செப்டம்பர் 09, 2012

குறளின் குரல் - 150


அதிகாரம் 15: பிறனில் விழையாமை (Faithfulless)
[This chapter talks about not losing the senses in the stupor of lust for wife of somebody else ]
 -------------------------------------------------------------------------------------------------------
9th September, 2012


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
                    ( குறள் 141:  பிறனில் விழையாமை அதிகாரம்).

Transliteration:
piRan poruLaL peTTozhugum pedamai njAlaththu
aRam poruL kanDArkkaN il

piRan poruLaL  - Wife of somebody, (mentioned as an object  over which one man has the ownership)
peTTozhugum  -  loving that somebody desiring her, covet
pedamai  – is considered ignorance and ignoble too
njAlaththu – in this world
aRam poruL – the knowledge of virtue and wealth
kanDArkkaN il -  is not  there for people of that have studied and understood that knowledge

People that are knowledgeable in virtues and attaining material wealth through virtuous ways will not covet someone else’s rightful possession, his wife.

The usage of “piRan poruL” indicates that a woman, a wife was considered a man’s rightful property. The word “peTTal” means avaricious desire (covetous). “peTTu” means “lie”. Hence “peTTu ozhugal” would mean, “Being in a path of lie” that which is not truthful.

Since those who are virtuous and earn thorugh such means would not go the unfaithful route, the contrary meaning that those who are covetous will not be virtuous nor earn through proper means and hence would not have wealth too. ThirumUlar, in his Thirumandhiram, (first thantrA), thus says:  “The youth that has an intimate wife at home, but desire a woman elsewhere is like not eating a ripe and rich jack fruit, but desire an inferior fruit called “Ichhai”.

The great sin of coveting someone’s wife in this world, is not
Entertained by learned, of virtues and wealth, as a thought

தமிழிலே:
பிறன் பொருளாள் – மற்றவொரு ஆடவனுக்கு உரிமையான அவனது மனைவியை**
பெட்டு ஒழுகும் – விழைந்து, தகாதஆசை பெருக்கத்தில் காதலிக்கிற
பேதைமை - அறிவின்மை
ஞாலத்து - இவ்வுலகத்திலே
அறம்பொருள் – அறம் மற்றும் அதன்வழி நின்றடையும் பொருள் தொடர்பான
கண்டார்கண் இல் – கல்வி கற்று ஆராய்ந்து தேர்ந்தவர்களிடம் இல்லை.

அறம் மற்றும் அதன் வழியான பொருள் தொடர்புள்ள கல்வியறிவு கற்று, ஆராய்ந்து எது முறையான விழைவு, அல்லது இல்லை என்ற அறிவு நிரம்பியவர்களிடம், பிறனுக்கு உரிமையான அவனது மனைவியைத் தவறாக விழைவது என்பதில்லை.

பிறன் பொருளாள்” என்ற சொல், வள்ளுவர் வாழ்ந்தகாலத்தில் பெண்ணை ஓர் ஆடவனின் உரிமைப் பொருளாக கொள்ளும் வழக்கிருந்ததைக் காட்டுகிறது. “ பெட்டல்” என்பது ஆசை பெருக்கத்தை குறிக்கிறது. “பெட்டு” என்பது “பொய்” என்ற பொருளுமாதலால், “பொய் ஒழுகல்” என்றும் ஆகிறது. தனக்கு உரிமையில்லாத ஒன்றை விழைவது உண்மை விழைவில்லை என்பதால், அதை “பொய் ஒழுகலாக” வள்ளுவர் குறித்திருக்கலாம்.

அறமும் பொருள் பற்றிய அறிவு உள்ளவர்கள் அத்தவறை செய்யார் என்றதால், அத்தவறைச் செய்தவர்களிடம் அறமிருக்காது அவர்களிடம் பொருளும் சேராது என்பதும் பெறப்படுக்கிறது. திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரத்தில் பிறன்மனை நயவாமை பற்றி இவ்வாறு கூறுகிறது.

“ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே”

இன்றெனது குறள்(கள்):
மாற்றார் மனைவிழை மாபிழை மாநிலத்தில்
போற்றுமறம் கொண்டார்க் கிலை
mAtrAr manaivizhai mApizha mAnilaththil
pOtRumaRam koNdArk killai

மாற்றார் மனைவிழை மாபிழை மாநிலத்தில்
போற்றுபொருள் நல்லறத்தார்க் கில்
mAtrAr manaivizhai mApizha mAnilaththil
pOtruporuL nallaraththArk kil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...