15th September,
2012
அறனியலான் இல்வாழ்வான் என்பான்
பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
( குறள் 147: பிறனில் விழையாமை அதிகாரம்).
Transliteration:
aRaniyalAn ilvAzhvAn enbAn
piRaniyalAL
peNmai nayavA dhavan
aRaniyalAn – by virtuous code
ilvAzhvAn enbAn – one who lives his family
life
piRaniyalAL – one who is other man’s
wife’s
peNmai – the womanhood
nayavAdhavan – does not desire
A simple verse that states: A person that leads an ethical family
life by the codebook of virtuous conduct will not covet another man’s wife.
Though the verse has very straightforward thought put forward, by saying that people
that live by virtous code will not desire other man’s wife, vaLLuvar has once again
stressed the underlying thought of the canto on virtues (aRaththuppAl).
Once again, this is another chapter, where, vaLLuvar has
said the same thought in many ways, seemingly repetitive or something which are
very obvious. The difference in this verse is that it is said from the
perspective of a family man.
A family man living a
virtuous life,
Has no desire for another
man’s wife
அறனியலான் – அறநெறி வழிமுறைப்படி
இல்வாழ்வான் என்பான் - தன் இல்வாழ்க்கையை நடத்துபவன் என்பவன்
பிறனியலாள் – பிறனுக்கு உரிமையுள்ளவளான
பெண்மை – ஒருத்தின் பெண்மையை
அடையவேண்டும் என்கிற
நயவாதவன் – தவறான எண்ணத்தை
நினைக்காதவன்
அறநெறி நூல்களில் கூறியுள்ள நெறியான வாழ்க்கையை வாழும்
இல்லறத்தானுக்கு, மற்றவருக்கு உரியவளான ஒரு பெண்ணை, அவளது பெண்மையைக் கவரவேண்டும்
என்கிற எண்ணம் ஏற்படாது. இக்குறளால் சொல்லப்பட்ட கருத்து நேரடியானது, எளிதானது
என்றாலும், அறநெறிப்படி வாழ்கின்றவர்கள் பிறன்மனையை இச்சிக்கும் இழிமையைச்
செய்யார் என்று கூறி, அறத்துப்பாலின் அடிக்கருத்தாக இருக்கும் அறன்வலியுறுத்தலைச்
செய்கிறார் வள்ளுவர்.
இவ்வதிகாரத்தின்கீழ், சொல்வதற்குரியனவெல்லாம் சொல்லி
முடித்தபின்னர், மேலும் என்னசொல்லலாம் என்று சிந்தித்து சொல்லப்பட்டது போல்
எல்லோருக்கு தானாகவே தெரியுமொரு கருத்து.
இன்றெனது குறள்:
பிறற்குரிய பெண்மை விழையான்
அறவாழ்
வறவற்ற இல்வாழ் வினன்
piRarkuriya peNmai
vizhaiyAn aRavAzh
vaRavatRa ilvAz vinan
(அறவாழ் வறவற்ற ->அறவாழ்வு
அறவு அற்ற = அறவாழ்வு முறிவு அற்ற)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam