செப்டம்பர் 05, 2012

குறளின் குரல் - 146


5th Sep, 2012

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
                    (குறள்137:  ஒழுக்கமுடைமை அதிகாரம்).

Transliteration:
Okzhukkaththin eidhuvar mEnmai izhukkaththin
Eidhuvar eidhAp pazhi

Okzhukkaththin – Being a person of righteous conduct
eidhuvar  - will attain
mEnmai – glory and placed high
izhukkaththin – Not a person of right conduct (or simply undesirable conduct )
Eidhuvar – will attain
eidhAp pazhi – disgrace, dishonor, ignominy that should not be attained

In the order of things said about righteous conduct, vaLLuvar talks about the greatness of righteous conduct,  why it is imperative for everyone,  what  disgrace will result devoid of that, the firmness of mind as well as how and why the intellectuals will keep such conduct, and the how wealth will come to the person of such conduct etc,. 

Finally he puts it in a simple dichotomic statement of having glory of greatness for the righteous conduct and disgrace that should not be attained, being devoid of it.

Typical of vaLLuvar to have this sequencing of talking about any virtue from different angles of  (a) the virtue, (b) its importance (c) greatness of having the virtue (d) disgrace of not having the virtue (e) citing who will  have this virtues (f) an example what happens when a particular person or group does not have this virtue (g), dichotomy related to virtue and a few more stressing the importance of the virtue.

It is important to see how his mind worked and his understanding of the nature of different people. Samething said in different ways would appeal to different people as persons compare what is said based on their personal experiences when they analyze something said and internalize them.

“Honor and glory to the persons of righteous conduct
  Disgrace and shame unwanted befall for misconduct”     
                                                                                                                                                                                                  
தமிழிலே:
ஒழுக்கத்தின் – ஒழுக்கநெறி நின்று வாழுமொருவர்
எய்துவர் - அடைவர்
மேன்மை – உயர்வான வாழ்வும், சமுதாயத்தில் மதிப்புமிக்க நிலையையும்
இழுக்கத்தின் – ஒழுக்கநெறி நில்லாத இழிந்த நிலையினர்
எய்துவர் - அடைவர்
எய்தாப் பழி – எவரும் அடையக்கூடாத பழிக்கப்படும் தாழ்வான நிலையை

முதலில் ஒழுக்கமுடைமையின் சிறப்பு, இன்றியமையாமை, அஃதின்மையின் இழிவு இவற்றைக்கூறி பின்பு, ஒழுக்கமுடையவர்களின் மனவுறுதி, செல்வம் இவற்றையும் கூறி, இக்குறளில் உறுதிபட ஒழுக்கத்தினால் மேன்மையும், அஃதின்மையினால் இழிவும் என்று கூறுகிறார். 

குணநலன் கூறி, அஃதில்லாமையின் தீமையைக்கூறி, அக்குணநலனில் ஒழுகுவாரின் அறிவு நிலை கூறி, பின்பு இறுதியாக குணநலனால் மேன்மை, அஃதின்மையினால் கீழ்மை என்று கூறுவது ஏறக்குறைய எல்லா அதிகாரங்களிலும் வள்ளுவர் கையாளும் முறை.

அந்த முறையின் வரிசையிலே இக்குறள் ஒருவர் ஒழுக்கநெறிகளால் மேன்மையும், இல்லாத இழிவான நடத்தையினால், அடையக்கூடாத பழிக்கப்படும் நிலைக்கு ஆளாவதையும் கூறுகிறது. இதே கருத்தை பழமொழிச் செய்யுள், “இழுக்கத்தின் மிக்க இழிவில்லை – இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” என்கிறது.

இன்றெனது குறள்:
ஒழுக்கொழுக மேன்மை அதுவழுக்கின் கீழாம்
இழுக்கப் பழியே தரும்

Ozukozhuga mEnmai adhuvazhukkin kIzhAm
Izhukkap pazhiyE tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...