanmanai nOkkAdha pErANmai sAndROrkku
aRanondRO AnRavozhukku

piRanmanai  - another man’s wife
nOkkAdha – not looking
pErANmai – manliness of great order
sAndROrkku – for learned
aRan - virtue
ondRO – exclamatory word!
AnRa - respectable
Ozhukku - discipline

The use of the word “great manliness” (pErANmai-பேராண்மை) in this verse expresses a great thought. Society respects a man for his manliness and valor based on how expertly he can handle the external enemies; but conquering the internal enemies such as lust and anger is difficult - that too conquering lust for other women is easier said than done for most men, who are not ingrained in morality. Hence a man with such control is respected as the man with great manliness and is regarded as a respectable virtue in a man.

Ki.vA.jA’s research commentary cites a reference in “sIvaka chintAmaNi” which says that those who lust other man’s wife are not considered men at all.

nAlaDiyAr, (“ummai valiyAR piRar manaimER senRArE, immai, aliyAgi ADi uNbAR”) says that a man who uses his strength and wealth to desire and indulge in illicit relationship with another man’s wife will not be born as either man or a woman but a hermaphrodite, eunuch .

“Not lusting, other man’s wife is a virtue of great manliness,
  A discipline of learned men of repute and thoughtfulness”

தமிழிலே:
பிறன்மனை – மற்றவனது மனைவியை
நோக்காத – தவறான எண்ணத்துடன் பார்க்காத
பேராண்மை – காமத்தை வென்ற ஆண்மை (மற்ற பகைகளைவிட உடனிருக்கும் பகை)
சான்றோர்க்கு - கற்றறிந்தோர்க்கு
அறன்- நல்ல தருமம்
ஒன்றோ – வியப்புச் சொல்
ஆன்ற – மாட்சிமையோடு கூடிய
ஒழுக்கு - ஒழுக்கம்

இக்குறளில் காணப்படும் “பேராண்மை” என்ற சொல் சிறப்பானது. பொதுவாகப் புறப்பகைகளை வெல்லுதல் ஆண்மை என சமூகத்தால் மதிக்கப்படுகிறது. ஆனால், அகப்பகையான காமம், வெகுளி போன்றவற்றை வெல்லுதல்தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது. மற்றவனது மனைவியை தவறான எண்ணத்துடன் கருதாத கற்றறிந்தோருக்கு பேராண்மை எனப்படுவது, வியத்தகு, மாட்சிமையோடு கூடிய ஒழுக்க நிலையாகும்.

கி.வா.ஜவின் ஆய்வுரை ஒப்புமையாக, சீவக சிந்தாமணியில் வரும் கருத்தைக் இவ்வாறு காட்டுகிறது: “பெரியவாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கும் மாந்தர் ….. ஆண்பிறந்தார்கள் அன்றே

இனி நாலடியார் பாடல் பிறன்மனைவிழைவோர் ஆணில்லை என்பதுமட்டுமில்லாமல், அலியாகவும் ஆகிவிடுவர் என்று கூறுவதைப் பார்க்கலாம்!

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

நல்லகுணமின்றி, கீழினத்தாரோடு சேர்ந்து, பெரியமார்களை உடைய பெண்களின் தோளிலே முயங்க விரும்பி, ஒருவன் இப்பிறப்பில் தனக்கு உள்ள செல்வம், வலிமை முதலியவற்றால் மற்றவர் மனைவியரை கூடுவாராயின், மறுபிறப்பில் அவர்கள் ஆணும் பெண்ணுமில்லா அலியாகி கூத்தாடி வயிறு பிழைக்க நேரிடும்.

இன்றெனது குறள்:
பிறனில் பிறழாது ஓங்கிடுநல் ஆண்மை
அறவொழு கான்றோருக் காம்
( பிறன்+இல், அறவொழுகு+ ஆன்றோருக்காம்

piRanil piRazAdhu OngiDunal ANmai
aRavozhu kAnROrukkAm.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...