செப்டம்பர் 14, 2012

குறளின் குரல் - 155


14th September, 2012

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
                  ( குறள் 146:  பிறனில் விழையாமை அதிகாரம்).

Transliteration:
pagaipAvam achcham pazhiyena nAngum
igavAvAm illiRappAn kaN

pagai  - enemity (with defiled wife of otherman, his relatives, friends and even with the town)
pAvam  - a cardinal sin, one of the major five sins, can destroy the entire clan
achcham  - fearful of getting caught
pazhi - disgrace
yena nAngum – these four (painful)
igavAvAm – will never leave the person ( of sin)
illiRappAn kaN –  one who covets and spoil other man’s wife.

A man that desire other man’s wife and is in coitally involved with her will earn lasting enemity with her husband, relatives, friends and even the whole town.  Like the saying, enemity with the entire town will destroy from the roots and hence it has to be feared; enemity leading to fear will also bring scorn for the entire kith and kin; Placed among one of the worst five sins, desiring other man’s wife will not only bring misery in this birth, but for future births too. The dreadful four, enemity, fear, scorn and worst sin are what yielded by desiring other man’s wife.

nAlaDiyAr, previously oft quoted book of virtue by Jain monks has an entire chapter on this topic and there are three verses which details the four aspects mentioned in this verse. The verse “kANin kuDIppazhiyAm” asks, “This sin will bring scorn to the family, if caught will result in physical assault, will always keep the person in fear about being caught, will give lasting pain and misery. So, the man of this hateful sin, what pleasure do you get in this? “

The verse “accham peridhAl” says, “this act gives a a lot of fear, but only a little lasting pleasure; this act will also result in “capital punishment” (It still does in Arab countries) if caught; the sin will burn like as if put in the blast furnace, so people of virtuous character won’t even think about indulging in that sin.”

The verse “pukkaviDathachcham” asks, knowing this act only gives fear in all aspects, why woud somebody not think that this is shameful and be not indulgent?”

Fear, enemity, scorn and hateful sin, the dreadful four
Never leave the adulterer of another’wife, stay a sore

தமிழிலே:
பகை – பகை (பெண்டாளப்பட்ட மாற்றான் மனைவியின் கணவன், சுற்றம், நட்போடு, ஏன் ஊரோடும் கூட)
பாவம் – பிறன் மனவி நயத்தல் ஐம்பெரும் பாவங்களில் ஒன்று – குலத்தையே கெடுக்கக்கூடியது
அச்சம் – என்று மாட்டிக்கொள்ளுவோமோ என்கிற அச்சம்
பழியென – தீராத பழி வந்து சேரும்
நான்கும் – இந்த நான்கு தீமைகளுமே
இகவாவாம் – நீங்காது நிலையாக இருந்து துன்பந்தரும்
இல்லிறப்பான் கண் – மாற்றான் மனவியை விழைந்து பெண்டாளுவானிடத்தில்

பிறன்மனை நயந்து, பெண்டாளுபவன் தீராப்பகையைத் தேடிக்கொள்வான், அப்பெண்ணின் கணவன், சுற்றம், நட்பு, மற்றும் ஊரோடு கூட. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதால் அப்பகையானது அஞ்சுதற்கும் உரியது. பகையோடு பயம் மட்டுமல்லாது, தன்குலத்துக்கே தீராத பழியும் வந்து சேர்ந்து விடும்.
பஞ்சமா பாதகங்கள் என்றழைக்கப்படுபவற்றுள் ஒன்றான் இப்பாவம், இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் உறுத்து வாட்டும். இந்நான்கும் நிலையாக இருந்து நீங்காதுன்பமே தரும்.

நாலடியார், ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல், சங்ககால நீதிநெறி நூல்களில் திருக்குறளைப்போன்று பல கருத்துக்களைக்கொண்டது. பிறன்மனை விழையாமைக்குப் பத்து வெண்பாக்களைக் கொண்டது. இதில் மூன்றினைப் பார்ப்போம்.

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

மேற்காணும் பாடல், பிறர்கண்டுவிட்டால் குடிக்கே பழிவரும், கையும் களவுமாகப் பிடிபட்டால் காலை ஒடித்துவிடுவார்கள், அகப்பட்டுக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் ஆண் என்று நெஞ்சை நிமிர்த்தும் அச்சமின்மையும் போகும், தவிர இச்செயலே ஆண்மையில்லாச் செயலாகும், நெடுங்காலத்துக்குத் துன்பத்தைத் தந்துவிடும், தீநெறியாளனே, இச்செயலால் நீ நுகர்ந்த இன்பம் எத்துணையென்று, இவற்றைச் சிந்தித்துப்பார்த்துச் சொல் என்று வினவுகிறது.

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.

இச்செயலால் அச்சம் பெருகிய வாழ்வுதான், ஆனால் அதற்கான விலையான இன்பமோ சிறிதளவே; நினைத்துப்பார்த்தால், இதற்கு அரச தண்டனையாம் கொலையே வாய்க்கும் (இன்றுகூட அரபு நாடுகளில்);  தீச்சூளை (கும்பி) நெருப்பினப் போல் நின்று சுட்டெரிக்கும்; இதனால் பிறன்மனையாளை சேருதலை பழிக்கும் பாவத்துக்கும் அஞ்சியவர் நினைந்துகூட பார்க்கமாட்டார்கள்.

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.

பிறன்மனையை நாடிப்போகும்போது அச்சம், அவளோடிருக்கும்போது அச்சம், சிற்றின்பச்சேர்க்கையிலும் அச்சம், இத்தீச் செயலை மற்றவர் கண்டுவிடக்கூடாதே என்று அச்சம், என்று எப்போதும் அச்சத்துக்குக்காரணமான பிறன்மனை விழையும் இழிசெயலை மட்டும் ஏன் எண்ணி வெட்கப்பட ஒருவன் நினைப்பதில்லை?

இம்மூன்றுப்பாடல்களாலும், வள்ளுவர் குறளில் காணப்படும் நான்கும் கூறப்படுவதைக் காணலாம்.

இன்றெனது குறள்(கள்):
நீங்காத நான்காம் பழிபகை பாவமச்சம்
தீங்கான இல்கெடுப்பார்க் கு
nIngAdha nAngAm pazhipagai pAvamachcham
thIngAna ilkeDuppArkku

நீங்கா பயம்பழி பாவபகை நான்குமென
தீங்குறும் இல்கெடுத்தார்க் கு
nIngAr bayampazhi pavApagai nAngumena
thIngurum ilkeDuththArkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...