8th Sep, 2012
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
(குறள் 140: ஒழுக்கமுடைமை அதிகாரம்).
Transliteration:
ulagaththOdu oTTa ozhugal
palakatRum
kallAr aRivilAdhAr
ulagaththOdu oTTa - following the righteous path setforth by
virtuous elders in this world.
ozhugal – and live by that
palakatRum – even if well versed and
knowledgeable by reading many books
kallAr - not learned (who has not learnt how to live
by the righteous path of the world)
aRivilAdhAr - are not learned and are foolish
The previous verse talked about the words that we speak
being righteous and how people of righteous conduct won’t utter words that are
not reflective of their conduct; in this verse vaLLuvar talks about the
importance of deeds depicting righteous conduct. Those who have not learned the righteous path
left to us by our learned elders for orderly society though have superficially
learned many scriptures are as good as fools.
Valluvar has expressed a little bit of anger and
frustration in this verse, which is not his personal one. After teaching about
the righteous conduct codified and followed by our elders, in many ways, if a
person strays away or does not even follow, what can we make out of that
person? Even if that person has learned many scriptures and books of knowledge,
we need to consider the person as one devoid of intellect. vaLLuvar does not
even say that they are of lesser intellect.
In a later chapter of “Having intellect” he says the
same by this kural. “evvadhu uRaivadhu ulagam
– ulagaththODu avvadhu uRaivadhu aRivu”. The difference is here it is given as
the advice.
“Though
learned in many scriptures, a person when does not stead
By the righteous ways of the world, is of no intellect
is how he placed “
தமிழிலே:
உலகத்தோடு ஒட்ட – உலகில் அறநெறியாளர்கள்
ஒழுகி, வரையரை செய்துள்ளவற்றை ஒட்டி
ஒழுகல் – அவ்வறநெறிகளின் நின்று
வாழுதல்
பலகற்றும் – பலவித நூல்களில்
தேர்ந்தவராயினும்
கல்லார் – கல்லாதவர் (அறநெறி
வாழ்வை) – ஒழுகல் கல்லார் என்று படிக்கவேண்டும்
அறிவிலாதார் – அறிவென்னும் பொறி
இல்லாதவராகக் கருதப்படுவர்
சொல்லுக்கு வேண்டிய ஒழுக்கத்தைப்பற்றி கூறிய வள்ளுவர்,
இக்குறளில் செயலில் இருக்கவேண்டிய ஒழுக்கத்தைப் பற்றி கூறுகிறார். உலகத்தில் கற்றறிந்த முன்னோர்கள் வகுத்துச்
சென்ற ஒழுக்க நெறிகளின்படி தன்வாழ்வில் வாழக் கற்காதவர் (ஒழுகல் கல்லார்), பல
நூல்களைக்கற்றுத் தேர்ந்தவராயினும், அறிவு இல்லாதவராகவே கருதப்படுபவர்.
இக்குறளில் தெரியும் கோபம் கலந்த சலிப்பு வள்ளுவருக்கு
தனிபட்ட முறையில் ஏற்பட்ட ஒன்றல்ல. ஒழுக்கத்தை பலவழிகளில் சொன்னபிறகும், ஒருவர்
உலகில் சான்றோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டு, பலராலும்
பின்பற்றப்படும் ஒழுக்கக்கோட்பாடுகளை, தான் கடைபிடிக்கவில்லை என்றால் என்ன
சொல்வது? அதுவும் அவர்கள் பல நூல்களைக் கற்றவராயிருந்தால், அவர்கள் படித்த
முட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும். வள்ளுவர் சற்றும் தயங்காது அவர்களை அறிவு
இருந்து கெட்டவர்கள் என்றோ, குறைமதியினர் என்றோ கூறாமல், அறிவென்னும் புலன்
இல்லாதவர்கள் என்று கூறுவதினால் அவர்களை ஓரறிவிலிருந்து, ஐந்தறிவு உள்ள மற்ற
உயிரினமாகக்கூட கூறவிரும்பாத சினம் தெரிகிறது.
நற்றிணைப்பாடல் இதை, “நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும்
பாடு அறிந்து ஒழுகலும்” என்கிறது. பின்னால்
வரப்போகும் அறிவுடமை அதிகாரத்தில் “ எவ்வ துறைவ
துலகம் – உலகத்தோ டவ்வ துறைவ தறிவு” என்று அறிவுறுத்தலாக கூறுவார் வள்ளுவரே!
இன்றெனது குறள்:
கல்லாத மூடராம்
கற்றிருந்தும் பூமியிலே
செல்லா வழியொழுகி னார்
kallAdha mUDarAm
katRirundhum bUmiyilE
sellA vazhiyozhuginAr
I have copied what Dr. Veerapandian wrote to me today re. this kuraL:
பதிலளிநீக்கு-----------------------------------------------
I think " ulagaththOdu oTTa - following the righteous path setforth by virtuous elders in this world." need review.
"the righteous path setforth by virtuous elders in this world." must be shifted to "ozhugal "
"ulagaththOdu oTTa" is contact with the world as it is with all positives and negatives. To develop oTTa with ulagaththOdu following the righteous path set forth by virtuous elders in this world is a challenge , specially to one who associates with the forums/movements in the ulagam.
Failure in the challenge may lead to loosing one's life or miseries or compromises that will violate ozhugal. When we meet , remind me , we need to discuss it.
To a persion confined to his job, family , limited social circle , it may not be that much challenging.