12th September,
2012
எனைத்துணையர் ஆயினும் என்னாம்
தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
(குறள் 144: பிறனில் விழையாமை அதிகாரம்).
Transliteration:
enaithuNaiyar Ayinum ennAm
thinaiththuNaiyum
thErAn piRanil pugal
enaithuNaiyar – whatever greatness
Ayinum - they may have
ennAm - what use is it?
thinaiththuNaiyum – even to the amount of small morsel
thErAn – if he does not
understand the sin of
piRanil – other man’s wife
pugal – covet and defile
In the first three verses of this chapter, it is said that
those who stand virtuously will not desire somebody else’s wife; there is no senseless act worse than that; desiring
and defiling someelse’s wife is equivalent to being a dead person. In this
verse, vaLLuvar asks a question, what use is it to have all greatness if even a
small morsel of thought of not desiring somebody’s wife is not there in a
person?
As earlier said in a different chapter, we all know the
puranic story of the chief of all heavenly bodies, Indra desiring Agalya, wife
of Sage Gauthama, despite his glories, was cursed by the sage and was
humiliated.
Ravana, despite his riches, and glorious status as
valoruous king of Lanka, ruined his life, lost his subjects and his city and
eventually perished at the hands of Rama for wrongly desiring Sita, Rama’s
wife. Once again the mighty Vali eventually died in the hands of Rama for
coveting what is rightfully his brother’s, his land and wife.
Today’s equivalent verses have the same thought expressed
in two ways. The first one asks what use is it to be of virtues, whenr someone
that engages thoughtlessly in desiring somebody’s wife. The second one asks what
use is it to be glorious in other ways, when someone that engages thoughtlessly
in desiring somebody’s wife!
Defile other’s wife, not even
thinking about the vice
Is of what use for somebody
glorious otherwise?
தமிழிலே:
எனைத்துணையர் - எவ்வளவுதான் பெருமை
ஆயினும் - உடையவராயிருந்தாலும்
என்னாம் – அதனால் என்ன பயன்?
தினைத்துணையும் – ஒரு சிறு தினையின் (ஒரு
குந்துமணி அரிசி போன்றது) அளவுக்குக்கூட
தேரான் – அதனால் பிறர்க்கு
தீமையும் தனக்குப் பாவமும் விளையும் என்னும் புரிதலில்லாமால்
பிறனில் – மற்றவனுடைய மனையாளை
புகல் – விழைந்து பெண்டாடச் செய்வரேல்.
இவ்வதிகாரத்தின் முதல் மூன்று குறள்களில், அறவழி வாழ்பவர்கள்
பிறன்மனை நயக்கமாட்டார் என்றும், அவ்வாறு நயப்பதை விட அறிவின்மையான செயலில்லை என்றும்,
தன்மேல் ஐயம் கொள்ளாதவன் மனைவியை நயந்து கூடுபவர், இறந்தாருக்கு ஒப்பர் என்றும்
கூறி இக்குறளில், அவ்வாறு நயப்பதன் தீமையை ஒரு குந்துமணி அளவாம் தினையளவுகூட
நினையாது, புலனின்பம்மட்டுமே கருதி, மற்றவன் மனைவியை நயந்து, கூடுபவர்கள் எத்துணப்
பெருமையுடையவராயின் அவற்றால் என்ன பயன் என்று வினவுகிறார்.
முன்னரே கூறியபடி, இந்திரன் தேவர்களுக்கே தலைவனாயினும், தவறான
பெண்விழைவால், ஆயிரங்கண்ணனான கதை புராணங்களின் வாயிலாக அறிந்தவொன்று.சமணத்தைச்
சார்ந்தவராகக் கருதப்படும் முனைப்பாடியார் என்பார் இயற்றிய அறநெறிச்சாரப்பாடலொன்று
இவ்வாறு கூறுகிறது.
எத்துணையோ சிறப்புகளிருந்தும், பிறன்மனை நயந்த காரணத்தினாலேயே
தானும், தன்சுற்றமும், குடிகளும் நகரமும் அழிந்துபட, தன்மானமழிந்து மாண்ட இராவணனது
கதையும், சுக்ரீவனது மனைவியை கவர்ந்த வாலி மாண்டகதையும் அறிந்திருக்கிறோம்.
அறனும் அறன் அறிந்த செய்கையும்
சான்றோர்
திறன் உடையன் என்றுரைக்கும் தேகம்
- பிறன் இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்
படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை
இன்றைய குறளாக்கமும், இருவிதமாக இக்கருத்தினை முன்வைக்கிறது.
முதற்குறளில் குணத்தினால், தன்மையினால் என்ன பயன் என்றும், அடுத்த குறளில்
நேரடிப்பொருளான, மற்று எவ்வித உயர்விருப்பினும், மாற்றான் மனை விழந்தோர்க்கு,
அப்பெருமைகளான் என்ன பயன் என்று வினவப்படுகிறது.
இன்றெனது குறள்(கள்):
சற்றேனும் சிந்தியாது
மற்றோன் மனைபுக்கான்
பெற்றியால் என்ன பயன்?
satrREnum sindhiyAdhu matrRon manaipukkAn
petRiyAl enna payan
satrREnum sindhiyAdhu matrRon manaipukkAn
petRiyAl enna payan
சற்றேனும் சிந்தியாது
மற்றோன் மனைபுக்கான்
மற்றுயர்வில் என்ன பயன்?
satrREnum sindhiyAdhu matrRon manaipukkAn
matRuyarvil enna payan
satrREnum sindhiyAdhu matrRon manaipukkAn
matRuyarvil enna payan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam