10th September, 2012
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
(குறள் 142: பிறனில் விழையாமை அதிகாரம்).
(குறள் 142: பிறனில் விழையாமை அதிகாரம்).
Transliteration:
aRankaDai nindRAruL ellAm
piRankaDai
nindRArin pEdhaiyAr il
aRankaDai - placing
vitue as the last priority of life (almost virtueless)
nindRAruL ellAm – among such people (who lust for many
things)
piRankaDai – other man’s wife
nindRArin - those whos lust and seek ways to covet (other man’s
wife)
pEdhaiyAr il – senseless people none
Among all those who have stooped down low from the virtuous
way in their lives, there is none more senseless than the one who covets
someone else’s wife. Among the five
great sins, coveting somebody’s wife is the most sinful and dreaded one. It
will not only destroy the virtue of a person, but his wealth too and perish the
person.
Parimelazagar fixes the “stooping down in virtue” as lust
for low caste women and women that sell their body for money, which does not
seem to be what vaLLuvar has hinted.
Also the world “pleasure” has been likened to illicit pleasure of coitus
or the pleasure of sensory organs by Parimelazhgar. Afterall there are
pleasures that are legitimate and worth having in the world. vaLLuvar has simply implied “stooping down
from virtuous ways”. The usage of “kaDai”
in words “aRankadai” and “piRankaDai” need further understanding. From most commentaries
we can surmise them to mean “below”
(meaning below the standards of virtue) and “the door of” (the door of other’s wife) in those
respective words.
None among those stoop down
in virtues is so foolish
Than one lustfully at the
door of another’s wife, impish
தமிழிலே:
அறன்கடை – அறத்தை தன் வாழ்வில் முதலாக
வைக்காது, இறுதியாகயாக வைத்தல் (அறமில்லாதிருத்தல்)
நின்றாருள் எல்லாம் – அறவழியல்லாது
நிற்கின்றவர்கள் எல்லோருள்ளும்
பிறன்கடை – பிறனுடைய மனவியை
விழைந்து, அவளைச் சேரும் வழியை
நின்றாரின் – பார்த்து அதன்வழி
நிற்கும் இழிந்த மனிதரைப்போல
பேதையார் இல் – அறிவில்லாத பேதையர் இல்லை.
அறத்தினை தன்வாழ்வில் முதன்மையான வாழ்முறையாகக் கொள்ளாது, கீழான,
நெறியற்ற, அறமொழிந்த வாழ்வை வாழ்பவர்களைவிடவும், பிறர் மனைவியின் மேல் இச்சைகொண்டு
அவளைச் சேரும் வழியில் நிற்கின்றவர், மிகவும் இழிந்த மனிதராக, அறிவழிந்த பேதையாகக்
கருதப்படுவர். ஐம்பெரும் அறப்பிழைகளாகக் கருதப்படுபவற்றுள், பிறன் மனைவிழைதலும்
சேருதலும் ஒன்றாகும். இப்பிழையினால் அறக்கேடும், பொருட்கேடும் விளையும்.
பரிமேலழகர் அறன்கடை என்பதை முற்றுமாக காமத்தோடு பொருத்தி
வரைவின் மகளிர் பாலும், இழிகுல மகளிர் பாலும் சென்று இன்பம் நுகர்வது என்கிறார்.
இன்பம் என்னாமல், சிற்றின்பம், அல்லது புலனின்பம் என்று கூறியிருந்தாலாவது
பொருத்தமாக இருந்திருக்கும். வள்ளுவர் அவ்வாறு
கூறியதாகத் தெரியவில்லை. அறநெறி வாழ்வை, வாழ்வில் தன்னுடைய உறுதிபாடாகக் கொள்ளாமல்
அதனின்று கீழான அல்லது அது இன்றி ஒழித்ததைத்தான் குறிக்கிறார். கடை என்ற சொல்லுக்கு
அகராதியிலே பலபொருள்கள் சொல்லியிருந்தாலும், அறன்கடை என்ற சொல்லில் “கீழ்” என்ற
பொருளிலும், பிறன்கடை என்ற சொல்லில் “ பிறன் மனைவி வாயிலிலும்” என்னும் பொருளிலும்
கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்றெனது குறள்(கள்)
அறந்தாழ்ந்து பாவத்துள்
பட்டாருள் பேதை
பிறன்மனையை இச்சிப் பவர்
arathAzndhu pAvaththuL
paTTAruL pEdhai
piRanmanaiyai ichchip pavar
The following verse is to
reflect how most commentaries have interpreted "aRankaDai".
அறந்தாழ்ந்து காமத்துள்
பட்டாருள் பேதை
பிறன்மனையை இச்சிப் பவர்
arathAzndhu kAmaththuL
paTTAruL pEdhai
piRanmanaiyai ichchip pavar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam