17th September,
2012
நலக்குரியார் யாரெனின் நாமநீர்
வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
( குறள் 149: பிறனில் விழையாமை அதிகாரம்).
Transliteration:
nalakkuriyAr yArenin
nAmanIr vaippin
piRarkkuriyAl thOL thOyA
dhAr
nalakkuriyAr - getting all merits
yArenin - who is worthy of
(getting)
nAmanIr – wonderous oceans
vaippin – surrounded by (such
oceans)
piRarkkuriyAl – otherman’s wife’s
thOL - shoulder
thOyAdhAr – does not take refuge to
have illicit relationship
The word meaning of “nAm” is given as “fear” in Tamil
dictionaries.(of course it means “us” too.) So, all commentators have
interpreted “nAma nIr” to mean a fearsome sea. The word “nAmam” has several
meanings such as wonder, accepting, doubt, anger, certainty, abuse and remember
etc. Among all these different meanings, the wonder seems to fit the context,
because an ocean is always a vast wonderment which has several wealths in it.
It is certainly fearful to cross, a big ocean, but fearing that, no journey has
everbeen stopped.
Mostly vaLLuvar does not use phrases that are meaningless
or some sort of unnecessary fitting to the conveyed meaning; but the addition
of the words “nAmanIr vaippu” to denote this world is somewhat difficult to
understand. In fact, even to mention, “In this world” is not required to convey
the intended meaning here.
Perhaps, he meant to say, in this difficult world
surrounded by fearful ocean, the life is so very difficult to lead with all
kinds of temptations, especially the one of coveting other man’s wife.
Undersuch difficult conditions, if someone does not succumb to such temptations
he is worthy of all good to happen to him. Even that is hard to imagine as he
does not display a defeatist’s attitude in other verses.
The thought expressed here in is very simple. A person is
worthy of getting all the wealth and good things if he does not covet
somebody’s wife and desire debasing pleasure with her.This thougt has been
expressed as question in todays’ verse.
“Who merits better, in this
sea sourrounded world, to get all wealth,
Other than one who does not covet another
man’s wife in stealth”
தமிழிலே:
நலக்குரியார் – எல்லா நன்மைகளும்
பெறத்தக்கவர்
யாரெனின் – யாரென கேட்டால்
நாமநீர் – விந்தைகள் பல நிறைந்த
பெருங்கடல் (சூழ்ந்த). உரையாசிரியர்கள் அச்சம் நிறைந்த என்பார்கள்
வைப்பின் - இவ்வுலகில்
பிறர்க்குரியாள் – மாற்றானுக்கு உரிமையான
அவனது மனைவியின்
தோள் – தோள்களிலே முயங்கி
தோயாதார் – தோய்ந்து, பாவத்தைச்
சேர்க்கும் சிற்றின்பத்தில் அமிழாதார்.
“நாம்” என்ற சொல் அச்சத்தைக் குறிப்பதால் பரிமேலழகர் உள்ளிட்ட
உரையாசிரியர்கள் “நாமநீர்” என்பதற்கு அச்சத்தைத் தரும் கடல் என்று பொருள்
செய்திருக்கிறார்கள். “நாமம்” என்றால் “வியப்பு”, ”இணக்கம்”, “ஐயம்”, “கோபம்”,
“நிச்சயம்”, “நிந்தை”, “நினைப்பு” போன்ற பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். இவற்றுள்
“வியப்பு” என்கிற சொல் பொருந்திவருகிறது. கடலானது பல வியத்தகு பரிமாணங்களையும்,
செல்வங்களையும் தன்னகத்தே கொண்டது. கடல் என்பது கடப்பதற்கு அரியது என்கிற
அச்சத்தைத் தரக்கூடியதுதான். ஆனால் அவ்வச்சத்துக்காக மனிதன் ஒருநாளும் தன்னுடைய
பயணத்தை நிறுத்தியதிலை, தேடலை மூடவுமில்லை.
பெரும்பாலும், வீணான சொற்களைச் சேர்க்காத வள்ளுவர்,
இக்குறளில் “நாமநீர் வைப்பு” என்று இவ்வுலகைக் குறிக்கக் காரணம் என்ன என்று
தெரியவில்லை? இவ்வுலகின் கண் என்பதும் கூட தேவையில்லாத சேர்க்கை. பலகுறள்களில்
அதைச் சொல்லாமலேயே, இவ்வுலகினர் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் வள்ளுவர்.
ஒருவேளை, வாழ்க்கைக் கடலைப்போல கடினமான, அச்சந்தரும்
அபாயங்களை உள்ளடக்கியது, கடப்பதற்கு பல சவால்களை, தவறான தூண்டுதல்களை கொண்டது,
அதிலும் பிறன்மனையைக் கவர்ந்தடைதல் போன்ற பாவங்களில் மனிதனை செலுத்தக்கூடியது,
அதனால் அச்சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, பிறழாமல் நடக்கும் மனிதனுக்கு, எல்லா
நன்மைகளும் உரியன என்ற பொருளில் சொல்லியிருக்கலாம்.
இக்குறள் சொல்லவரும் கருத்து மிகவும் எளிமையானது. இவ்வுலகில்
எல்லாவித நன்மைகளையும் பெறத் தகுதியுடையவர், மாற்றான் மனைவியை விரும்பி, சேர்ந்து,
அவளோடு தோளோடு முயங்கிக்கிடக்கிற இன்பத்தை நாடாதவன் ஒருவனே. இதையே கேள்வியாக,
“பிறன்மனை விழையாப் பெருந்தகைமையுடையானை அன்றி வேறு யார்க்கு நலங்கள் பெறத்
தகுதியுண்டு” என்று வினவுகிறது இன்று எனது குறள்.
இன்றெனது குறள்:
பிறன்மனை நாடார்க்கு அன்றி
நலங்கள்
பெறத்தக்கார் யாவர் உளர்?
piRanmanai nADArkku anRi
nalangaL
peRaththAkkAr yvAvar uLar?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam