செப்டம்பர் 13, 2012

குறளின் குரல் - 154


13th September, 2012

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
                  (குறள் 145:  பிறனில் விழையாமை அதிகாரம்)

Transliteration:
eLidhena illiRappAn eidhum enjAndRum
viLiyAdhu niRkkum pazhi

eLidhena – thinking easily available and attainable
illiRappAn – one who defiles another man’s wife
eidhum – will get
enjAndRum - always
viLiyAdhu – undying
niRkkum – here to stay
pazhi – scorn, disgrace

Because there is an easily available opportunity, if somebody, foregoes virtue and indulges in adultery with other man’s wife, he will only accrue undying, everlasting defame. When somebody leaves behind his wife home, on work for a few days, if another man construes the lady’s lonliness as an opportunity to dilute her determination and defiles her that will only give him undying opprobrious disgrace.

Like vaLLuvar, other authors of sangam and later literature have written on this topic. nAlaDiyAr, one of the equivalent works by Jain monks, has an entire chapter of 10 verses on this topic. It says that those who covet somebody’s wife will have disgrace (“piRanthAram nachchuvArch sErum pagai pazhi”) and if found out, the entire family will have disgrace (“kANin kuDippazhiyAm).  kamban talks about this in many places through many mouthpieces. mArIcha, kumbakarNa, vibIshanA  as advice to rAvaNA and even rAma to vAli on this topic. hanumAn says to rAvaNa, “thiRam thiRambiya kAmach cherukkinAl maRandhu thaththam madhiyin mayanginAr, iRandhu, iRandhu izhindhu ERuvadheyalAl, aRam thiRambinAr yAruLar AyinAr? – icchaith thanmaiuiniR piRarillinai nachchi nALum nagaiyura nANilan”. I

Thorughout rAmAyaNA, this message is coveyed in the context of rAVaNa and vAli- and also for people of such disgraceful character in the future.  But, as the world would have it, we do have amidst us, people of rAvaNA’s and vAli’s character.

Easy and opportunistic may be, it is for the adulterer to defile
Other man’s wife, but only for undying scorn and shame to pile.

எளிதென – இலகுவாக வாய்க்கிறதே என்று
இல்லிறப்பான் – மாற்றான் இல்லத்தாளை விழைந்து பெண்டாடுபவன், நெறி கடந்து சேருபவன்
எய்தும்  - அடைவான்
எஞ்ஞான்றும் - எப்போதும்
விளியாது – இறவாது, மாயாது
நிற்கும் - நிலைத்திருக்கும்
பழி – அவர் அடையக்கூடிய பழியானது.

எளிதாக வாய்ப்பு கிடைக்கிறதே என்று, மற்றவனது மனைவியை விழைந்து, நெறியினைக் கடந்து பெண்டாளுபவனுக்கு என்றுமே இறவாது நிலைத்திருக்கும் பழிதான் வந்துசேரும். ஒருவன் தன் மனையாளை, தன் வேலை நிமித்தமாக விட்டுச் செல்லும்போது, அவளுடைய தனிமை மற்றும் துணையின்மையை தனக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, ஒருவன் அவளை விழைந்து, மனதின் உறுதியைக் குலைத்து, பெண்டாளுவானேயானால், அது அவனுக்கு என்றும் நிலைத்திருக்கும் பழியைத் தந்துவிடும்.

“பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி”, “காணின் குடிப்பழியாம்  என்று நாலடியார் கூறுகிறது. வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியர், “தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே
” என்பார். திருக்குறளைப் போலவே, பிறன் நயவாமையைப் பற்றி, நாலடியார் ஒரு பத்துப்பாடல்களைக் கொண்டுள்ளது. படிக்கவேண்டியவை.  

இல்லிறப்பான் பழிகொள்வான் என்பதை பிணிவீட்டுப்படலத்தில் கம்பர் அனுமன் வாய்மொழியாக இராவணனுக்கு இவ்வாறு கூறுவார் “திறம் திறம்பிய காமச் செருக்கினால்மறந்து தத்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால் அறம்திறம்பினர் யாருளர் ஆயினார்?  இச்சைத் தன்மையினிற் பிறரில்லினை நச்சி நாளும் நகையுற நாணிலன்”.  யுத்தமந்திரப்படலத்தில் “ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, அறிவமைந்தாய் தீவினை நயப்புறுதல் செய்தனை” என்று கும்பகருணனும் இராவணனை இடித்து உரைக்கின்றான்.  “தேவியை நயந்துசிறை வைத்தசெயல் நன்றோ பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ” என்று மேலும் அவனே கேட்கிறான். இராமாயணம் முழுவதுமே பிறன்மனை நயத்தலை இடித்துரைக்கும் செய்தி, பலரது வாயிலாக வாலிக்கும், இராவணனுக்கும், இன்றும் இருக்கும் வாலி, இராவண குணத்தர்களுக்கும் சொல்லப்படுகிறது.  நல்லதை விடுத்து அல்லதை எடுத்துக்கொண்டு, இராவணனைக் கொண்டாடுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே!

இன்றெனது குறள்:
மாயாப் பழியடையும், வாய்த்ததென இல்கெடுப்பார்க்
கோயா தொருநா ளுமே
mAyap pazhiyaDaiyum, vAiththadhena ilkeDuppArk
kOyA dhorunA Lume

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...