6th Sep, 2012
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(குறள் 138: ஒழுக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
nandRikku viththAgum nallozhukkam
thIyozhukkam
endRum iDumbaith tharum
nandRikku – For good things to come
viththAgum -
becomes the seed (what?)
nallozhukkam – good, righteous discipline and conduct
thIyozhukkam – bad, poor discipline and
conduct
endRum – always,
iDumbaith – misery, pain
tharum – gives
Once again an easy and obvious
verse, but the way it is said makes it interesting read. Those who sow good and
righteous conduct in their lives reap goodness returned in plenty measure as
the bountiful crop. Those who abstain from good conduct and embrace indiscipline
and bad conduct will only face misery, difficulty and pain henceforth. Since
the bad conduct and indiscipline give misery and pain, the contrary of good
discipline and conduct must bring happiness and elation.
The word used in this verse
as “thIyozhukkam” is an oxymoron.
How can there be bad orderliness? We have only disorderliness. We don’t say bad
discipline. We say indiscipline. If the word is “thI ozhugal” then it makes perfect sense. It means that “when one
who follows indicipline”.
In todays explaining verse,
I have used the sowing to goodness, crop to misery to accentuate the cause
effect aspect. Seeding the land is a small event in good faith of a great crop,
which has several natural conditions inorder for the good crop to fructify. Crop
of misery is guaranteed if one were to be indiciplined is what I have tried to
indicate. Seeding process is for a possible outcome where as reaping of bad is
said with absolute surety.
Old adage of “what you sow is
what you reap” has to be borne in mind too. Another saying in Tamil, which puts
this cause and effect as “paNNiya payiril, puNNiyam theriyum”
Seed, the discipline and righteous conduct
for goodness
Crop or is it crap the outcome of stray from righteousness?
தமிழிலே:
நன்றிக்கு – நன்மை விளைய
வித்தாகும் – விதையாக இருக்கும்
நல்லொழுக்கம் – நல்ல நெறிமுறைக்
கட்டுப்பாடுகள்
தீயொழுக்கம் – அல்லாத தீவழிகளும், கட்டுப்பாடுகளில்லாத
வாழ்க்கையும்
என்றும் - எந்நாளும்
இடும்பைத் – துன்பத்தையும் அதனால் வருத்தத்தையும்
தரும் - தந்துவிடும்
மீண்டுமொரு உள்ளங்கை
நெல்லிக்கனி குறள். ஆனால் சொல்லிய விதம் அழகு. நல்லொழுக்க நெறிகளை தன் வாழ்வில்
விதைத்தவர்களுக்கு, நன்மையென்கிற பயிர் விளையும். தீய பழக்கங்களில் ஒழுகி வாழ்வது
என்றும் துன்பத்தையும் அதனால் உடல் மற்றும் மனவருத்தங்களைத் தந்துவிடும். தீய
வழக்கங்கள், பழக்கங்கள் தீமையைத் தரும் என்றதால், நல்ல பழக்க வழக்கங்கள்
இன்பத்தைத் தருவன என்று கொள்ளலாம்.
தீமையான ஒழுக்கம் என்பதில்
ஒழுக்கம் என்னும் சொல் ஏனோ பொருந்தவில்லை, ஒட்டவில்லை. “தீயொழுகல்” என்பது சரியாக இருந்திருக்கும். “தீவழி ஒழுகுதல்” என்பது “தீய
வழி நடப்பது” என்ற பொருளை தந்திருக்கும்.
இன்று எழுதிய குறளில் ஒழுக்கமே
நன்மைக்கு வித்தென்று சொல்லி, தீயொழுக்கில் தீமையே பயிராய் விளையுமென்று
கூறியிருக்கிறேன்.
பொதுவழக்கில் வழங்கும்
தொல்மொழி “விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?” என்பதாம். “பண்ணிய பயிரில்
புண்ணியம் தெரியும்” என்றது அதனால்தான்.
இன்றெனது குறள்:
ஒழுக்கமே நன்மைக்கோர் வித்தாம் – விளையும்
வழுக்கிடின் துன்பப் பயிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam