11th September,
2012
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
(
குறள் 143: பிறனில் விழையாமை அதிகாரம்)
Transliteration:
viLindhArin vERallar mandRa
theLindhAril
thImai purindhozhuguvAr
viLindhArin – they are like dead (who and why?)
vERallar – not otherway (can’t be
considered a living person)
mandRa – just a filler word (acai
sol)
theLindhAril – wife of someone, who
least suspects
thImai – hurt, harm by coveting
(somebody’s wife, who is least suspecting)
purindhu- causing, doing (harm)
ozhuguvAr- who do that (causing)
without remorse(as if their birth right)
Worst of the harms or crime is betrayal. That too when a man
has trusted someone, without doubting,
and if that someone covets the man’s wife, then that someone is
equivalent to a dead person, though he
may be alive in the physical sense.
To recall an incident in Mahabharata, Karna and Duryodhana’s
wife Bhanumathi are playing the game of
dice just to pass time. When Bhanumathi is about to lose the game, she tries to
get up and walkaway without wanting to face the defeat. Karna playfully pulls
her hand and that caused her waist cloth to come off and the string of beads
broken and the beads are on the floor. Dhuryodana who chanced to come there,
instead of getting perturbed, asks calmly, the guilty feeling Karna, if he
should just pick up the beads or string them together. Such was Dhuryodhana’s
confidence in his friend and his wife.
Another story of a Tamil poet, feeling fatigued after a
long trip, reaches his friend, a king, who is not there at the time of this
poet’s arrival. Since the place is known to him, he goes to take rest in the
kings cot. Unsupectingly the wife of the king comes there and she also goes to
sleep next to the poet withour checking who it was. When the King comes back,
he sees this, but is not perturbed. Such was his confidence and trust again in
his wife and the friend.
When such a trust is broken, what would we think of the
person that broke the trust. Only a dead person!
As good as dead are the
adulterers that violate
The trust by a friend,
whose wife they covet
தமிழிலே:
விளிந்தாரின் – இறந்தாருக்கு ஒப்பாவர்
(யார், ஏன்?)
வேறல்லர் – உயிருள்ள, உணர்வுள்ளவராக
கருதப்படார்.
மன்ற – அசைச் சொல்
தெளிந்தாரில் – தன்னை சற்றும்
ஐயப்படாதவரின் மனைவியை மேல்
தீமை - இச்சை
புரிந்து – கொண்டு, அவளை தவறான
வழியில் அடைந்து, தன்னை நம்பியவருக்குத் துரோகம் செய்தல்
ஒழுகுவார் – அத்தவறான பாதையில்
செல்பவர் (அதைத் தவறு என்ற எண்ணமும் இல்லாமல்)
தீமைகளில் மிகப்பெரிய தீமை நம்பிக்கைத்துரோகம். தன்னை
ஐயப்படாதவன் மனைவியைத் தவறான எண்ணத்தோடு பழகி, தன்வசப்படுத்தி கற்பை குலைத்தல்
என்னும் தவற்றைச் செய்பவர், உயிருள்ள மனிதனாகக் கருதப்படமாட்டார், ஒரு இறந்த
பிணமாகத்தான் கருதப்படுவார்.
மகாபாரதக் காட்சியை நினைவுகூற வேண்டும். சொக்கட்டான்
ஆட்டத்தின் மும்முரத்தில் தோற்றுக்கொண்டிருக்கும் துரியோதனன் மனைவி பானுமதி
பாதியிலேயே எழுந்து செல்லமுற்பட, அவள் கையைப்பிடித்து உரிமையுடன் இழுத்துவிட்டான்,
அவள் தன் தங்கைக்கொப்பானவள் என்கிற எண்ணத்தில், கர்ணன், அவளுடைய மேகலையை பற்றி
இழுக்கவும், மேகலையில் கோர்த்திருந்த மணிகள் அறுந்துவிழவும், அங்கே வந்த
துரியோதனின் நம்பிக்கைக்குச் சான்று, அவன் அம்மணிகளைப் பொறுக்கக் குனிந்து, “எடுக்கவோ,
கோக்கவோ” என்று கேட்டது. அதற்கு பாத்திரனாக கர்ணனும் இருந்தான், துரியோதனின்
மனைவியும் இருந்தாள்
வேறு ஒரு செய்தியும் படித்ததாக நினவு! தான் வெளியே
சென்றிருந்த வேளையில், தன் வீட்டுக்கு வந்த நண்பனான புலவன் தன் கட்டிலிலேயே அசந்து
தூங்கிவிட, தன்கணவன்தான்தூங்குகிறான் என்று மனைவியும் அருகினிலேயே உறங்கிவிட,
அதைத் தவறாக எடுத்துக்கொண்ட தமிழ் மன்னனுக்கு தன் மனைவியின் மீதும் நண்பன் மீது
எத்துண நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்? (இது மோசிகீரனாருக்கு சேரல் இரும்பொறை
கவரி வீசிய கதையல்ல).
அத்தகு நம்பிக்கையை குலைப்பவரை இறந்தவாராக பார்க்காமல்,
உயிருள்ளவராக, உணர்வுள்ளவராகக் கருதவியலுமா?
இன்றெனது குறள்:
இறந்தாரே ஐயுரான்
இல்லாள்மேல் இச்சை
இறவாது தீயொழுகு வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam